வினை விளைவுக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒன்றின் காரணமாக (வினை) இன்னொரு நேரடி நிகழ்வு (விளைவு) நிகழும் என்பதை வினை விளைவுக் கோட்பாடு குறிக்கின்றது.


எடுத்துக்காட்டாக வேதியியற் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று சில குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட வழிமுறையில் சேரும் பொழுது வேதிவினை நிகழும். எந்தப் பொருட்களைச் சேர்த்தால் என்ன வேதியற் பொருட்களாக மாறும் என்று வேதியியல் அறிவு கொண்டு எதிர்வு கூறலாம். எ.கா:

NaCl(aq) + AgNO3(aq) → NaNO3(aq) + AgCl(s)


வினை விளைவுக் கோட்பாடின் நம்பிக்கையில் தான் விவசாயிகள் நிலத்தைப் பதனிட்டு, விதையை விதைத்து, நீர்பாச்சி, பாதுகாத்து அறுவடை செய்கிறார்கள். சில வேளைகளில் அவர்கள் எதிர்பார்த்தது போல் கால சூழ்நிலைகள் பொருந்தி வராமல் போவதும் உண்டு.


வினை விளைவுக் கோட்பாடின் அடிப்படையில் தான் நோய்களையும், அதற்கான காரணிகளையும், அதற்குரிய மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைக்கிறார்.


இவ்வாறு வினை விளைவுக் கோட்பாட்டு வாழ்வியலின் ஒரு அடிப்படைக் கூறாக தென்பட்டாலும், இது ஒரு சிக்கலான அறிவியல், மெய்யியல், ஆன்மீக கருத்துரு ஆகும். ஆன்மிக கருத்துருவைப்பற்றி இங்கே பார்க்கவும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]