விழுங்கற்பதமி
தோற்றம்
விழுங்கற்பதமிகள் (Opsonins) என்பவை பொருட்கள் அல்லது உயிரணுக்களுடன் பிணைந்து, இவற்றை கழிவுண்ணல் (phagocytosis) மூலம் அகற்ற கழிவுண்ணிளைத் (phagocytes) தூண்டும் புற உயிரணுப் புரதங்களைக் (எ. கா. எதிர்ப்பான்கள்) குறிக்கும்.[1] உடலில் பல்வேறு வகையான இலக்குகளைக் கழிவுண்ணல் மூலம் அகற்ற விழுங்கற்பதமிகள் குறியீடுகளாகப் பயன்படுகின்றன.[1] இவற்றில் பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள், புற்றுநோய் செல்கள், வயதான செல்கள், இறந்த அல்லது இறக்கும் நிலையிலுள்ள செல்கள், அதிகப்படியான நரம்பிணைப்புகள், அல்லது தரசப்புரதப் படிமானம் போன்ற புரதத் தொகுப்புகள் அடங்கும். இவ்வாறு நோய்க்கிருமிகள், இறந்த, இறக்கும் தருவாயிலுள்ள, நோயுற்ற செல்களைத் துப்புரவு செய்ய விழுங்கற்பதமிகள் உதவுகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Punt J, Stranford SA, Jones PP, Owen JA (2019). Kuby immunology (Eighth ed.). New York. ISBN 978-1-4641-8978-4. கணினி நூலகம் 1002672752.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Cockram, Tom O. J.; Dundee, Jacob M.; Popescu, Alma S.; Brown, Guy C. (2021). "The Phagocytic Code Regulating Phagocytosis of Mammalian Cells". Frontiers in Immunology 12: 629979. doi:10.3389/fimmu.2021.629979. பப்மெட்:34177884.