வை. பெரியகருப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வையாபுரி பெரியகருப்பையா
நீதிபதி (பணி ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்
பதவியில்
12 நவம்பர் 2007[1] – 4 October 2012[2]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-10-00)அக்டோபர் 1950
காமாட்சிபுரம், தேனி, தமிழ்நாடு
இந்தியா
துணைவர்வாணி
பிள்ளைகள்வீணா சுரேஷ்
கார்த்திக் பிரணாப் சிங்

வையாபுரி பெரியகருப்பையா (V. Periyakaruppiah) இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார்.[3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

நீதிபதி வி. பெரியகருப்பையா , 1950ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி, காமாட்சிபுரத்தில் (தேனி மாவட்டம், இந்தியா) பிறந்தார்.[4]

காமாட்சிபுரத்தில் உள்ள பி. எச். என். உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற பிறகு, விருதுநகரில் உள்ள விருதுநகர் இந்து நாடார் சீனிவாச நாடார் கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1974-இல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். ஆகத்து 1974-இல் இவர் வழக்கறிஞராகச் சேர்ந்தார்.

மதுரையில் பயிற்சி பெற்ற பிறகு, 1989ல் நேரடியாகத் துணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். விழுப்புரம், திருவள்ளூர், சென்னை மற்றும் கடலூரில் துணை மற்றும் மாவட்ட நீதித்துறையின் கீழ் பணியாற்றியுள்ளார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகப் பதவிகளில் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் பதிவாளராக (கண்காணிப்பு) பணியாற்றினார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் முதல் பதிவாளராகவும் (நீதித்துறை) இருந்தார்.

நவம்பர் 2007-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, சென்னை மாநகர் குடிமையில் நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாக பணியாற்றினார்.

10 நவம்பர் 2009 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக எளிமையாகப் பதவியேற்றார். இவரது பதவி பின்னர் நிரந்தரமாக்கப்பட்டது.[5]

இந்திய நீதித்துறையில் நீதிபதியாக 23 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அக்டோபர் 4, 2012 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் (சென்னை இருக்கை) நீதித்துறை உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.[2][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archive News". தி இந்து. 2007-11-06. Archived from the original on 2007-11-08. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. 2.0 2.1 Tamil Nadu (2012-10-05). "High Court judge retires - TAMIL NADU". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  3. "Madras High Court". Hcmadras.tn.nic.in. Archived from the original on 10 November 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  4. "CDJ - Judgments - Supreme Court - High Court - Case laws - Head Notes - India Law Judgments". Cdjlawjournal.com. 2016-03-02. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  5. The author has posted comments on this article (2009-11-08). "14 addl judges of Madras high court made permanent". The Times of India. Archived from the original on 2011-06-02. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01. {{cite web}}: |author= has generic name (help)
  6. The author has posted comments on this article (2012-10-05). "Forces tribunal bench gets judge after 6 months". The Times of India. Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01. {{cite web}}: |author= has generic name (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வை._பெரியகருப்பையா&oldid=3868511" இலிருந்து மீள்விக்கப்பட்டது