உள்ளடக்கத்துக்குச் செல்

ஹென்ரி பெட்ரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹென்ரி பெட்ரிஸ்
ஹென்ரி பெட்ரிஸ்
பிறப்பு16 ஆகத்து 1888
காலி, இலங்கை
இறப்பு7 சூலை 1915(1915-07-07) (அகவை 26)
கொழும்பு, இலங்கை
சேவை/கிளைஇலங்கை பாதுகாப்பு படை
சேவைக்காலம்1914–1915
தரம்கேப்டன்
படைப்பிரிவுகொழும்பு நகர காவல்படை
போர்கள்/யுத்தங்கள்முதலாம் உலகப் போர்

டியூனுஜ் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் (Duenuge Edward Henry Pedris (சிங்களம்: හෙන්රි පේද්රිස්; 16 ஆகத்து 1888 – 7 யூலை 1915) என்பவர் இலங்கை குடிப்படை அதிகாரியும் உயர் வகுப்பு மாந்தரும் ஆவார். 1915 சிங்களவர் முசிலீம் கலவரத்தின்போது பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 17 வது பஞ்சாப் படையணியால் தேசத்துரோகத்திரோகக் குற்றச்சாட்டின்படி இராணுவச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இராணுவ வழக்கத்தின்படி பெட்ரிஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லபட்டார். இவருக்கு விதிக்கபட்ட மரணதண்டனை உள்ளூர் மக்களால் நியாயமற்றதாகப் பார்க்கபட்டது. மேலும் உள்ளூர் தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக கருதப்பட்டது. இது விடுதலை இயக்கத்தை விரைவுபடுத்தியது. இந்நிகழ்வு விடுதலை இயக்க முன்னோடிகளுக்கு உந்துதலை வழங்குகியது.[1]

12 செப்டம்பர் 2024 அன்று, இலங்கை சனாதிபதி ஹென்றி பெட்ரிசுக்கு மரணத்திற்குப் பிறகு மன்னிப்பு வழங்கினார்.[2][3][4]

துவக்ககால வாழ்க்கை

[தொகு]
தந்தை, டி.டி. பெட்ரிசும், தாய், மல்லினோ பெட்ரிசும்

ஹென்றி பெட்ரிஸ் இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள காலியில் கரந்தெனியாவின் சமாதான அதிகாரி மர்கிரிஸ் பெர்னாண்டோவின் மகளான டியூனுகே திசான் பெட்ரிஸ் மற்றும் மல்லினோ பெர்னாண்டோ பெட்ரிஸ் ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில் இளையவராக ஒரே மகனாக பிறந்தார்.[5] இவரது தந்தையும், மாமா என். எஸ். பெர்னாண்டோ விஜேசேகர என இருவரும் அக்காலத்தின் முன்னணி வர்த்தகர்களாக இருந்தனர். மேலும் இவரது குடும்பம் கிராஃபைட் சுரங்கங்கள், தோட்டங்கள், வர்த்தகங்களைக் கொண்ட பணக்காரர்களில் ஒன்றாக இருந்தது.[6]

பெட்ரிஸ் முதலில் புறக்கோட்டையில் உள்ள றோயல் கல்லூரியில் படித்தார். அங்கிருந்து செயின்ட் தோமஸ் கல்லூரியில் சேர்ந்தார், அங்கு இவர் விளையாட்டில் சிறந்து விளங்கினார். பள்ளியின் முதல் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி நல்ல துடுபாட்ட வீரராக பிரகாசித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு இவர் றோயல் கல்லூரிக்குத் திரும்பினார், அங்கு இவர் மீண்டும் துடுப்பாட்டம் விளையாடினார் மற்றும் பிற விளையாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.[6]

பெட்ரிஸ் மதுகுடிக்கும் பழக்கமற்றவராகவும், கொழும்பு சங்கத்தின் துடிப்பான உறுப்பினராக இருந்தார். குடும்பத் தொழிலில் நுழைந்து, தனது குடுப்பத்தின் வணிக நிறுவனங்களை கையில் எடுத்து வணிகத் துறையில் முன்னணிக்கு வருவார் என்று இவரது தந்தை நம்பினார்.[6]

