விக்கிப்பீடியா பேச்சு:ஒழுங்கமைத்தல் பணிக்கான சிறப்பு மாதம் - நவம்பர் 2022

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செப்டம்பரில் மாரத்தான், அக்டோபரில் கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல் என தீவிரமாக பயனர்கள் இயங்கி வருகிறார்கள். எனவே நவம்பர் மாதத்திற்கான பணியினை சற்று இலகுவாக செய்யலாம் எனக் கருதி, பகுப்புகள் ஒழுங்கமைத்தலை பரிந்துரை செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:57, 22 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

மாற்றுக் கருத்துகள் ஏதும் பதிவிடப்படவில்லை என்பதாலும், எடுத்திருக்கும் பணியானது எளிதானது என்பதாலும் திட்டத்தை அறிவித்துள்ளேன். எடுத்திருக்கும் முனைப்பானது அதே ஆற்றலுடன் முன்னோக்கிச் செல்லட்டும் என்பதாலும் மேலும் காத்திருக்கவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:55, 1 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

பகுப்பு சிக்கல்கள்-உதவி[தொகு]

மா. செல்வசிவகுருநாதன் அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு கருப்பொருளில் விக்கிப்பீடியாவினை மேம்படுத்த மேற்கொள்ளும் முன்னெடுப்பிற்கு வாழ்த்துக்கள். சில அடிப்படை புரிதல்கள் என் போன்ற பயனருக்கு இல்லாத காரணத்தினாலும் தொழில்நுட்ப அனுபவம் தேவைப்படுவதாலும் பகுப்புகளைச் சரிசெய்வதில் சில சிக்கல்கள் உள்ளன.

உ.ம். பகுப்பு:Taxonbars using multiple manual Wikidata items இது ஆங்கிலத்தில் உள்ள பகுப்பு தானியக்கமாக தமிழ்ப்படுத்தப்படும் தொகுப்பில் ஒரு சிற்றினத்திற்கு இரண்டு பெயர்கள் இருக்கும் போது (அதாவது தற்போதைய இருசொல் பெயர் ஒன்று, முன்னர் வழங்கப்பட்ட பெயர் வேறு) சேருகின்றது. இதனை எவ்வாறு தமிழ்படுத்துவது அல்லது நீக்குவது என்பது தெரியவில்லை. இதுபோன்று பகுப்புகளைச் சரிசெய்வதில் சில இடர்பாடுகள் உள்ளன. வேங்கைத் திட்டப் பயிற்சியில் இது குறித்து அமர்வு ஒன்றினை நிகழ்த்தலாம். சில பகுப்புகளைத் தொழில்நுட்ப புரிதல் உள்ளவர்கள் முன்னெடுத்துச் சரிசெய்ய வேண்டப்படுகிறது.--சத்திரத்தான் (பேச்சு) 02:05, 2 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

பகுப்புகளில் தலைப்பை இணைத்தல்[தொகு]

@Selvasivagurunathan m பல பகுப்புகளில் அதன் முதன்மை கட்டுரை விவரங்கள் இல்லை. எடுத்துக்காட்டுக்கு பகுப்பு:திண்ம வடிவவியல் இது போல் முடிந்தவரை பகுப்புப் பக்கங்களில் முதன்மைக் கட்டுரைகளை இணைத்தால் பயன் தரும். இந்த வேலையையும் இந்த மாதத்தில் வைத்துக்கொள்ளலாமா? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:42, 8 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

செய்யலாம். நான் அறிந்தவற்றை திட்டப் பக்கத்தில் இட்டுள்ளேன். மற்ற பணிகளையும் நாம் பட்டியலிடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:10, 10 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

பகுப்புக்களை மற்ற மொழிகளுடன் விக்கித்தரவின் மூலம் இணைத்தல்[தொகு]

