ஸ்ரீ முக்த்சர் சாகிப்
முக்தர் சாகிப் | |
---|---|
நகரம் | |
சிறீ முக்தர் சாகிப் | |
தூத்தி காந்தி சாகிப் குருத்துவார் | |
அடைபெயர்(கள்): முக்தர் | |
ஆள்கூறுகள்: 30°17′N 74°19′E / 30.29°N 74.31°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | முக்த்சர் |
அரசு | |
• நிர்வாகம் | சிறீ முக்தர் சாகிப் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 12.66 sq mi (32.80 km2) |
ஏற்றம் | 648.52 ft (197.67 m) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,17,085 |
• தரவரிசை | பஞ்சாபின் 14வது பெரிய நகரம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 152026 |
தரை வழி தொலைபேசி குறியீடு | 01633 |
வாகனப் பதிவு | PB-30 |
இணையதளம் | muktsar |

சிறீ முக்த்சர் சாகிப் (Sri Muktsar Sahib), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முக்த்சர் சாகிப் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். [1]2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 1,17,085 ஆகும்.[2]சிறீ முக்த்சர் மாவட்டத்தின் சராய்நாகா கிராமத்தில் சீக்கியர்களின் இராண்டாவது குருவான அங்கத் தேவின் பிறந்தார்.[3]இந்நகரத்தில் 29 டிசம்பர் 1705 அன்று முகலாயப் பேரரசுப் படைகளுக்கும், மாய் பாகோ எனும் சீக்கியப் பெண் தலைமையிலான 40 சீக்கிய வீரர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றது.
அமைவிடம்
[தொகு]பஞ்சாப் மாநிலத்தின் தென்மேற்கில், மால்வா பிரதேசத்தில், தார் பாலைவனத்திற்கு வடக்கே அமைந்த சிறீ முக்த்சர் சாகிப் நகரம், சண்டிகர் நகரத்திற்கு கிழக்கே 246 கிலோ மீட்டர் தொலைவிலும், தில்லிக்கு வடமேற்கே 385 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,23,644 வீடுகளும்; 23 வார்டுகளும் கொண்ட முக்த்சர் சாகிப் நகரத்தின் மக்கள் தொகை 1,16,747 ஆகும். அதில் ஆண்கள் 61,725 மற்றும் பெண்கள் 55,022 ஆக உள்ளனர். 6 வயதிற்குற்பட்ட குழந்தைகள் 13,981 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 891 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 76.49% ஆக உள்ளது. பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 32.88 % மற்றும் 0 ஆக உள்ளனர். இந்துக்கள் 55.56%, சீக்கியர் 42.77%, இசுலாமியர் 1.09%, கிறித்துவர் 0.34% மற்றும் பிறர் 0.25% ஆக உள்ளனர்[4]இந்நகரத்தில் மால்வாய் கிளைமொழி அதிகம் பேசப்படுகிறது.
போக்குவரத்து
[தொகு]குற்றகலப் பாதையால் இணைக்கப்பட்டுள்ள முக்த்சர் சாகிப் தொடருந்து நிலையத்திற்கு அன்றாடம் 12 தொடருந்துகள் வந்து செல்கிறது.[5]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Govt approves change in names of 25 towns". PTI. Bennett, Coleman & Co. Ltd.. 12 February 2012. http://timesofindia.indiatimes.com/india/Govt-approves-change-in-names-of-25-towns/articleshow/11859587.cms.
- ↑ "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF).
- ↑ "Sri Guru Angad Dev Ji".
- ↑ Muktsar Town Population Census 2011
- ↑ Sri Muktsar Sahib Railway Station