ஹினா ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் பரிசளிப்பு விழாவில் ஹினா ஷா
ஹினா ஷாவிற்கு பெண்கள் தினத்தில் இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீமதி பிரதிபா பாட்டீல் அவர்களால் ஸ்திரீ சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

ஹினா ஷா, இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரும் வணிக நிறுவன தலைவருமாவார். இவர், 1986 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நிறுவப்பட்ட, தொழில்முனைவு மற்றும் தொழில் மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் என்ற இலாப நோக்கற்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனரும் இயக்குநருமாவார். இவரின் தொழில் முனைவோருக்கான அமைப்பின் சேவைக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பிற்காகவும் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரான பிரதிபா பாட்டில் அவர்களால் வழங்கப்பட்ட நாரி சக்தி விருது , பாரத் ஜோதி விருது, டைட்டன் பி மோர் லெஜண்ட் பட்டம் மற்றும் சிறந்த திட்ட மேலாண்மை நிறுவனத்திற்கான விருது போன்றவைகளை பெற்றுள்ளார்.

பெண்களுக்கான அதிகாரம்[தொகு]

1976 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் பொதி கட்டுதல் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.[சான்று தேவை]

குஜராத்தின் தொழில்முனைவோர் விதவைகளுடனான சந்திப்பில் ஹினா ஷா

1986 ஆம் ஆண்டில், தொழில்முனைவு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான சர்வதேச மையத்தைத் தொடங்யுள்ளார். [1] ஷாவின் "பெண்களுக்கான தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்", குஜராத்தைச் சேர்ந்தஇருபத்தைந்து பெண்களுடன் தொடங்கப்பட்டது, அவர்களில் பதினாறு பெண்கள் பாரம்பரியமற்ற வணிக நிறுவனங்களை நிறுவியுள்ளனர். 2011 ஆம் ஆண்டு வரையில் அந்நிறுவனங்கள் இயங்கிக்கொண்டுதான் இருந்தன. வணிகத்தில் இருந்தன. மேலும் இந்த மையம் உலகெங்கிலும் சிறு, குறு தொழில் துறையில் விரிவாக பெண்களுக்காக செயல்பட்டு வருகிறது, பாலின பிரச்சினைகளில் கூர்மையாக கவனம் செலுத்துவதன் மூலம் அப்பெண்களின் முயற்சிகளை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் உற்பத்தி வளங்கள் மற்றும் வசதிகளில் தொழில்முனைவோரின் அணுகல் / கட்டுப்பாட்டை அதிகரிக்க முயற்சித்து வருகிறது.

பங்களாதேஷ், லெசோதோ, போட்ஸ்வானா, கேமரூன், மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜோர்டான், இலங்கை, கயானா, ஐவரி கோஸ்ட் மற்றும் செயின்ட் கிட்ஸ் மற்றும் ஜாம்பியா நாடுகளில், பெண்களின் பொருளாதார அதிகாரமளிக்கும் உத்திகளைத் தொடங்குவதற்கும் நிறுவனமயமாக்குவதற்கும் தேவையான பல்வேறு திட்டங்களை வகுக்கவும், செயல்படுத்தவும், ஷா முக்கிய பங்கு வகித்துள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Entrepreneurship Development Institute of India, Entrepreneurship Development Programs in Ahmedabad, Gujarat, Maharashtra, Delhi". www.icecd.org. பார்க்கப்பட்ட நாள் 2020-04-25.
  2. "Dr. Hina Shah". Confederation of Indian Micro, Small and Medium Enterprises (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-19. பார்க்கப்பட்ட நாள் 2023-03-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹினா_ஷா&oldid=3680957" இலிருந்து மீள்விக்கப்பட்டது