வெள்ளிக்கோடு
Appearance
வெள்ளிக்கோடு | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
அரசு | |
• நிர்வாகம் | கட்டாத்துறை |
மொழிகள் | |
• அதிகாரபூர்வம் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் | 629167 |
தொலைபேசி | 914651 |
வாகனப் பதிவு | TN 74, TN75 |
அருகான நகரம் | மார்த்தாண்டம் |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
காலநிலை | உப வெப்பமண்டலம் (கோப்பென்) |
வெள்ளிக்கோடு (Vellicode) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த ஊர் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 47 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 47 இல் உள்ளது. சர்வவள்ளிக்கோடு என முன்னர் வழங்கப்பட்ட வெள்ளிக்கோடு நாஞ்சில் நாட்டின் கல்குளம் பகுதியில் உள்ளது. தற்போதைய மக்கள் தொகையில் 90% நாடார் இன கத்தோலிக்கர் ஆவர்.
வரலாறு
[தொகு]வெள்ளிக்காேடு மனிதர்கள் கற்காலம் முதல் இருந்துவருகின்றனர். இப்பகுதியின் மிகவும் அறியப்பட்ட குழுமம் இடைநாடு ஆகும்.
பெயர்
[தொகு]வெள்ளிகாேட்டின் பண்டைய பெயர் சர்வ வள்ளிக்கோடு ஆகும், இதன் பொருள் அனைத்து மதங்களும் பின்பற்றப்படுகின்றன என்பதாகும். திருத்தூதர் புனித தோமாவினால் கட்டப்பட்டதாக நம்பப்படும் கிறித்தவத் தேவாலயம் இங்கு உண்டு. தெற்கே பகவதி கோவில் உள்ளது.