வெ. சீதாராமையா
வெ. சீதாராமையா | |
|---|---|
| பிறப்பு | வெங்கடராமையா சீதாராமையா (ವೆಂಕಟರಾಮಯ್ಯ ಸೀತಾರಾಮಯ್ಯ) 2 அக்டோபர் 1899 புத்திகெரே கிராமம், தேவனஹள்ளி] பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | 4 செப்டம்பர் 1983 (அகவை 83) பெங்களூர், கருநாடகம். |
| புனைபெயர் | வீ. சீ. (ವಿ. ಸೀ.) |
| தொழில் |
|
| மொழி | கன்னடம், ஆங்கிலம் |
| தேசியம் | |
| கல்வி நிலையம் | மகாராஜாவின் கல்லூரி, மைசூர், மைசூர் பல்கலைக்கழகம் |
| இலக்கிய இயக்கம் | நவோதயா |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கிருஷ்ணசரித்திரா,[1] அராலு பராலு, மகனியாரு, கீதகாலு,[2] தீபகாலு, பம்ப யாத்ரே,[3] காலேஜ் தினகாலு |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | கர்நாடக நாகித்திய அகதாமி விருது, கேந்திர சாகித்திய அகதாமி விருது, கௌரவ முனைவர் (1976) |
| துணைவர் | சரோஜம்மா |
| கையொப்பம் | |
| இணையதளம் | |
| V. Seetharamaiah | |
வெங்கடராமையா சீதாராமையா (Venkataramaiah Seetharamaiah) (02 அக்டோபர் 1899 - 04 செப்டம்பர் 1983) [4] பொதுவாக வீ சீ என அழைக்கப்படும் இவர் ஓர் கன்னட கவிஞரும், எழுத்தாளரும், கட்டுரையாளரும், விமர்சகரும், ஆசிரியரும் ஆவார். இவர், ஆசிரியராக 1928 முதல் 1955 வரை மைசூர் பல்கலைக்கழகத்தில் கன்னட இலக்கியங்களை கற்பித்தார்.[5][6][7] இவர் கர்நாடக சாகித்ய அகாதமி விருது (1973), கேந்திரா சாகித்ய அகாதமி விருது , 1976 இல் மைசூர் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் (டி. லிட் ) ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[8] 1954 இல் கும்தாவில் நடந்த 36 வது கன்னட இலக்கிய மாநாட்ட்டுக்குத் தலைமை தாங்கினார் .[9]
முப்பத்தாறு கன்னட உரைநடை படைப்புகள், ஆங்கிலத்திலிருந்து கன்னடத்திற்கு பத்து மொழிபெயர்ப்புகள், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பத்து வாழ்க்கை வரலாறு ஆகியவை அடங்கிய சுமார் அறுபது படைப்புகளை எழுதியுள்ளார்.[10][11] எழுத்தின் இந்த அடிப்படை இவரது கல்வி வாழ்க்கையின் ஐம்பது ஆண்டுகளை உள்ளடக்கியது. மேலும், தனது காலத்தில் நடைமுறையில் இருந்த ஒவ்வொரு கற்பனை வகையையும், எழுதும் பாணியையும் உள்ளடக்கியது. இவர் முக்கியமாக 1950 - 1960 களில் கன்னட இலக்கியங்களில் நவோதயா இயக்கத்தை உருவாக்கினார். இவர், கல்வியால் பொருளாதார வல்லுனராக இருந்தார். மைசூர் மகாராஜா கல்லூரியில் என். எஸ். சுப்பாராவின் கீழ் பயிற்சி பெற்றார். சுப்பாராவ் 1920களின் முற்பகுதியில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர்கள் ஆல்பிரட் மார்ஷல், ஜான் மேனார்ட் கெயின்ஸ் [12] ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர்.

படைப்புகள்
[தொகு]சீதாராமையா தனது முதல் உரைநடையியும் முதல் கவிதையையும் (பம்ப யாத்திரை) 1922 ஆம் ஆண்டில் "பிரபுத்த கர்நாடகா" என்ற கன்னட மொழி செய்தித்தாளில் வெளியிட்டார். அ. ரா. கிருஷ்ணசாஸ்திரி இந்த பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அவர், இவரைத் தொடர்ந்து தனது பத்திரிக்கையில் இவரை எழுத ஊக்குவித்தார். அவர்தான் இவரது பெயரை வீ.சி என சுருக்கினார். பின்னர், இது இவரது புனைப்பெயராக மாறியது.
கன்னடத்தில் சுமார் அறுபது படைப்புகள், கன்னட உரைநடை முப்பத்தாறு படைப்புகள், ஆங்கிலத்திலிருந்து கன்னடத்திற்கு பத்து மொழிபெயர்ப்புகள் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பத்து வாழ்க்கை வரலாற்று ஓவியங்கள் ஆகியவற்றைக் கொண்டு கன்னடத்தில் சுமார் அறுபது படைப்புகளை எழுதியுள்ளார்.[13]

பிற்கால வாழ்க்கை
[தொகு]சீதாராமையா இந்தியாவில் பரவலாகப் பயணம் செய்து ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனை பார்வையிட்டார். லண்டன் சென்ற போது போது, இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பிரித்தனில் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர், சரோஜம்மா என்பவரை மணந்தார். இவரது பல புத்தகங்கள் மைசூர் பல்கலைக்கழகம், பெங்களூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இவரது ஏராளமான கன்னட கவிதைகள் மற்றும் உரைநடை படைப்புகள் கர்நாடகாவில் பிரபலமாக உள்ளன.
