விசயன் சோலைபாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசயன் சோலைபாடி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மியூசிக்காப்பிடே
பேரினம்:
காப்சிகசு
இனம்:
கா. சூப்பர்சிலியாரிசு
இருசொற் பெயரீடு
காப்சிகசு சூப்பர்சிலியாரிசு
(பெளவுரசு & வொர்செசுடர், 1894)

விசயன் சோலைபாடி (Visayan shama)(காப்சிகசு சூப்பர்சிலியாரிசு) என்பது மியூசிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் உள்ள டிக்காவோ, மாசுபேட், நீக்ரோசு மற்றும் பனாய் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது முன்னர் வெண்புருவம் சோலைபாடியின் (காப்சிகசு லுசோனியென்சிசு) துணையினமாகக் கருதப்பட்டது.[2]

விளக்கம்[தொகு]

ஈபேர்டில் விவரிக்கப்பட்டவாறு இது நடுத்தர அளவிலான, நீண்ட வால் கொண்ட பறவை... மேல் பகுதி மற்றும் வால் கருப்பு நிறத்திலும், வெள்ளை நிற வயிற்றினையும் வெளிர் இளஞ்சிவப்பு கால்களைக் கொண்டது. ஆண் கருப்பு தொண்டை மற்றும் மார்பினை கொண்டது. பெண் பறவையின் தொண்டை மற்றும் மார்பில் கறுப்புத் திட்டு உள்ளது. கீழ் முதுகு, மற்றும் மார்பகம் கருப்பு பட்டையுடன் வெண்ணிற தொண்டையுடன் காணப்படும். பிலிப்பீன்சு மாக்பி-ராபினைப் போன்றது. ஆனால் நீண்ட வெள்ளை புருவம் மற்றும் வெள்ளை இறக்கை இணைப்பு இல்லை.

வாழ்விடம்[தொகு]

விசயன் சோலைபாடியின் இயற்கை வாழ்விடம் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் வரையிலான ஈரமான வெப்பமண்டல முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காடுகள் ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Copsychus luzoniensis". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22710003/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
  3. Allen, Desmond (2020). Birds of the Philippiens. Barcelona: Lynx. பக். 318–319. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயன்_சோலைபாடி&oldid=3819351" இலிருந்து மீள்விக்கப்பட்டது