உள்ளடக்கத்துக்குச் செல்

108 சிவன் கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(108 சிவ ஆலயங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோடரியுடன் பரசுராமர்

இது சிவ தோத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 சிவன் கோயில்களின் பட்டியல்.

பின்னணி

[தொகு]

இந்து மதப் புராணங்களின் படி, பகவான் பரசுராமர், கோகர்ணா மற்றும் கன்னியாகுமரி இடையே நிலத்தை உருவாக்கினார். கர்த்தாவிரியா அர்ஜுனன் மற்றும் பிற க்ஷத்திரியர்களைக் கொன்ற பின்னர் பிராமணர்களுக்கு நன்கொடை வழங்குவதற்காக தனது கோடரியைப் பயன்படுத்தி கேரளாவை கடலில் இருந்து மீட்டதாகக் கூறப்படுகிறது.[1] அவர் இந்த நிலத்தை 64 கிராமங்களாகப் பிரித்தார். இந்த 64 கிராமங்களில் 32 கிராமங்கள் பெரும்புழா மற்றும் கோகர்ணாஇடையே உள்ளன. இங்கு பேச்சு வடிவ மொழியாக இருந்தது துளு. மீதமுள்ள 32 கிராமங்கள் பெரும்புழா மற்றும் கன்னியாகுமரி இடையே மலையாள மொழி பேசும் பகுதியில் இருந்தன.[2][3]

மகா விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர், ஜமதக்னி மற்றும் ரேணுகாவின் இளைய மகன் ஆவார். புராணங்களின் படி, இந்த நிலத்தைப் பிராமணர்களுக்கு நன்கொடையாக அளித்த பின்னர், இந்த 64 கிராமங்களில் நூற்று எட்டு மகா சிவலிங்கம் மற்றும் துர்கா சிலைகள் நிறுவப்பட்டன. இந்த நூற்று எட்டு சிவன் கோயில்கள் சிவாலய தோத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பாடல் மலையாள மொழியில் எழுதப்பட்டுள்ளது.[4] 108 சிவா கோயில்களில் 105 கோயில்கள் கேரள மாநிலத்திலும், கர்நாடகாவில் 2 கோயில்களும், 1 கோயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ளன.[5]

குறிப்புகள்

[தொகு]
  1. Book Title: Pilgrimage to Temple Heritage; Author: Info kerala Communications Pvt. Ltd; Editor: Mr.Biju Mathew; Publisher: Info Kerala Communications Pvt Ltd, 2017; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 819345670X, 9788193456705
  2. Book Title: The Collected Aithihyamaala - The Garland of legends from Kerala Volume 1-3, Author: Kottarathil Sankunni Translated by Leela James, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5009-968-1; Publisher: Hachette Book Publishing india Pvt Ltd, 4/5 floor, Corporate Centre, Plot No.:94, Sector 44, Gurgaon, India 122003; (First published in Bhashaposhini Literary Magazine in 1855~1937)
  3. Book Title: Kerala District Gazetteers: Palghat; Gazetteer of India Volume 6 of Kerala District Gazetteers, Kerala (India) Authors Kerala (India), C. K. Kareem Publisher printed by the Superintendent of Govt. Presses, 1976 Original from the University of Michigan Digitized 2 Sep 2008 Subjects History › Asia › India & South Asia History / Asia / India & South Asia Kerala (India)
  4. Book Title A handbook of Kerala, Volume 2 A Handbook of Kerala, T. Madhava Menon Authors T. Madhava Menon, International School of Dravidian Linguistics Publisher International School of Dravidian Linguistics, 2002 Original from the University of Michigan Digitized 2 Sep 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185692319, 9788185692319 Length: 496 pages; Kerala (India)
  5. Book Title: 108 Siva Kshetrangal, Author:Kunjikuttan Ilayath, Publishers: H and C Books
"https://ta.wikipedia.org/w/index.php?title=108_சிவன்_கோயில்கள்&oldid=4084707" இலிருந்து மீள்விக்கப்பட்டது