வீரணிமங்கலம் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலவர் கருவறை

வீரணிமங்கலம் மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் எங்கக்காட்டில் உள்ள சிவன் மற்றும் நரசிம்மருக்கான ஒரு பழமையான இந்து கோயிலாகும் . இக்கோயிலின் மூலவரான சிவபெருமான் மேற்கு நோக்கிய நிலையில் சுயம்புலிங்கமாக உள்ளார். 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இக்கோயில் கேரள-திராவிட கட்டிடக்கலை பாணியைச் சேர்ந்ததாகும். பரசுராம முனிவர் சிவபெருமானின் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம் பரசுராம முனிவர் ஆவார். [1] இந்த கோயில் கேரளாவின் புகழ்பெற்ற 108 சிவன் கோயில்களில் ஒன்றாகும். 108 சிவாலய தோத்திரத்தில் இக்கோயிலைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. [2]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் வடக்கஞ்சேரி வட்டத்தின் தெற்குப் பகுதியில் எங்கக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது.[3] இந்த வட்டத்திலுள்ள முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கோயில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. கோவில் கட்டிடக்கலையை நோக்கும்போது சிவன் கோயில்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது கருதப்படுகிறது. கோயில் வளாகம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் மேற்குப் பகுதியில் ஒரு பெரிய குளம் உள்ளது. சிவன் கோயிலை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

நரசிம்மர்[தொகு]

நரசிம்மரும் சிவபெருமானுடன் தொடர்புடையவராக இருப்பதால் இங்கு நரசிம்மருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நரசிம்மரின் சன்னதி மேற்கு நோக்கி உள்ளது. சிவபெருமானின் கோபத்தை நரசிம்மர் போக்கியதாக கூறப்படுகிறது.

துணைத்தெய்வங்கள்[தொகு]

இக்கோயிலில் மகா விஷ்ணு, கணபதி. அய்யப்பன், முருகன், நாகர், கிருஷ்ணன் ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". www.vaikhari.org.
  2. "Ambalikadu - Enakkadu Veeranimangalam Siva Temple". www.shaivam.org.
  3. "108 Siva Temples". www.thekeralatemples.com.