உள்ளடக்கத்துக்குச் செல்

விந்து சேகரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயற்கை கருவூட்டலில் குதிரைகளிலிருந்து விந்து சேகரிக்கப் பயன்படும் உள்ளமைக்கப்பட்ட செயற்கை பெண்குறி

விந்து சேகரிப்பு (Semen Collection) செயல்முறை என்பது மனிதர்களில் ஆண்கள் அல்லது மற்ற விலங்குகளில் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி செயற்கை விந்தூட்டல், அல்லது மருத்துவ ஆய்விற்காக விந்தணுவினை சேகரித்தலைக் குறிக்கும். விந்து சுய இன்பம்[1] (உ.ம். குதிரை[2] மற்றும் நாய்கள்[3]), முன்னிற்குஞ்சுரப்பி வருடியோ, செயற்கை பெண்குறியினைப் பயன்படுத்தியோ, ஆண்குறியில் அதிர்வினை தூண்டியோ, மின்மூலம் விந்தணுவினை வெளியேற்றியோ சேகரிக்கலாம்.[4] அருகிவரும் இனங்களிலிருந்து விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு குறை வெப்பநிலையில் பாதுகாத்து மரபணு வளங்களைப் பாதுகாக்கவும் விந்தணு சேகரிப்பு உதவுகிறது.[5]

பல்வேறு இனங்களில் சேகரிப்பு முறைகள்[தொகு]

மனிதர்கள்[தொகு]

மனிதர்களிடமிருந்து விந்து சேகரிக்கும் முறைகள் பின்வருமாறு:

 • சுய இன்பம் மூலம் சுத்தமான கோப்பை ஒன்றில் விந்தணு சேகரிக்கப்படுகிறது.[6] விந்து மாதிரியைச் சேகரிக்க இது மிகவும் பொருத்தமான பொதுவான வழியாகும்.
 • சேகரிப்பு ஆணுறை எனப்படும் சிறப்பு வகை ஆணுறைகளைப் பயன்படுத்தி உடலுறவின் மூலம் சேகரித்தல். சேகரிப்பு ஆணுறைகள் சிலிகான் அல்லது பாலியூரிதீனால் தயாரிக்கப்படுகின்றன; ஏனெனில். இரப்பர் மரப்பாலினால் ஆன ஆணுறைகள் விந்தணுக்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றது. பல ஆண்கள் சுய இன்பத்திற்கும் சேகரிப்பு ஆணுறைகளை விரும்புகிறார்கள். சில மதங்கள் சுயஇன்பத்தை முற்றிலும் தடைசெய்கின்றன. கருத்தடை செய்வதைத் தடைசெய்யும் மதங்களைப் பின்பற்றுபவர்கள் துளையிடப்பட்ட சேகரிப்பு ஆணுறைகளை பயன்படுத்தலாம்.[7] இருப்பினும், இத்தகைய மாதிரிகள் சுத்தமான கோப்பையில் சுயஇன்பம் மூலம் சேகரிக்கப்பட்டதை விந்தணுவினை விடத் தரம் குறைந்தவையாக உள்ளன.[8]
 • காயிட்டசு குறுக்கீடு (திரும்பப் பெறுதல்). இந்த நுட்பத்தால், மனிதன் உடலுறவின் போது ஆணுறுப்பினை பெண்ணின் குறியிருந்து நீக்கி அகலமான கழுத்து கோப்பை அல்லது பாட்டிலில் சேகரித்தல்.[6][8]
 • அறுவைசிகிச்சை மூலம் பிரித்தெடுத்தல், எடுத்துக்காட்டாக, விந்து வெளியேற்றிக் குழாயில் அடைப்பு உள்ளபோது கருவுறுதல் நடைபெறாது. இத்தகைய சூழலில் விந்தணு விந்து நாளத்திலிருந்து நேரடியாக அறுவைச்சிகிச்சை மூலம் எடுக்கப்படுகிறது.[9] விந்தணு திரவத்தில் விந்தணுக்கள் இல்லாத ஆண்களுக்கு இம்முறை பயன்தருகிறது.[10]
 • ஆண்குறியில் அதிர்வினைத் தூண்டியும் மற்றும் எலெக்ட்ரோ எஜாகுலேஷன் முறையும்முதுகெலும்புக் காயம் உள்ள ஆண்களில் விந்தணு வெளியேற்று முறைகளாகும்.[11] இதில் இடுக்கிப் போன்ற சாதனத்தினைப் பயன்படுத்தி ஆண்குறியின் மொட்டினை தூண்டி விந்தணு வெளியேறத் தூண்டப்படுகிறது.

