கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோயெதிர்ப்பியலில்படியாக்க வலுவிழப்பு (clonal anergy) என்பது ஓம்புயிரியானதுநோய்க்கிருமிகளையும், வெளிப் பொருட்களையும் எதிர்கொள்ளும்போது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பின் தற்காப்பு வழிமுறைகளிலிருந்து எதிர்வினை இல்லாததைக் குறிப்பிடுகிறது. இந்நிகழ்வு, புறப் பொறுதியை (peripheral tolerance) நேரடியாகத் தூண்டுவதாக உள்ளது. படியாக்க வலுவிழப்பின்போது வெள்ளையணுக்கள் ஒரு குறிப்பிட்ட எதிர்ப்பான்களுக்கு, பொதுவாகத் தன்னெதிர்ப்பு எதிர்ப்பான்களுக்கு (autoantigens), எதிராக ஓர் எதிர்வினையாற்றாததைக் குறிக்கிறது. படியாக்க வலுவிழப்பானது படியாக்க நீக்கம், நோயெதிர்ப்பு ஒழுங்குமுறை போன்று நோயெதிர்ப்பு மண்டலப் பொறுதியின் அடிப்படைச் செயல்முறைகளில் ஒன்றாகும்.[1] இத்தகு செயல்முறைகள், கூட்டாக நோயெதிர்ப்பு மண்டலத்தின் மிகைவினைகளால் ஏற்படக்கூடிய தன்னழிவு நிகழ்வுகளைத் தடுக்கின்றன.