101955 பென்னு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
101955 பென்னு
101955 பென்னுவின் ரேடார் படிமம் (நன்றி: அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடம், JPL)[1][2]
கண்டுபிடிப்பு and designation
கண்டுபிடித்தவர்(கள்) லிங்கன் புவிக்குக் கிட்டவான சிறுகோள் ஆய்வு
கண்டுபிடிக்கப்பட்ட இடம் லிங்கன் ஆய்வுகூடம் ETS
கண்டுபிடிப்பு நாள் 11 செப்ப்டம்பர் 1999
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் பென்னு
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் 101955 பென்னு
வேறு பெயர்கள்[3]1999 RQ36
சிறு கோள்
பகுப்பு
அப்பல்லோ · புவியருகு · PHA
காலகட்டம்31 July 2016 (JD 2457600.5)
சூரிய சேய்மை நிலை1.3559 AU (202.84 Gm)
சூரிய அண்மை நிலை 0.89689 AU (134.173 Gm)
அரைப்பேரச்சு 1.1264 AU (168.51 Gm)
மையத்தொலைத்தகவு 0.20375
சுற்றுப்பாதை வேகம் 1.20 yr (436.65 d)
சராசரி சுற்றுப்பாதை வேகம் 28,000 metres per second (63,000 mph)
சராசரி பிறழ்வு 101.7039°
சாய்வு 6.0349°
Longitude of ascending node 2.0609°
Argument of perihelion 66.2231°
சராசரி ஆரம் 246±10 m[1]
நிலநடுக்கோட்டு ஆரம் 275±10 m[1]
நிறை 6.0×1010 kg[5] to 7.76×1010 kg
அடர்த்தி 1.26 ± 0.070 g/cm3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்10 micro-g[6]
சுழற்சிக் காலம் 4.288 h (0.1787 d)
அச்சுவழிச் சாய்வு 176 ± 2°[7]
வடிவியல் ஒளி திருப்புத்திறன்0.046[8]
மேற்பரப்பு வெப்பநிலை
   Kelvin[9]
   Fahrenheit
சிறுமசராசரிபெரும
236259279
-34.66.842.8
Spectral typeB[8]
விண்மீன் ஒளிர்மை 20.9

101955 பென்னு (101955 Bennu)[10] என்பது அப்பல்லோ கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரிம-வகை சிறுகோள் (asteroid) ஆகும். இது 1999 செப்தெம்பர் 11 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது புவியைத் தாக்கவல்ல இரண்டாவது பெரிய விண்பொருளாக பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோல் மூலம் இனங்காணப்பட்டுள்ளது.[11] 22-ம் நூற்றாண்டில் இச்சிறுகோள் புவியைத் தாக்குவதற்கு 2700-இல்-1 வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.[12] அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் ஒசைரிசு-ரெக்சு விண்கலம் இச்சிறுகோளை இலக்கு வைத்தே அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இவ்விண்கலம் சிறுகோளின் மாதிரிகளை மேலதிக ஆய்விற்காக பூமிக்கு எடுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[13][14][15][16]

101955 பென்னுவின் சராசரி விட்டம் அண்ணளவாக 492 மீட்டர்கள் ஆகும். அரிசிபோ வானிலை ஆய்வுகூடத்தின் வான்கோள் ரேடார், கிளாட்ஸ்டன் தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் ஆகியவை இச்சிறுகோளை மிகத்துல்லியமாக ஆராய்ந்து வருகிறது.[1][2][17] பென்னு சிறுகோள் பம்பரத்தை ஒத்த கிட்டத்தட்ட நெட்டுருளை வடிவத்தை ஒத்தது.[12]

2018 திசம்பர் 3 இல், ஒசைரிசு-ரெக்சு விண்கலம் இரண்டு ஆண்டுகள் பறப்பின் பின்னர் பென்னுவை அடைந்தது.[18] இது சிறுகோளைச் சுற்றிவந்து, அதன் மாதிரிகளை சேகரிக்கத் தகுந்த இடங்களைத் தேர்ந்தெடுக்க பென்னுவின் மேற்பரப்பை விரிவாக ஆராய்ந்து. இதன் ஆய்வுகள் பென்னுவின் திணிவு, மற்றும் அதன் பரம்பலைக் கணிக்க ஆய்வாளர்களுக்கு உதவின.[19]

2019 சூன் 18 இல், ஒசைரிசு-ரெக்சு விண்கலம் மென்னுவின் மேற்பரப்பில் இருந்து 600 மீட்டர் தூரத்தை அணுகியதாக நாசா அறிவித்தது.[20]

