விசையிணை அல்லது இணைவிசை அல்லது இரட்டை (Couple ) என்பது சமமான ஆனால் ஒன்றிற்கொன்று எதிர்திசைகளில் செயல்படும் இரு இணையான விசைகள் ஆகும். இவை யாதேனும் ஒரு பொருளில் தாக்கும் எதிரெதிர் திசைகளும் சம பருமனும் கொண்ட சமாந்தரமான இரு விசைகள் ஆகும். இரட்டையின் சுழல்திறன் (Moment) இவ்விரு விசையில் ஒன்றினை அவ்விரு விசைகளுக்கு இடையேயுள்ள செங்குத்து தூரத்தால் பெருக்கி வரும் பெருக்குத் தொகைக்குச் சமமாகும்.[1][2][3]