துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் வழக்கம். துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் அம்புகள் எய்து குற்றம் சாட்டப்பட்டவரைக் கொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அப்பழக்கமே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பழக்கமாக மாறியது. தண்டனையை நிறைவேற்ற படைவீரர்களால் அல்லது காவல்துறையினரால் ஒரு சுடு குழு உருவாக்கப்படுகிறது. இக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் துப்பாக்கி விசையை அழுத்தி குற்றவாளியை நோக்கிச் சுடுகின்றனர். பொதுவாக குற்றவாளியின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் சுடு குழுவின் முன் நிறுத்தப்படுகிறார். சட்டம் ஒழுங்கு மீறலுக்கும், படைகளில் பொறுப்பைவிட்டு ஓடியவர்களுக்கும் இம்முறையில் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. உலகின் பல நாடுகள் இன்னும் இப்பழக்கத்தைப் பின்பற்றுகின்றன.