தமிழிலில் கிட்டத்தட்ட ஏழாயிரம் பகுப்புக்கள் மற்ற மொழிகளோடு விக்கித்தரவில் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால் கட்டுரைகளை மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது பகுப்புகளைத் தேடுவதில் மிகுந்த சிக்கல் மற்றும் அயற்சி ஏற்படுகிறது. இதணைத் தவிர்க முடிந்தவரையில் தமிழில் உள்ள பகுப்புகளை மற்ற மொழிகளோடு இணைக்கப்பட வேண்டும். எல்லாத் தமிழ் பகுப்புகளும் ஆங்கிலத்தில் இருந்துவிடாது. ஆனால் அப்படி இருக்கும் பகுப்புகளை இணைத்துவிட்டால் பல நன்மைகள் ஏற்படும். நகல் பகுப்புகள் உருவாவது தடுக்கப்படும்.

சிலப் பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்திய பகுப்புகள் மற்ற மொழிகளோடு இணைக்கப்படாமல் இருந்திருந்தால் தானியங்கி, பகுப்புகளுக்கு, புதிதாக தனி விக்கித்தரவுப் பக்கம் உருவாக்கியிருக்கும். அப்படிப்பட்ட பகுப்புகளின் விக்கித்தரவு பக்கங்களை பல மொழிகள் கொண்ட விக்கித்தரவு பக்கத்துடன் இணைத்திட (Merge) செய்தால் போதுமானது.

இப்படிப்பட்ட பகுப்புகளின் பட்டியலை இங்கு காணலாம். இந்த பக்கம் ஒவ்வொரு முறை திறக்கும் பொழுது புதுப்பித்து மற்ற மொழிகளுடன் (குறிப்பாக ஆங்கிலத்துடன்) இணைக்கப்படாத பகுப்புகளைக் காட்டும்.

இந்தப்பணியையும் இம்மாதத்திற்கு வைத்துக்கொள்ளலாமா @Selvasivagurunathan m ?

இது குறித்து மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். கடினமாக இருந்தால் சிறிய இணையவழி பயிற்சியை அளிக்கிறேன். அல்லது இது குறித்து வேங்கைத்திட்ட பயிற்சியிலும் பேசலாம் @Neechalkaran? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:17, 8 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

போதுமான பயிற்சி அல்லது அனுபவம் இதுபோன்ற விடயங்களில் இல்லாததால் பல நேரம் இடர்பாடுகளை சந்தித்துள்ளேன். எனவே தமிழில் உள்ள பகுப்பினை ஆங்கில பகுப்புடன் இணைப்பது என சிறிய காணொலி/அல்லது விளக்கம் தந்தால் உதவியாக இருக்கும். --சத்திரத்தான் (பேச்சு) 11:03, 8 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
முக்கியமான மேம்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். வேங்கைத் திட்டப் பயிற்சியிலும் பேசலாம். சிறு விளக்கக் காணொளியாகவும் வெளியிடலாம். இதற்கிடையில் விக்கி உருமாற்றி கருவிவழியாகவும் இணையான பிறமொழி தாய்ப் பகுப்பைக் கண்டுபிடிக்கலாம். இக்கருவி குறித்து, தமிழில் விளக்கக் காணொளி. இதைவிட எளிய வழி இருந்தால் இங்கும் அறியத் தரலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 20:02, 8 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

விசயநகரப் பேரரசு/விஜயநகரப் பேரரசு[தொகு]

வேண்டிய பகுப்புகள் வரிசை எண் 65. விசயநகரப் பேரரசு‏‎ (35 உறுப்பினர்கள்) உள்ள தொகுப்புகளை விசயநகரப் பேரரசு எனும் பகுப்பினை உருவாக்கி விஜயநகரப் பேரரசு எனும் பகுப்பில் உள்ள கட்டுரைகளையும் இதற்கு நகர்த்தி விஜயநகரப் பேரரசு பகுப்பினை நீக்கலாம். சத்திரத்தான் (பேச்சு) 16:11, 12 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]