இறப்பு
[தொகு]சீதாராமையா 1983 செப்டம்பர் 4 அன்று பெங்களூரில் தனது 83 வயதில் இறந்தார்.
நூலியல்
[தொகு]- M. Ramachandra (2006). "V. Seetharamaiah" (ವಿ. ಸೀತಾರಾಮಯ್ಯ) - Biography - Kannada Book; 1st Edition (Beṅgaḷūru: Navakarnāṭaka Prakāśana);
- L. S. Seshagiri Rao (1999). ವಿ. ಸೀ. - ನೂರರ ನೆನಪು (1 ed.). Vi. Sī. Sampada, Vi. Sī. Saṃsmaraṇa Vēdike;
- P. V. Joshi, G. S. Shivarudrappa, Shivaram Karanth (1991). ವಿ. ಸೀ. - ವ್ಯಕ್ತಿತ್ವ, ಕಾವ್ಯ ವೈಶಿಷ್ಟ್ಯ (2 ed.). Bangalore: ವಿ. ಸೀ. ಸಂಪದ.
- G. Venkatasubbiah. ವಿ. ಸೀ. (Biographical Sketch for Karnataka Sahitya Academy). Bangalore; Govt. of Karnataka. பரணிடப்பட்டது 2021-07-14 at the வந்தவழி இயந்திரம்
- Govt. of Karnataka. Catalogue of works by V. Seetharamaiah - Karnataka Sahitya Academy பரணிடப்பட்டது 2021-07-14 at the வந்தவழி இயந்திரம்;
- Govt. of Karnataka. List of Important Dates in the life of V. Seetharamaiah - Karnataka Sahitya Academy பரணிடப்பட்டது 2021-07-14 at the வந்தவழி இயந்திரம்;
- Vi. Sītārāmayya; Venkat Madhurao Inamdar (1975). Vi. Sī.- 75: Sambhāvanā Grantha. Vi. Sī. Satkāra Samitigāgi; Ai. Bi. Ec. Prakāśana.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sītārāmayya, Vi (1978). Mahābhāratada Kr̥ṣṇa cāritra (in கன்னடம்). Śubha Prakāśana. கணினி நூலகம் 8667292. Retrieved 18 October 2020.
{{cite book}}:|website=ignored (help) - ↑ Sītārāmayya, Vi (1931). Gītagaḷu. Karṇāṭaka Sāhitya Prakaṭaṇa Mandira. கணினி நூலகம் 43102444. Retrieved 18 October 2020.
{{cite book}}:|website=ignored (help) - ↑ Sītārāmayya, Vi; Ramaswamy, S; Karkala Sahitya Sangha (Kārkal, India) (2013). Pampayatre: an excursion to Hampi (in ஆங்கிலம்). கணினி நூலகம் 963575179. Retrieved 18 October 2020.
{{cite book}}:|website=ignored (help) - ↑ Rāmacandra, Em. Vi. Sītārāmayya. Retrieved 18 October 2020.
- ↑ Seetharamaiah, V. "V. Seetharamaiah – A Brief Biography". www.srikanta-sastri.org. Archived from the original on 20 அக்டோபர் 2020. Retrieved 18 October 2020.
- ↑ Seetharamaiah, V. "V. Seetharamaiah – Biography by G. Venkatasubbiah" (PDF). www.karnatakasahityaacademy.org. Govt. of Karnataka. Archived from the original (PDF) on 14 ஜூலை 2021. Retrieved 18 October 2020.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ ಸೀ, ವಿ. (2 October 2009). "ಆಚಾರ್ಯ ವಿ.ಸೀ ಗೆ ನಮೋ ನಮ" (in கன்னடம்). Retrieved 18 October 2020.
- ↑ Sītārāmayya, Vi. ವಿ. ಸೀ. - ನೂರರ ನೆನಪು. Retrieved 18 October 2020.
- ↑ ಸೀ, ವಿ. "ಸಾಹಿತ್ಯ ಸಮ್ಮೇಳನ-೩೬ – ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಪರಿಷತ್ತು". Kannadasahityaparishattu.in. Retrieved 18 October 2020.
- ↑ Seetharamaiah, V. ವಿ. ಸೀ. - ವ್ಯಕ್ತಿತ್ವ, ಕಾವ್ಯ ವೈಶಿಷ್ಟ್ಯ. ವಿ. ಸೀ. ಸಂಪದ.
- ↑ Seetharamaiah, V. "V. Seetharamaiah – Bibliography" (PDF). www.karnatakasahityaacademy.org. Govt. of Karnataka. Archived from the original (PDF) on 14 ஜூலை 2021. Retrieved 18 October 2020.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ Sītārāmayya, Vi. Vi. Sī.-75: sambhāvanā grantha. Vi. Sī. Satkāra Samitigāgi, Ai. Bi. Ec. Prakāśana. Retrieved 18 October 2020.
- ↑ Seetharamaiah, V. "V. Seetharamaiah – Bibliography" (PDF). www.karnatakasahityaacademy.org. Govt. of Karnataka. Archived from the original (PDF) on 14 ஜூலை 2021. Retrieved 18 October 2020.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)Seetharamaiah, V. "V. Seetharamaiah – Bibliography" பரணிடப்பட்டது 2021-07-14 at the வந்தவழி இயந்திரம் (PDF). www.karnatakasahityaacademy.org.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Webpage பரணிடப்பட்டது 2021-08-05 at the வந்தவழி இயந்திரம்