2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்

← 2008 25 நவம்பர் முதல் 20 டிசம்பர் 2014 வரை 2024 →

அனைத்து 87 இடங்களும் சட்டமன்றம்
44 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
பதிவு செய்தோர்73,16,946
வாக்களித்தோர்65.91% (4.75%)
  Majority party Minority party Third party
 
தலைவர் முப்தி முகமது சயீத் நிர்மல் குமார் சிங் உமர் அப்துல்லா
கட்சி சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி பா.ஜ.க ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தலைவரின் தொகுதி அனந்த்நாக் பில்லவர் பீர்வா, சோனாவர் ("தோல்வி")
முந்தைய தேர்தல் 21 11 28
வென்ற தொகுதிகள் 28 25 15
மாற்றம் 7 14 13
மொத்த வாக்குகள் 10,92,203 11,07,194 10,00,693
விழுக்காடு 22.7% 23.0% 20.8%
மாற்றம் 7.31% 10.55% 2.27%

  Fourth party
 
தலைவர் குலாம் நபி ஆசாத்
கட்சி இதேகா
முந்தைய தேர்தல் 17
வென்ற தொகுதிகள் 12
மாற்றம் 5
மொத்த வாக்குகள் 8,67,883
விழுக்காடு 18.0%
மாற்றம் 0.29%


முந்தைய முதல் அமைச்சர்

உமர் அப்துல்லா
ஜகதேமா
(இதேகா உடன் கூட்டணியில்)

முதல் அமைச்சர் -தெரிவு

முப்தி முகமது சயீத்
மஜக
(பாஜக உடன் கூட்டணியில்)

2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நவம்பர் 25 முதல் டிசம்பர் 30 வரை நடைபெற்றது. சார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலும் இதனுடன் இணைந்து நடைபெற்றது.அதன் முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2015, சனவரி 1 அன்று முடிவடைகிறது. இத்தேர்தலில் 7,225,559 மக்கள் 87 சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்வர். 87இல் 7 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். நிழற்பட அடையாள அட்டை வழங்கப்பட்ட வாக்காளர்கள் 91% ஆகும். 10,015 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் யாருக்கும் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்ற விருப்பத் தேர்வும் இருந்தது. தேர்தல் முடிவு டிசம்பர் 23 அன்று வாக்குபதிவு எண்ணிக்கையன்றே அறிவிக்கப்பட்டது. மூன்று தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் தாள் (காகிதம்) மூலம் வாக்கு செலுத்தும் வசதியும் இருக்கும். [1][2]உமர் அப்துல்லா பீர்வாக், சோனாவார் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டனர் [3] 2008இல் உமர் அப்துல்லா கான்டர்பால் தொகுதியில் வென்றார். [4]

வாக்குப்பதிவு[தொகு]

5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது .அவை பின்வருமாறு:

5 கட்டங்களா நடைபெறும் வாக்குபதிவு நிறங்களாலும் எண்களாலும் காட்டப்பட்டுள்ளது
தேதி தொகுதிகள் வாக்கு செலுத்தியோர்
நவம்பர், 25 15 71.28%
டிசம்பர், 2 18 71% [5][6]
டிசம்பர், 9 16 58%[7][8]
டிசம்பர், 14 18 49%[9][10]
டிசம்பர், 20 20 76% [11]
மொத்தம் 87 65%
மூலம்:[12][13]

தேர்தல் கட்டங்கள்[தொகு]

இம்மாநிலத்தின் 87 தொகுதிகளுக்கும் தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் லே மாவட்டத்தின் இரு தொகுதிகளுக்கும், கார்கில் மாவட்டத்தின் இரு தொகுதிகளுக்கும், கிஷ்ட்வார் மாவட்டத்தின் இரு தொகுதிகளுக்கும், தோடா மாவட்டத்தின் இரு தொகுதிகளுக்கும், ரம்பன் மாவட்டத்தின் இரு தொகுதிகளுக்கும், கண்டேர்பல் மாவட்டத்தின் இரு தொகுதிகளுக்கும், பண்டிபோரா மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுக்கும் என மொத்தம் 15 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் ரியாசி மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுக்கும், உதம்பூர் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுக்கும், பூன்ஞ் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுக்கும், குப்வாரா மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளுக்கும், குல்கம் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கும் என மொத்தம் 18 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டத்தில் பாரமுல்லா மாவட்டத்தின் ஏழு தொகுதிகளுக்கும், புடகம் மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளுக்கும், புல்வாமா மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கும் என மொத்தம் 16 தொகுதிகளுக்கும், நான்காம் கட்டத்தில் ஸ்ரீநகர் மாவட்டத்தின் எட்டு தொகுதிகளுக்கும், அனந்தநாக் மாவட்டத்தின் ஆறு தொகுதிகளுக்கும், சோபியான் மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளுக்கும், சம்பா மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளுக்கும் என மொத்தம் 18 தொகுதிகளுக்கும், ஐந்தாம் கட்டத்தில் சம்மு மாவட்டத்தின் பதினொன்று தொகுதிகளுக்கும், கதுவா மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளுக்கும், ரஜௌரி மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கும் என மொத்தம் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஒமர் அப்துல்லா[தொகு]

