வெண் தொண்டைச் சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண் தொண்டைச் சிரிப்பான்
இந்தியாவில் உத்தராகண்டம், பிம்தாலில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தெரோரிகினசு
இனம்:
தெ. அல்போகுலாரிசு
இருசொற் பெயரீடு
தெரோரிகினசு அல்போகுலாரிசு
கவுல்டு, 1836
வேறு பெயர்கள்

தெரோரிகினசு தெலெசெர்தி

வெண் தொண்டை சிரிப்பான் (White-throated laughingthrush)(தெரோரிகினசு அல்போகுலாரிசு) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள பாசரின் பறவை சிற்றினமாகும். இது முக்கியமாக இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதிகளிலும், முதன்மையாக இமயமலையிலும், சில அண்டை மற்றும் பிரிக்கப்பட்ட பகுதிகளிலும் காணப்படுகிறது. இது ஆப்கானித்தான், பூடான், இந்தியா, மியான்மர், நேபாளம், திபெத் மற்றும் வியட்நாம் முழுவதும் பரவியுள்ளது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

இந்த சிற்றினம் முன்பு கர்ருலாக்சு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2018-ல் ஒரு விரிவான மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இது புதுப்பிக்கப்பட்ட தெரோரிகினசு பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[2]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2013). "Garrulax albogularis". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22735092/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. Cibois, A.; Gelang, M.; Alström, P.; Pasquet, E.; Fjeldså, J.; Ericson, P.G.P.; Olsson, U. (2018). "Comprehensive phylogeny of the laughingthrushes and allies (Aves, Leiothrichidae) and a proposal for a revised taxonomy". Zoologica Scripta 47 (4): 428–440. doi:10.1111/zsc.12296. 

வெளி இணைப்புகள்[தொகு]