விக்கிப்பீடியா பேச்சு:விக்கிதானுலாவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணுக்கம் அவசியமாக்க வேண்டும்[தொகு]

அண்மைய மாற்றங்கள் பக்கத்தை பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளதால் (?), தானுலவி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேற்பட்ட தொகுப்புகளை இக்கருவி மூலம் பயன்படுத்த விரும்புபவர்கள் அணுக்கம் பெற்று பயன்படுத்த அறிவுறுத்தப்படல் வேண்டும். நன்றி -- மாகிர் (பேச்சு) 04:04, 31 மார்ச் 2012 (UTC)

500-600 தொகுப்புகள் (தானியங்கி அல்லாதவை) தான் தினம் நடைபெறுகின்றன. அண்மைய மாற்றங்களை 250/500 வைத்துப் பார்த்துக் கொள்ளலாம். awb பயன்படுத்துவோர் நான்கைந்து பேர் தான் உள்ளனர். அதிலும் பெருமளவில் மாற்றம் செய்பவர்கள் ஏற்கனவே தானியங்கி கணக்கு தொடங்கி அதனை மட்டும் கொண்டு awb ஒட்டி வருகிறோம். எனவே சாதாரணமாக தினம் சிலபத்து மாற்றம் செய்பவர்களுக்கு awb அணுக்கம் தேவையில்லை. தினம் நூற்றுக்கணக்கில் தானுலாவி மாற்றம் இருந்தால் மட்டும் அவர்களைத் தானியங்கிக் கணக்கு தொடங்கச் சொல்லி வருகிறோம். அதுவே போதுமானதெனக் கருதுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:14, 31 மார்ச் 2012 (UTC)

உதவி[தொகு]

@Kanags: இன்று எங்களூரில், மாதமொருமுறை வரும் தொடர் மின்தடை. அதாவது காலை 9முதல், மாலை6வரை மின்சாரம் இருக்காது. எனவே, நான் எண்ணியபடி, உங்களுக்கு உதவ இயலவில்லை. நாளை முழுகுறிப்பினையும் தருகிறேன்.--03:26, 21 சூன் 2016 (UTC)[பதிலளி]

@Kanags:எனது இணைய பதிவிறக்க வேகம் 45-65kbps . எனவே, கோப்பின் அளவை இயன்ற அளவு குறைவு படுத்தி, உருவாக்கியுள்ளேன். இரு (1-பதிவிறக்கம், 2-இயக்கும்முறை)நிகழ்படங்களையும் கண்டு, எண்ணமிடவும். ஆவலுடன்..--உழவன் (உரை) 13:38, 21 சூன் 2016 (UTC)[பதிலளி]

@Info-farmer:, விளக்கமான நிகழ்படங்களுக்கு மிக்க நன்றி. மிக்க சிரமப்பட்டிருக்கிறீர்கள் போல் தெரிகிறது. நான் நேற்று தரவிறக்கியிருந்தேன். சிலவற்றை சோதித்துப் பார்த்தேன். ஆனால் சிக்கலாக இருந்தது. சேமிக்கவில்லை. உங்கள் நிகழ்படம் மிகவும் விளக்கமாக உள்ளது. இன்று மீண்டும் சோதித்துப் பார்த்துப் பதிலிடுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 22:48, 21 சூன் 2016 (UTC)[பதிலளி]
என்ன சிக்கல் வந்தது? Firewallதடுத்ததா?முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் நடந்த போது, என்னால் இயக்கமுடியாமல் போனது. எனவே, இக்கட்டுரையை, பிறருக்கும் பயன்படும்படி கட்டுரையை வளர்க்க எண்ணுகிறேன். இடர்கள் புதிதுபுதிதாக கணினியின் இயக்குதளத்திற்கு ஏற்ப வருவதால் தான், நான் முன்பு, விக்கிப்பீடியா:பைவிக்கிதானியங்கி கற்கத் தொடங்கினேன். மூர்த்திக்கும் (வின்-8) சிறு இடர் இருப்பதாக, இரண்டு வாரத்திற்கு முன் கூறினார்.-- உழவன் (உரை) 23:54, 21 சூன் 2016 (UTC)[பதிலளி]
சிக்கல் என்று நான் சொன்னது விளக்கம் குறைவாக இருந்தமை தவிர தொழினுட்பச் சிக்கல் ஏதும் இல்லை. உங்கள் விளக்கத்தின் படி பகுப்பு மாற்றத்தை மட்டும் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தேன். நன்றி.--Kanags \உரையாடுக 00:02, 22 சூன் 2016 (UTC)[பதிலளி]
மெதுவாகப்பேசி ஒரு நிகழ்படத்தை உருவாக்கினேன். அது 100மெகாபைட்டுகளுக்கும் மேல் வந்தது. இணைய சிக்கல் இந்தியாவில் பலருக்கும் உண்டு. நல்ல இணைய இணைப்பு பெற, அதிக பணம் தரவேண்டும் என்பதால் பதிவிறக்கத்தில் நேரம் செலவாகும் என்பதால்் சிறுசிறு நிகழ்படங்களை உருவாக்கலாமா?. எப்படி விளக்கம் தர வேண்டும். --உழவன் (உரை) 00:06, 22 சூன் 2016 (UTC)[பதிலளி]