2008-இல் முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா, அப்துல்லா குடும்பத்தாரின் கோட்டை என கருதப்படும் காடர்பால் தொகுதியில் போட்டியிடாமல் இம்முறை சோனவார், பீர்வாக் என்ற இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சோனவாரில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரிடம் 4,783 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றார். பீர்வாக் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 910 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து வென்றார்.[14]காடர்பால் தொகுதியை ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் இசுவாக் அகமது சேக் 597 வாக்குகள் வேறுபாட்டில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரை தோற்கடித்து வென்றார்.[15]

தேர்தல் அட்டவணை[தொகு]

தேர்தல் நிகழ்வு முதல் கட்டம் இரண்டாம் கட்டம் மூன்றாம் கட்டம் நான்காம் கட்டம் ஐந்தாம் கட்டம்
வேட்புமனு அளிக்கும் நாள் அக்டோபர் 29 நவம்பர் 07 நவம்பர் 14 நவம்பர் 19 நவம்பர் 26
வேட்புமனு அளிக்க இறுதி நாள் நவம்பர் 05 நவம்பர் 14 நவம்பர் 21 நவம்பர் 26 டிசம்பர் 03
வேட்புமனுக்கள் ஆராய்தல் நவம்பர் 07 நவம்பர் 15 நவம்பர் 22 நவம்பர் 27 டிசம்பர் 04
வேட்புமனுக்களை
விலக்கிக்கொள்ள இறுதி நாள்
நவம்பர் 10 நவம்பர் 17 நவம்பர் 24 நவம்பர் 29 டிசம்பர் 06
வாக்குபதிவு நாள் நவம்பர் 25 டிசம்பர் 02 டிசம்பர் 09 டிசம்பர் 14 டிசம்பர் 20
வாக்குகளை எண்ணும் நாள் டிசம்பர் 23 டிசம்பர் 23 டிசம்பர் 23 டிசம்பர் 23 டிசம்பர் 23

தேர்தல் முடிவுகள்[தொகு]

[உரை] – [தொகு]
கட்சி கொடி பெற்றுள்ள இடங்கள் முன்னர் பெற்ற இடங்கள் +/–
தேசிய மாநாட்டு கட்சி 15 28 -13
மக்களின் சனநாயக கட்சி 28 21 +7
இந்திய தேசிய காங்கிரசு 12 17 -5
பாரதிய ஜனதா கட்சி 25 11 +14
சம்மு காசுமீர் தேசிய சிறுத்தைகள் கட்சி 0 3 -3
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 1 1 0
மக்களின் சனநாயக முன்னனி 0 1 -1
சம்மு காசுமீர் மக்களின் சனநாயக முன்னனி 1 0 +1
சம்மு காசுமீர் மக்களின கூட்டமைப்பு 2 0 +2
சம்மு காசுமீர் மக்களின் சனநாயக தேசிய கட்சி 0 1 -1
சுயேட்சைகள் 3 4 -1
மொத்தம்l (வாக்களித்தவர்கள் 60.5%) 87 87
மூலம்: Electoral Commission of India[தொடர்பிழந்த இணைப்பு]

பாசக சம்மு பகுதியில் மட்டுமே வென்றது. மக்களின் சனநாயக கட்சி காசுமீர் பகுதியில் 25 இடங்களிலும், சம்மு பகுதியில் மூன்று இடங்களிலும் வென்றது. தேசிய மாநாட்டு கட்சி காசுமீர் பகுதியில் 12 இடங்களிலும், சம்மு பகுதியில் மூன்று இடங்களிலும் வென்றது. காங்கிரசு லடாக் பகுதியில் மூன்று இடங்களிலும், காசுமீர் பகுதியில் நான்கு இடங்களிலும், சம்மு பகுதியில் ஐந்து இடங்களிலும் வென்றது. காங்கிரசே மாநிலத்தின் மூன்று பகுதிகளிலும் வென்ற அரசியல் கட்சியாகும். [16]

வாக்குகள் விழுக்காடு[தொகு]

3 விழுக்காட்டுக்கு மேல் பெற்ற கட்சிகளின் விபரம்.