கொழும்பு நகர காவல்படை

[தொகு]

முதலாம் உலகப் போர் வெடித்தவுடன், பிரித்தானிய அரசாங்கம் சிலோன் தற்காப்புப் படையைத் திரட்டியது. மேலும் கொழும்பு நகர காவல்படையை உருவாக்கியது. ஒரு கால் கொழும்பின் மீது ஜேர்மன் தாக்குதல் நடத்தினால் அவர்களிடமிருந்து கொழும்பைப் பாதுகாக்க தன்னார்வலர்கள் கொண்ட ஒரு குடிப்படை பிரிவாக இருந்தது. பெட்ரிஸ் புதிய படைப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட முதல் சிங்களவர் ஆவார். இவர் விரைவில் ஒரு சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக ஆனார். மேலும் இவரது சிறந்த குதிரைத்திறன் காரணமாக நிர்வாக (ஏற்றப்பட்ட) பிரிவில் ஒரு அதிகாரியாக நியமிக்கபட்டார். ஒரு ஆண்டுக்குள், இவர் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். இவரது விரைவான இந்த வளர்ச்சி பலருக்கு மிகுந்த பொறாமையை ஏற்படுத்தியது.[6]

சிங்கள முசுலிம் கலவரம்

[தொகு]

சிங்கள முஸ்லிம் கலவரம் (1915 கலவரம் என அழைக்கப்படுகிறது), இந்திய சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் குழு ஒன்று பௌத்தர்களின் ஊர்வலத்தைக் கற்களால் தாக்கியபோது, ​​​​கண்டியில் கலவரம் உருவானது, விரைவில் அது தீவு முழுவதும் பரவியது. இலங்கையின் பிரிட்டிஷ் ஆளுநர், சர் ராபர்ட் சால்மர்ஸ், காலனியின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்று அஞ்சினார், மேலும் பிரிகேடியர் ஜெனரல் மால்கமின் ஆலோசனையின் பேரில், கலவரத்தை கடுமையாக ஒடுக்கவேண்டும் என்று கருதினார் . ஆளுநர் சால்மர்ஸ் 1915 சூன் 2 அன்று இராணுவச் சட்டத்தை அறிவித்தார், மேலும் கலவரக்காரர் என்று கருதும் எவரையும் விசாரணையின்றி சுடுமாறு காவல்துறைக்கும், இராணுவத்திற்கும் உத்தரவிட்டார். வன்முறைகள் அதிகரித்ததையடுத்து, கொழும்பில் சூறையாடல்கள் நடந்த்தன. நகரத்தின் பாதுகாப்பிற்கு பொறேற்றிருந்த பெட்ரிஸ், அமைதிப் பேச்சுகளுக்குப் பிறகு பல கலகக் குழுக்களை வெற்றிகரமாக கலைத்தார்.[1]

சாலமன் டயஸ் பண்டாரனிகே மகா முதலியார் (தலைமை பூர்வீக மொழிபெயர்ப்பாளரும் ஆளுநரின் ஆலோசகருமானவர்) தலைமையிலான பிரித்தானிய நிர்வாகமும், அவர்களது சிங்கள முகவர்களும் பெட்ரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொண்டிருந்த பொறாமையால், பெட்ரிஸ் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டார். இறுதியில் இவர் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தபட்டார். பெட்ரிஸ் முஸ்லிம்கள் குழுவை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், பேலியகொடவில் இருந்து கொழும்பு நகருக்கு பேரணியாக செல்ல மக்களை தூண்டியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இவர் விரைவில் கைது செய்யப்பட்டார்.[1][not in citation given][சரிபார்ப்பு தோல்வியுற்றது]

இவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கிளர்ச்சி ஏற்படும் என்று அஞ்சி, 80 க்கும் மேற்பட்ட முக்கிய சிங்களத் தலைவர்களை ஆங்கிலேயர் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டவர்களில் டி. எஸ். சேனநாயக்கா, டி. ஆர். விஜயவர்தனா, எட்வின் விஜேயரத்ன, கலாநிதி காசியஸ் பெரேரா, ஈ.டி.டி சில்வா, எப்.ஆர்.டயஸ் பண்டாரநாயக்க, எச்.டபிள்யூ.அமரசூரிய, ஏ.எச்.மொலமுரே மற்றும் பலர் அடங்குவர்.[1]

மரணம்

[தொகு]
கேப்டன் ஹென்றி பெட்ரிஸ் கல்லறை கனாட்டே கல்லறை.

