வியட்நாம் மல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியட்நாம் மல்லி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. alongense
இருசொற் பெயரீடு
Jasminum alongense
Gagnep.[1]

வியட்நாம் மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum alongense) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[2], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[3] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இத்தாவரயினம், யாசுமினம் அலாங்சென்சு என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. 1933 ஆம் ஆண்டு இவ்வினத்தினைப் பற்றிய தாவரவியல் முதற்குறிப்பு உள்ளது.

பேரினச்சொல்லின் தோற்றம்[தொகு]

அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும். [4] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது. [5]

வாழிடம்[தொகு]

இவ்வினத் தாவரங்களின் தாயகம் வியட்நாம் என கணித்துள்ளனர்.[6]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jasminum alongense". World Flora Online Plant List (in பிரித்தானிய ஆங்கிலத்திலுள்ள இணையப்பக்கம்). இணையவழி பன்னாட்டு கூட்டுப் பகிர்வு, 2021. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Angiosperm Phylogeny Group (2016), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV", இலின்னேயசு சமூகத்தின் தாவர ஆய்விதழ், 181 (1): 1–20, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/boj.12385
  3. முல்லைக் குடும்பம் (Oleaceae Hoffmanns. & Link First published in Fl. Portug. [Hoffmannsegg] 1: 62. 1809 [1 Sep 1809] (as "Oleinae") (1809) nom. cons.)
  4. Gledhill, David (2008). "The Names of Plants". Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521866453 (hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521685535 (paperback). pp 220
  5. etymonline
  6. "Jasminum alongense". Plants of the World Online (POWO) (in பிரித்தானிய ஆங்கிலத்திலுள்ள இணையப்பக்கம்). Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாம்_மல்லி&oldid=3845368" இலிருந்து மீள்விக்கப்பட்டது