தலைப்பு சரியா?[தொகு]

AutoWikiBrowser=Auto+Wiki+Browser=தானியங்கி+விக்கி+உலாவி-->விக்கி+தான்+உலாவி=விக்கிதானுலாவி என்று தானே வரவேண்டும்? --உழவன் (உரை) 11:49, 21 சூன் 2016 (UTC)[பதிலளி]

மேற்கூறியபடி இலக்கணப் பிழையை நீக்கி, இணைந்துள்ள அனைத்தையும் மாற்ற உள்ளேன். தங்களது எண்ணங்களைத் தரக்கோருகிறேன்--உழவன் (உரை) 13:22, 2 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:40, 2 மார்ச் 2017 (UTC)

ஒரு நிமிடத்தில் எத்தனை தொகுதிகள் செய்யலாம்?[தொகு]

கீழ்கண்ட உரையாடல் ஆங்கில விக்கிப்பீடியாவில் என்னால் நிகழ்த்தப்பட்டது. அதன் நகலை கீழே தருகிறேன்.

How many edits i can do for a minute in semi automatic mode?


i want to use AWB in a semiautomatic way to correct the grammatical errors of ta.wiki pages after a week prior notice in the ta.wiki Village pump. how many edits i can do in a minute? May i do 2 to 3 edits in a minute?I want to know that What is your edit limits that you are following here?--Info-farmer (talk) 06:24, 5 March 2017 (UTC)
@Info-farmer: See WP:MEATBOT. I don't know if ta wiki has similar policy. The rule of thumb on en wiki is that you can go as fast as you humanly can, as long as you verify all the changes with your eyeballs (and skipping or revising any incorrect changes) before saving. Of course, I have no idea how editors on ta wiki will look at this. Stevie is the man! TalkWork 14:13, 5 March 2017 (UTC)

எனவே, இது குறித்த தெளிவு நம்மிடம் தேவை. விக்கித்தரவு, பொதுவகம், ஆங்கிலவிக்கிப்பீடியா ஆகிய முன்னணி திட்டங்களில், ஒரு பங்களிப்பாளரின் பதிவுகள் பிழையின்றி இருக்க வேண்டும் என்பதே முக்கியம். கால எல்லைகள் முக்கியமல்ல. ஆனால், தொடர்ந்து ஆயிரகணக்கான பதிவுகளைச் செய்ய, ஏற்கனவே உள்ள தானியங்கியிடம் விண்ணப்பிக்கலாம்; நாமே ஒரு தானியங்கியை இயக்க, அனுமதி பெறலாம். உங்களின் எண்ணமென்ன? நாம் எப்படி இதனை வரையறை செய்து கொள்ளலாம்?--உழவன் (உரை) 01:33, 9 மார்ச் 2017 (UTC)

விக்கியிடை உதவி தேவை[தொகு]

தொழினுட்ப உதவிகளை பிறமொழி விக்கிகளுக்குத் தருவதையும், பெறுவதையும் வழக்கமாக கடந்த இரு ஆண்டுகளாக பழகி வருகிறேன். சமற்கிருத மொழி விக்கியருக்கு, இக்கருவியின் பயன்பாடு குறித்து அறிமுகத்தைத் தந்திருந்தேன். அவ்வப்போது அவர்கள் கேட்கும் வினாக்களுக்கு என்னால் உடன் பதில் அளிக்க இயலவில்லை. காரணம், இக்கருவியை நான் உபுண்டு வழங்கல்களில் பயன்படுத்த இயலாது. எனவே, இக்கருவியைப் பயன்படுத்துவோர் அவ்வப்போது, கேட்கப்படும் வினாக்களுக்கு, உரிய நிகழ்பட பாடத்தை உருவாக்கித் தரக் கோருகிறேன். சில மாதங்களுக்கு முன் இந்திய விக்கியிடை தொழினுட்ப அமைப்பு உருவாகியுள்ளது. அது வளரும் போது, இப்படி நாம் உருவாக்கும் நிகழ்பட பாடங்கள், மற்ற மொழி விக்கியிடையே பரவி, நம்மின் திறமும், அவர்களிடையேயான நட்பும் வெகுவாக மலரும் என்றே எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 05:50, 18 சூன் 2017 (UTC)[பதிலளி]

@Info-farmer:, என்னென்ன விளக்கப் படங்கள் வேண்டும் என்ற பட்டியலை இங்கு தாருங்கள். இயன்ற அளவு (விரைவில்) உதவுவோம். --இரவி (பேச்சு) 13:30, 18 சூன் 2017 (UTC)[பதிலளி]

regex பயன்பாடு[தொகு]

  1. $ பயன்படுத்தி தரவின் பின்னொட்டுவது எப்படி? --உழவன் (உரை) 05:51, 18 சூன் 2017 (UTC)[பதிலளி]
    அறிந்து கொண்டேன். இதற்கான திரைநிகழ் படப்பதிவை செய்து இணைப்பேன். உழவன் (உரை) 00:33, 15 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]