2020 அக்டோபர் 20 இல், இவ்விண்கலம் தனது நீட்டிக்கக்கூடிய கைகளைக் கொண்டு பென்னுவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி மாதிரிகளைச் சேகரித்தது.[21]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Nolan, M. C.; Magri, C.; Howell, E. S.; Benner, L. A. M.; Giorgini, J. D.; Hergenrother, C. W.; Hudson, R. S.; Lauretta, D. S. et al. (2013). "Shape model and surface properties of the OSIRIS-REx target Asteroid (101955) Bennu from radar and lightcurve observations". Icarus 226 (1): 629–640. doi:10.1016/j.icarus.2013.05.028. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-1035. Bibcode: 2013Icar..226..629N. 
  2. 2.0 2.1 "Goldstone Delay-Doppler Images of 1999 RQ36". Asteroid Radar Research. Jet Propulsion Laboratory. Archived from the original on 2016-11-18. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  3. [1]
  4. "JPL Small-Body Database Browser: 101955 Bennu (1999 RQ36)" (2013-01-20 last obs.). Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.
  5. "101955 1999 RQ36: Earth Impact Risk Summary". NASA. Jet Propulsion Laboratory. August 5, 2010. Archived from the original on 9 பிப்ரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 24 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "One of NASA's cleanest spacecraft ever is ready to fly". Spaceflight Now. Spaceflight Now Inc. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
  7. Hergenrother, CW; Barucci, MA; Barnouin, O (16 Sep 2014). The Design Reference Asteroid for the OSIRIS-REx Mission Target (101955) Bennu. http://arxiv.org/abs/1409.4704. பார்த்த நாள்: 20 August 2016. 
  8. 8.0 8.1 "(101955) Bennu". NEODyS. University of Pisa. பார்க்கப்பட்ட நாள் 1 December 2015.
  9. "Planetary Habitability Calculators". Planetary Habitability Laboratory. University of Puerto Rico at Arecibo. Archived from the original on 24 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. Murphy, Diane (1 May 2013). "Nine-Year-Old Names Asteroid Target of NASA Mission in Competition Run By The Planetary Society". The Planetary Society. http://www.planetary.org/press-room/releases/2013/nine-year-old-names-asteroid.html. பார்த்த நாள்: 20 August 2016. 
  11. "Sentry Risk Table". NASA/JPL Near-Earth Object Program Office. Archived from the original on 2016-09-11. பார்க்கப்பட்ட நாள் 2014-03-26. பரணிடப்பட்டது 2013-11-25 at the வந்தவழி இயந்திரம்
  12. 12.0 12.1 Lauretta, D. S.; Bartels, A. E. et al. (April 2015). "The OSIRIS-REx target asteroid (101955) Bennu: Constraints on its physical, geological, and dynamical nature from astronomical observations". Meteoritics & Planetary Science 50 (4): 834–849. doi:10.1111/maps.12353. 
  13. Corum, Jonathan (8 September 2016). "NASA Launches the Osiris-Rex Spacecraft to Asteroid Bennu". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/interactive/2016/09/08/science/space/nasa-osiris-rex-launch.html. பார்த்த நாள்: 9 செப்தெம்பர் 2016. 
  14. Chang, Kenneth (8 செப்தெம்பர் 2016). "The Osiris-Rex Spacecraft Begins Chasing an Asteroid". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2016/09/09/science/nasa-launches-osiris-rex-spacecraft-to-retrieve-asteroid-pieces.html. பார்த்த நாள்: 9 செப்தெம்பர் 2016. 
  15. Brown, Dwayne; Neal-Jones, Nancy (31 March 2015). "RELEASE 15-056 – NASA's OSIRIS-REx Mission Passes Critical Milestone". நாசா. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015.
  16. "NASA to Launch New Science Mission to Asteroid in 2016". NASA. 25 May 2011. பார்க்கப்பட்ட நாள் 21 May 2013.
  17. Hudson, R. S.; Ostro, S. J.; Benner, L. A. M.. "Recent Delay-Doppler Radar Asteroid Modeling Results: 1999 RQ36 and Craters on Toutatis". Bulletin of the American Astronomical Society (American Astronomical Society) 32: 1001. Bibcode: 2000DPS....32.0710H. 
  18. Chang, Kenneth (December 3, 2018). "NASA's Osiris-Rex Arrives at Asteroid Bennu After a Two-Year Journey — The spacecraft now begins a close study of the primitive space rock, seeking clues to the early solar system.". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/12/03/science/osiris-rex-bennu-asteroid-arrival.html. 
  19. Plait, Phil (2018-12-04). "Welcome to Bennu!". SYFY WIRE (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-05.
  20. "NASA captures closest-ever photo of massive asteroid Bennu flying near Earth". Sky News. 18 June 2019. https://news.sky.com/story/nasa-captures-closest-ever-photo-of-massive-asteroid-bennu-flying-near-earth-11744332. 
  21. Chang, Kenneth (20 October 2020). "Seeking Solar System’s Secrets, NASA’s OSIRIS-REX Mission Touches Bennu Asteroid - The spacecraft attempted to suck up rocks and dirt from the asteroid, which could aid humanity’s ability to divert one that might slam into Earth.". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2020/10/20/science/osiris-rex-mission.html. பார்த்த நாள்: 21 October 2020. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பென்னு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=101955_பென்னு&oldid=3906901" இலிருந்து மீள்விக்கப்பட்டது