3-5 நாட்கள் இடைவெளியில் விந்தணு சேகரித்தல் பயன் தருகிறது. நீண்ட காலம் விந்தணு வெளியேற்றாமல் இருந்து சேகரிக்கப்படும் விந்தணுவில் எவ்வித கூடுதல் பலனும் உள்ளதாகத் தெரியவில்லை.[8]

கால்நடைகள்[தொகு]

குதிரைகள் [12][தொகு]

குதிரைகளில் விந்து சேகரிப்புக்கு, பயன்படுத்தப்படும் பொதுவான முறை செயற்கையான பெண்குறியினைப் பயன்படுத்துவதாகும். இம்முறையில் சேகரிக்கப்பட்ட விந்து சேகரித்த சோதிக்கப்பட்டு, நீர்த்தப்பட்டு, பின்னர் விரும்பிய பயன்பாட்டிற்கு ஏற்ப சேமிக்கப்படுகிறது. விந்து திரவமாகவோ அல்லது உறைந்த நிலையிலோ சேமிக்கலாம். விந்தணுக்களை நீர்த்துப்போகச் செய்து சேமிக்கும் போது பல வகையான நிலைப்படுத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஆற்றல் தருபவையாகவும் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் உறைந்த விந்துக்கு உறைநிலையில் பாதுகாப்பு தருபவை. சேமிப்பு பண்பினை மேம்படுத்துவதற்கும், திரவ விந்து சேமிப்பு காலத்தினை அதிகரிப்பதற்கும், விந்திலிருந்து பாக்டீரியாக்களைக் குறைப்பதற்கும் அல்லது அகற்றுவதற்கும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.[13][14]

கேனிட்கள்[தொகு]

நாய்கள்[தொகு]

ஆண் நாயிடமிருந்து விந்து சேகரிக்க, செயற்கை பெண்குறி பயன்படுத்தப்படுகிறது.[15][16] இது மெல்லிய மரப்பாலால் செய்யப்பட்ட கூம்பு வடிவமுடையது. இதன் முடிவில் சேகரிக்கும் குழாய் உள்ளது. லேட்டக்ஸ் அமைப்பின் உட்புறம் உராய்வினைத் தடுக்கும் பொருட்கள் பூசப்பட்டிருக்கும்.[17] எஸ்ட்ரசு சுழற்சியில் இருக்கும் ஆண் நாய் பெண் நாயினுடன் இணைய அனுமதிக்கப்படுகிறது.[18][19] தூண்டலுக்கு உட்படுத்தப்பட்டும் விந்தணுக்கள் சேகரிக்கப்படுகின்றன.[20][21] பயிற்சி பெற்ற ஒருவர் தன் கைகளைப் பயன்படுத்தி அனுபவமில்ல பெண் நாயின் உணர்ச்சியினை தூண்டுவார். பொதுவாக ஆண் நாய் பெண் நாயினைத் தழுவும் போது விந்து சேகரிப்பவர் ஆண் நாயின் ஆண்குறியில் லேடெக்ஸ் ஸ்லீவுக்கு விரைவாகச் செலுத்துவார்.[20][22] இதில் வெளியேற்றப்படும் விந்து, விந்து குழாயில் சேகரிக்கப்படுகிறது. விந்து வெளியேறும் போது இடுப்பு உந்துதல் இயக்கங்களை நாய் தொடங்குகிறது.[23]

ஓநாய்கள்[தொகு]

