உள்ளடக்கத்துக்குச் செல்

செயற்கை பெண்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயற்கைப் பெண்குறி

செயற்கை பெண்குறி (Artificial vagina) என்பது பெண்குறியைப் போன்ற அமைப்பினை உடைய கருவியாகும்.[1] இந்த செயற்கை பெண்குறி ஆணின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது. இது சிலிகான், பிளாஸ்டிக் கூட்டுப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.[2]

ஆண்குறியின் நீளத்திற்கு தக்கவாறு செயற்கை பெண்குறி கிடைக்கிறது.

கால்நடை பயன்பாடு[தொகு]

கால்நடை விந்து சேகரிப்பு மையங்கள் மற்றும் செயற்கை கால்நடைப் பண்ணைகளில் கால்நடைகளிடமிருந்து விந்து சேகரிக்க இந்தச் செயற்கை பெண்குறிகள் பயன்படுகின்றன. விந்து சேகரிக்க உருவாக்கப்பட்ட செயற்கை பெண்குறிகளை அந்த கால்நடையின் உடற்கூறியல் அம்சங்கள் ஆராய்ந்த பின் வடிவமைக்கின்றார்கள். பெண் கால்நடை பெண்குறி அமைப்பும், விந்து சேகரித்தலுக்கான சேமிப்பு குடுவையும் இத்துடன் இணைந்திருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5108109/
  2. "செயற்கை பெண்குறி".
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_பெண்குறி&oldid=3824640" இலிருந்து மீள்விக்கப்பட்டது