ஹேமா கமாங்
ஹேமா கமாங் ହେମା ଗମାଙ୍ଗ | |
---|---|
![]() | |
ஹேமா கமாங் | |
13வது நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1999-2004 | |
முன்னவர் | கிரிதர் கமாங் |
பின்வந்தவர் | கிரிதர் கமாங் |
தொகுதி | கோராபுட் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 31 மார்ச்சு 1961 கிலாபதார், கோராபுட் மாவட்டம், ஒடிசா. |
தேசியம் | இந்தியர் |
பிற அரசியல் சார்புகள் |
பிஜு ஜனதா தளம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | கிரிதர் கமாங் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இரமா தேவி மகளிர் கல்லூரி |
தொழில் | அரசியல்வாதி, சமூகசேவகர் |
ஹேமா கமாங் (Hema Gamang)(பிறப்பு 31 மார்ச் 1961) என்பவர் ஓர் அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள கோராபுட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]
கமாங் 1961ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள கிலாபதாரில் பிறந்தார். கமாங் ஒரு இடைநிலை பட்டதாரி மற்றும் ஒடிசாவின் புவனேசுவரத்தில் உள்ள இரமா தேவி மகளிர் கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் கிரிதர் கமாங்கை 4 ஏப்ரல் 1975-ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.[1]
கமாங் 1999-ல் 13வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 முதல் 2000 வரை, இவர் நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சிக் குழுவில் உறுப்பினராக இருந்தார். பின்னர், 2000 முதல் 2004 வரை, எஃகு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் ஒடிசாவின் தொலைப்பேசி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Biographical Sketch Member of Parliament 13th Lok Sabha" இம் மூலத்தில் இருந்து 11 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140311165104/http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=126."Biographical Sketch Member of Parliament 13th Lok Sabha" பரணிடப்பட்டது 2014-03-11 at the வந்தவழி இயந்திரம். Retrieved 11 March 2014.