ஓநாய்களில் கைகளைப் பயன்படுத்தித் தூண்டியோ [24] அல்லது எலக்ட்ரோதூண்டுதல் மூலமாகவோ விந்துணுவினை சேகரிக்கலாம்.[25][26][27]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. P. F. Watson (1978). Artificial breeding of non-domestic animals: (the proceedings of a symposium held at the Zoological Society of London on 7 and 8 September 1977). Academic Press for the Zoological Society of London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-613343-1. பார்க்கப்பட்ட நாள் 9 February 2013.
 2. Crump, Jim, and Julia Crump. "Stallion ejaculation induced by manual stimulation of the penis பரணிடப்பட்டது 2020-10-22 at the வந்தவழி இயந்திரம்." Theriogenology 31.2 (1989): 341-346.
 3. Asa, C. S. "The importance of reproductive management and monitoring in canid husbandry and endangered‐species recovery." International Zoo Yearbook 44.1 (2010): 102-108.
 4. Lueders, I., et al. "Improved semen collection method for wild felids: urethral catheterization yields high sperm quality in African lions (Panthera leo)." Theriogenology 78.3 (2012): 696-701.
 5. Fickel, Jörns, Asja Wagener, and Arne Ludwig. "Semen cryopreservation and the conservation of endangered species." European Journal of Wildlife Research 53.2 (2007): 81-89.
 6. 6.0 6.1 Essig, Maria G. (2007-02-20). Susan Van Houten; Tracy Landauer (eds.). "Semen Analysis". Healthwise. WebMD. பார்க்கப்பட்ட நாள் 2007-08-05.
 7. Kippley, John (1984). The Art of Natural Family Planning. The Couple to Couple League.
 8. 8.0 8.1 8.2 Padubidri; Daftary (2011). Shaw's Textbook of Gynaecology, 15e. p. 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131225486
 9. "Fertility Center, Stockholm (translated from Swedish)". Archived from the original on 2012-08-30.
 10. Van Peperstraten, A.; Proctor, M. L.; Johnson, N. P.; Philipson, G. (2008-04-16). "Techniques for surgical retrieval of sperm prior to intra-cytoplasmic sperm injection (ICSI) for azoospermia". The Cochrane Database of Systematic Reviews (2): CD002807. doi:10.1002/14651858.CD002807.pub3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-493X. பப்மெட்:18425884. 
 11. Chehensse, C.; Bahrami, S.; Denys, P.; Clément, P.; Bernabé, J.; Giuliano, F. (2013). "The spinal control of ejaculation revisited: A systematic review and meta-analysis of anejaculation in spinal cord injured patients". Human Reproduction Update 19 (5): 507–526. doi:10.1093/humupd/dmt029. பப்மெட்:23820516. 
 12. "STALLION SEMEN COLLECTION USING A PHANTOM MARE". Archived from the original on 2020-10-23.
 13. Al-Kass, Ziyad; Spergser, Joachim; Aurich, Christine; Kuhl, Juliane; Schmidt, Kathrin; Johannisson, Anders; Morrell, Jane M. (2017-12-21). "Sperm Quality during Storage Is Not Affected by the Presence of Antibiotics in EquiPlus Semen Extender but Is Improved by Single Layer Centrifugation" (in en). Antibiotics 7 (1): 1. doi:10.3390/antibiotics7010001. பப்மெட்:29267226. 
 14. Al‐Kass, Ziyad; Spergser, Joachim; Aurich, Christine; Kuhl, Juliane; Schmidt, Kathrin; Morrell, Jane M. (2019). "Effect of presence or absence of antibiotics and use of modified single layer centrifugation on bacteria in pony stallion semen" (in en). Reproduction in Domestic Animals 0 (2): 342–349. doi:10.1111/rda.13366. பன்னாட்டுத் தர தொடர் எண்:1439-0531. பப்மெட்:30351456. 
 15. Johnson, Dustie Lee. "Improving semen parameters through modification of semen collection/extension." (2011).
 16. Bartlett, D. J. "Studies on dog semen." Journal of reproduction and fertility 3.2 (1962): 173-189.
 17. Freshman, Joni L. "Semen collection and evaluation." Clinical techniques in small animal practice 17.3 (2002): 104-107.
 18. Veterinary Medicine. Veterinary Medicine Publishing Company. 1989. பார்க்கப்பட்ட நாள் 9 February 2013.
 19. Vágenknechtová, M., et al. "THE INFLUENCE OF EXTERNAL AND INTERNAL FACTORS ON THE QUALITY OF SEMEN COLLECTION AND QUALITATIVE INDICATORS OF SEMEN IN THE DOG (CANIS FAMILIARIS)." ACTA UNIVERSITATIS AGRICULTURAE ET SILVICULTURAE MENDELIANAE BRUNENSIS 59: 0.
 20. 20.0 20.1 The Dog Breeder's Guide to Successful Breeding And Health Management. Elsevier Health Sciences. 2006. pp. 323–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4160-3139-0. பார்க்கப்பட்ட நாள் 23 April 2013.
 21. Kutzler, Michelle Anne. "Semen collection in the dog." Theriogenology 64.3 (2005): 747-754.
 22. "Semen Collection from Dogs". Arbl.cvmbs.colostate.edu. 2002-09-14. Archived from the original on 2012-02-05. பார்க்கப்பட்ட நாள் 2012-01-29.
 23. Edward C. Feldman; Richard William Nelson (2004). Canine and Feline Endocrinology and Reproduction. Elsevier Health Sciences. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7216-9315-6. பார்க்கப்பட்ட நாள் 13 September 2013.
 24. H. Frank (30 April 1987). Man and Wolf: Advances, Issues, and Problems in Captive Wolf Research. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-6193-614-5. பார்க்கப்பட்ட நாள் 30 March 2013.
 25. Christensen, Bruce W., et al. "Effect of semen collection method on sperm motility of gray wolves ( Canis lupus) and domestic dogs ( C. l. familiaris)." Theriogenology 76.5 (2011): 975-980.
 26. Asa, C. S. "Cryopreservation of Mexican gray wolf semen." Proceedings of the 1st International Symposium on Assisted Reproductive Technology for the Conservation and Genetic Management of Wildlife. 2001.
 27. Thomassen, Ragnar, and W. Farstad. "Artificial insemination in canids: a useful tool in breeding and conservation." Theriogenology 71.1 (2009): 190-199.

நூலியல்[தொகு]

காண்டாமிருகத்திலிருந்து விந்து சேகரிப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

 • ஆண்கள் அறைகள் ஒரு பிரித்தானிய பத்திரிகையாளர் விந்து சேகரிப்பு நிகழ்வை உற்று நோக்குகிறார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்து_சேகரிப்பு&oldid=3925714" இலிருந்து மீள்விக்கப்பட்டது