வெளிர்நீல ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெளிர்நீல ஈபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: பழைய உலக
ஈப்பிடிப்பான்
பேரினம்: யூமியாசு
இனம்: E. சோர்தியாசு
இருசொற் பெயரீடு
Eumyias சோர்தியாசு
(வால்தீன், 1870)
வேறு பெயர்கள்
  • யூமியாசு சோர்தியாசு
  • இசுடோபோரோலா சோர்தியாசு

வெளிர்நீல ஈபிடிப்பான் (Dull-blue flycatcher) (யூமியாசு சோர்தியாசு) என்பது சிறிய வகை குருவி ஆகும். இப்பறவை மியூசிகேப்பிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இந்தச் சிற்றினம் முன்பு முசிகாபா பேரினத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.[2]

பரவல்[தொகு]

இந்த சிற்றினமானது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். இவை மத்திய இலங்கை மலைகளில் காணப்படுகின்றது.

இனப்பெருக்கம்[தொகு]

வெளிர்-நீல ஈப்பிடிப்பான் இலையுதிர் மலைக் காடுகளில் இனப்பெருக்கம் செய்கிறது. இவை 600 மீட்டருக்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில் காணப்படும். பொதுவாக 900 மீட்டருக்குக் கீழே உள்ளப் பகுதிகளில் காணப்படுவதில்லை. வெளிர் நீல ஈப்பிடிப்பானின் இனப்பெருக்க காலம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமாகும்.

கிண்ண வடிவ கூட்டினை பாசி அடுக்குகொண்ட அமைக்கின்றது . கூடு அமைவிடம் பொதுவாக நிழற்பாங்கான பாறை விளிம்பில் அமைகிறது. பொதுவாக இரண்டு அல்லது மூன்று பழுப்பு நிறப் புள்ளிகள் கொண்ட இளஞ்சிவப்பு முட்டைகளை இடுகின்றன.

வெளிர்-நீல ஈப்பிடிப்பான் (கீழே)

உடலமைப்பு[தொகு]

இந்த சிற்றினத்தின் உடல் நீளம் 15 செ. மீ. ஆகும். இது புள்ளி ஈப்பிடிப்பான் போல வடிவுடையது. உரத்த மென்மையான ஓசையினைக் கொண்டுள்ளது. முதிர்வடைந்த குருவிகள் சாம்பல் நீலம், வெண்மையான வயிற்றுடன் காணப்படும். அகன்ற கறுப்பு ந்ற அலகிற்கும் கண்ணுக்கும் இடையில் ஒரு கருப்புத் திட்டு உள்ளது. ஆண் பெண் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் பெண் ஈப்பிடிப்பானின் நிறம் சற்றும் மந்தமாகக் காணப்படும்.

இளம் வெளிர்-நீல ஈப்பிடிப்பானின் தலை பெரிய புள்ளியுடன், வெளுத்த மற்றும் மார்பக இறகுகளுடன் அகன்ற பறக்கும் இறகுகளுடன் நீல-சாம்பல் ஓரங்களுடன் காணப்படும்.

உணவு[தொகு]

காடுகளின் வாழிடங்களை கொண்டிருந்தபோதிலும், இவற்றை எளிதாகக் காணலாம். இதன் முக்கியமாக இரையாகப் பறக்கும் பூச்சிகள், வண்டு, கம்பளிப் பூச்சி மற்றும் உள்ளிட்ட பூச்சிகளையும் பெர்ரிகளையும் சாப்பிடுகிறது.

கலாச்சாரத்தில்[தொகு]

இந்த பறவை இலங்கை 50 ரூபாய் பணத்தாளில் (2010 தொடர்) அச்சிடப்பட்டிருந்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Eumyias sordidus". IUCN Red List of Threatened Species 2016: e.T22709433A94209458. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709433A94209458.en. https://www.iucnredlist.org/species/22709433/94209458. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Howard, R.; Moore, A. (1991). A complete checklist of the birds of the world (2 ). Academic Press Ltd.. https://archive.org/details/completechecklis0000howa_t7f7. 
  3. "P-NEW".