ஃபீல்ட் ஜெனரல் கோர்ட் மார்ஷியல்

[தொகு]

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரிஸ் 1 ​​யூலை 1915 அன்று ஸ்லேவ் தீவில் உள்ள மலாய் தெருவில் உள்ள ஜெனரல் ஆபீசர் கமாண்டிங், சிலோனின் தலைமையகத்தில் ஃபீல்ட் ஜெனரல் கோர்ட் மார்ஷியல் முன் நேர் நிறுத்தப்பட்டார். கோர்ட் மார்ஷியல் போர்டு 17 வது பஞ்சாப் படையணியின் பிரித்தானிய அதிகாரிகளைக் கொண்டது. பெட்ரிசுக்கு ஆதரவாக வழக்கறிஞர் எல். எச். டி அல்விஸ் வாதிட்டார். ஃபீல்ட் ஜெனரல் கோர்ட் மார்ஷியல் விரைவாக பெட்ரிஸை தேசத்துரோக குற்றச்சாட்டில் குற்றவாளி என்று முடிவெடுத்து மரண தண்டனை விதித்தது. எந்த வித மேல்முறையீடும் செய்ய முடியாததால் 1915 யூலை 7 அன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.[1]

மரணதண்டனை

[தொகு]

1915, யூலை, 7, அன்று, பெட்ரிஸ் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 17 வது பஞ்சாப் படையணியைச் சேர்ந்த பஞ்சாபி வீரர்களைக் கொண்ட துப்பாக்கிச் சூடு படையினரால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவரது உடல், இவரின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக, துரோகிகளை அடக்கம் செய்யும் இராணுவ பாரம்பரியத்தின்படி, அடையாளம் தெரியாத ஒரு கல்லறையில் புதைக்கப்பட்டது. இருப்பினும், டி.டி. பெட்ரிஸ் உடலை கொண்டு செல்வது மற்றும் அடக்கம் செய்வது குறித்து உளவு பார்க்கபட்டது. மேலும் பெட்ரிஸ் குடும்பத்தின் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களுக்கு மட்டுமே சரியான இடம் தெரியும்.[6] 1987 ஆம் ஆண்டில், பெட்ரிஸ் புதைக்கப்பட்டதாக சந்தேகபட்ட கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதில் உள்ள எச்சங்கள் அவருடையவையா என சரிபார்க்கப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 P. K. Balachandran (7 July 2012). "The execution that triggered the struggle for self-rule". Ceylon Today. Archived from the original on 21 December 2014.
  2. The Gazette Extraordinary (12 September 2024). "Proclamation by the President" (PDF). Department of Government Printing. Archived from the original (PDF) on 13 September 2024. பார்க்கப்பட்ட நாள் 13 September 2024.
  3. "Captain Edward Henry Pedris Posthumously Pardoned after 109 Years by the President". President's Media Division. 14 September 2024. Archived from the original on 14 September 2024. பார்க்கப்பட்ட நாள் 17 September 2024.
  4. Samrawickrama, Chaturnaga Pradeep (13 September 2024). "Presidential pardon for Edward Henry Pedris after 108 years". Daily Mirror. Archived from the original on 13 September 2024. பார்க்கப்பட்ட நாள் 13 September 2024.
  5. Peace Officer Margris Fernando of Karandeniya
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Dr. H. N. S. Karunatilake (7 July 2003). "The 88th death commemoration of the national hero Edward Henry Pedris". Daily News, Sri Lanka. Archived from the original on 14 July 2003. பார்க்கப்பட்ட நாள் 7 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரி_பெட்ரிஸ்&oldid=4119083" இலிருந்து மீள்விக்கப்பட்டது