கட்சி வாக்குகள் % பெற்ற வாக்குகள்
பாசக 23% 11,07,194
மக்களின் சனநாயக கட்சி 22.7 % 10,92,203
தேசிய மாநாட்டு கட்சி 20.8 % 10,00,693
இந்திய தேசிய காங்கிரசு 18 % 8,67,883
கட்சி சாராதவர்கள் (சுயேச்சை) 6.8 % 3,29,881

ஆட்சி[தொகு]

மக்களின் சனநாயக கட்சி , பாசக என்று எக்கட்சியும் ஆட்சியமைக்க முன்வராததால் வெள்ளிக்கிழமை அன்று சம்மு காசுமீர் ஆளுநர் என். என். வோரா குடியரசு தலைவர் ஆட்சியை பரிந்துரைத்தார். குடியரசு தலைவரும் அதை ஏற்றுக்கொண்டதால் சம்மு காசுமீர் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை அன்று குடியரசு தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டது. விதிமுறைப்படி அடுத்த ஆட்சி 2015, சனவரி 19 அன்று பதவியேற்க வேண்டும்.

15 உறுப்பினர்களை உடைய தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா மக்களின் சனநாயக கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக கூறியும்[17] அக்கட்சி ஆட்சியமைக்காததால் குடியரசு தலைவர் ஆட்சிக்கு அக்கட்சியே காரணம் என்று குற்றம் சாட்டினார். [18]

மசக தலைவர் முப்தி முகமது சையது பிப்ரவரி 28, 2015 அன்று முதல்வராக பதவியேற்றார்[19]. மசகவானது பாசகவுடன் கூட்டணி வைத்து அரசமைத்துள்ளது. [20]பாசகவும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது.

முப்தி முகமது சையது அனந்நாக் தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் இலால் அகமது சாவை 6,028 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Polls from Nov 25; results on Dec 23". Archived from the original on 2014-11-12. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.
 2. "5-PHASE POLLS IN J&K, J'KHAND FROM NOV 25".
 3. "Beerwah, Sonawar will be made model constituencies: Omar Abdullah". ibnlive. Archived from the original on 2014-11-11. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 4. "J-K Assembly polls: Omar Abdullah to contest from Sonawar, Beerwah". indiatoday. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2014.
 5. "71% polling in 2nd phase in Jammu and Kashmir polls". dnaindia. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2014.
 6. "Assembly polls 2nd phase: 71 pc voting in J&K, 65.46 pc in Jharkhand". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2014.
 7. "Polls in the Shadow of Terror: 58% People Vote in Jammu and Kashmir". NDTV. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2014.
 8. "Braving bullets 58% cast ballot in Jammu and Kashmir, 61% voting in Jharkhand in third phase of elections". dna India. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2014.
 9. "Phase 4 of Assembly Elections: 49 Per Cent Turnout in Jammu and Kashmir, Jharkhand Registers 61 Per cent". NDTV. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2014.
 10. "Fourth phase: 49% vote cast in J&K, 61% in Jharkhand". deccanherald. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2014.
 11. "Jammu and Kashmir Registers Highest Voter Turnout in 25 Years, Jharkhand Breaks Records". ndtv. பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2014.
 12. turnout in J&K from November 17, Rediff India, 2008-10-19, accessed on 2008-12-30
 13. J&K assembly polls: Voters defy separatists' election boycott call, 71.28% turnout in first phase, Rediff India, 2008-12-24
 14. "J&K results: Omar Abdullah loses Sonawar to PDP, wins from Beerwah". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2014.
 15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-25. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.
 16. http://www.tribuneindia.com/news/nation/hung-assembly-in-j-k-pdp-frontrunner-with-28-seats/21834.html
 17. "Unconditional Support Offer to PDP Remains Unchanged, Says National Conference". NDTV. பார்க்கப்பட்ட நாள் 10 சனவரி 2015.
 18. "PDP, BJP talks stuck, Governor's rule imposed in Jammu-Kashmir". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 10 சனவரி 2015.
 19. "PDP's Mufti Mohammed Sayeed takes oath as J&K CM with full ministerial team". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 20. "PDP-BJP alliance brings together villages that voted differently in Kashmir". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உசாத்துணை[தொகு]