விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்க வலைவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வலைவாசல்:தமிழிலக்கியம்[தொகு]

@ஜெகதீச்வரன்... வலைவாசல்:தமிழிலக்கியம் - //தலைப்புகள் வார்ப்புருவை இணைக்க வேண்டும்//- மன்னிக்கவும்; எனக்குப் புரியவில்லை.என்ன எதிர்பார்ப்பு என்பதனை விளக்கினால், இணைக்க முயற்சிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:25, 24 அக்டோபர் 2013 (UTC)

வலைவாசல்:சைவம் என்பதில் தொடர்பானவை என்பதன் கீழ் சைவசமயத்தின் முக்கிய கட்டுரைகள் சிலவற்றின் தலைப்பினை வார்ப்புரு வடிவில் இணைத்திருக்கிறோம், அதுபோல வலைவாசல்:கிறித்தவம் என்பதில் கிறித்தவம் தொடர்பானவை என்பதையும் காணவும். ஒவ்வொரு வலைவாசலும் இவ்வாறு தொடர்புடைய தலைப்புகளை ஒருங்கிணைத்து தந்தால் படிப்பவர்கள் அவைகளை அணுக ஏதுவாக இருக்கும். தற்போது தமிழலக்கியம் வலைவாசலில் இந்த தலைப்புகள் வார்ப்புரு இல்லை. அதனை இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இந்த வார்ப்புரு இன்றியும் தமிழலக்கியம் வலைவாசல் காட்சிப்படுத்த ஏற்றதாக உள்ளது. அதனால் நேரமிருந்தால் இதனை இணைக்க முயற்சி செய்யுங்கள். இந்த விளக்கத்தில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தாரளமாக வினவுங்கள் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:51, 24 அக்டோபர் 2013 (UTC)

விளக்கத்திற்கு மிக்க நன்றி! 31 அக்டோபர், நண்பகல் 12 மணிக்குள் முடிக்க முயற்சிக்கிறேன். அது இயலாவிட்டால், வார்ப்புரு இல்லாமல் காட்சிப்படுத்திவிடுங்கள். காட்சிப்படுத்திய பிறகு ஏதேனும் ஒரு நாளில் நான் இந்த வார்ப்புருவினை இணைத்து விடுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:57, 25 அக்டோபர் 2013 (UTC)

சரி நண்பரே!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:33, 25 அக்டோபர் 2013 (UTC)

வார்ப்புரு தற்போது இணைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழிலக்கிய வலைவாசலை நவம்பர் மாதத்திற்கு காட்சிப்படுத்தலாம். வார்ப்புருவினை இன்னமும் விரிவுபடுத்தலாம் - ஏனெனில் தமிழிலக்கியம் என்பது பெருங்கடல். இந்த விரிவுபடுத்துதலை தனியாக எனது பயனர்வெளியில் செய்து, ஒருநாளில் ஒரே நேரத்தில் வலைவாசலில் உள்ள வார்ப்புருவில் இற்றை செய்துவிடுகிறேன். இதற்கு 1 வாரகால அவகாசம் தேவைப்படும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:58, 31 அக்டோபர் 2013 (UTC)

செய்யப்பட்ட மேம்பாடுகள் குறித்த தகவல்கள்[தொகு]

  1. 'தொடர்பானவை' வார்ப்புரு இணைக்கப்பட்டது.
  2. வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புப் படம் எனும் பக்கத்தில் மேலும் 2 படங்கள் சேர்ப்பு.
  3. வலைவாசல்:தமிழிலக்கியம்/உங்களுக்குத் தெரியுமா பக்கத்தில் எழுத்துப்பிழை திருத்தங்கள் மற்றும் உரை முன்னேற்றங்கள்.

வலைவாசல்:தொழினுட்பம்[தொகு]

இந்த வலைவாசலை நவம்பர் மாத இறுதிக்குள் மேம்படுத்த முயற்சி செய்கிறேன். எப்படியும் டிசம்பர் மாதத்தின் இறுதிக்குள் முடித்து விடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:21, 24 அக்டோபர் 2013 (UTC)

துடிப்புடன் தாங்கள் பங்களிப்பது கண்டு எனக்கும் அத்துடிப்பு பற்றிக் கொள்கிறது நண்பரே. இரு மாதங்களில் சில வலைவாசல்களை மேம்படுததிவிட நானும் முயற்சிக்கிறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:00, 24 அக்டோபர் 2013 (UTC)

வலைவாசல்:தமிழீழம்[தொகு]

செய்யப்பட்ட மேம்பாடுகள் குறித்த தகவல்கள்[தொகு]

  1. வலைவாசல்:தமிழீழம்/செய்திகள்/விக்கிசெய்திகள் எனும் பக்கம் இற்றை செய்யப்பட்டது.
  2. வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம் எனும் பக்கத்தில் உரைத் திருத்தம், எழுத்துப் பிழை திருத்தங்கள் செய்யப்பட்டன.

பங்களிப்பு வேண்டி ஆலமரத்தடியில் பொதுவான அறிவிப்பு![தொகு]

வலைவாசல்களை மேம்படுத்த உதவுமாறு அனைத்துப் பயனர்களுக்கும் ஒரு வேண்டுகோளினை ஆலமரத்தடியில் விடலாம். அவரவர்களுக்கு விருப்பமான வலைவாசல்களை எடுத்துக்கொண்டு, அவர்களால் முடிந்த அளவிற்கு மேம்படுத்துமாறு அந்த அறிவிப்பு உரைக்க வேண்டும். இதனை ஜெகதீச்வரன் முன்னெடுத்துச் செய்யுமாறு வேண்டுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:12, 28 அக்டோபர் 2013 (UTC)

செய்கிறேன் நண்பரே. அத்துடன் விக்கிப்பீடியாவின் முகப்பில் கட்டுரைப் போட்டிக்கு அறிவிப்பு வெளியிட்டதைப் போல குறுஞ்செய்தி ஒன்றையும் வெளியிட இயலுமா என்று கேட்டுப் பார்க்கிறேன். நவம்பர் 9க்குப் பிறகு பயிலரங்கம் குறித்தான செய்தி நீக்கப்பட்டுவிடும் என்பதால் அதன் பிறகு காட்சிபடுத்த இயலும் என நினைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:50, 1 நவம்பர் 2013 (UTC)