விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள்/தமிழ் விக்கிப்பீடியர்கள், வாசகர்களின் வாழ்த்துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பாளர்களும், பயனீட்டாளர்களும், வாசகர்களும் தங்களின் வாழ்த்துகளை இங்கு தெரிவியுங்கள்; நன்றி!

சத்திரத்தான்[தொகு]

தமிழ்ச் சொந்தங்களால் இரு தசாப்தங்களாக சீராக வளர்ச்சியடைந்த தமிழ் விக்கிப்பீடியாவின் பயனராக பங்களிப்பதில் மகிழ்ச்சி. இந்திய மொழிகளில் முதலிடத்தினை தமிழ் விக்கிப்பீடியா அடைவதே எமது இலக்கு, எமது காலம் கடந்தும் எமது எழுத்துக்கள் பயணிக்கும் என்பதில் மகிழ்ச்சி. விக்கிப் பயனர்களுக்கு வாழ்த்துக்கள். --சத்திரத்தான் (பேச்சு) 08:48, 28 செப்டம்பர் 2023 (UTC)

ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன்[தொகு]

2003-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ் விக்கிப்பீடியா இருபதாவது ஆண்டு நிறைவை பெருமிதத்தோடு கொண்டாட திட்டமிட்டுள்ளது மனநிறைவை அளிக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமிதம் கொள்கிறேன்.

--ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் Sree1959 (பேச்சு) 08:47, 28 செப்டம்பர் 2023 (UTC)

பா. ஜம்புலிங்கம்[தொகு]

நான் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றிய, 25 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்ட, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விக்கிப்பீடியா 20ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டது மனதில் நிற்கும் அனுபவம். சக பயனர்களின் பேச்சுகள் எனக்கு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் தந்தன. வளர்ந்துவரும் இளம் பயனர்களின் பேச்சு என்னை அதிகம் சிந்திக்கவும், மேலும் தொடர்ந்து பயணிக்கவும் உதவும் என நம்புகிறேன். துணைவேந்தரின் அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:35, 29 செப்டம்பர் 2023 (UTC)

பாலசுப்ரமனியன்[தொகு]

தமிழ் விக்கிபீடியாவின் முதல் பதினைந்து ஆண்டுகளில் நான் இல்லை என்றாலும் இருபதாம் ஆண்டு நிறையும் தருவாயில் சிறிதளவேனும் எனது பங்கினை ஆற்றி வருவதில் மிகவும் உவகை கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி--Balu1967 (பேச்சு) 15:18, 29 செப்டம்பர் 2023 (UTC)

சிவகுரு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவை உருவாக்கி, வளர்த்தெடுத்து, சிறப்பான நிலைக்குக் கொண்டுவந்த அனைத்துப் பயனர்களுக்கும் நன்றிகள்!

கீழ்க்காணும் குறிக்கோள்களுடன் தமிழ் விக்கிப்பீடியர்கள் பணியாற்றினால், தமிழ் மொழியை இவ்வுலகில் தொடர்ந்து நிலைநிறுத்த முடியும்.

  1. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில், இந்திய மொழிகளில் முதலிடத்தைப் பெற வேண்டும்.
  2. தர வரிசையில் குறிப்பிடத்தக்க முன்னிலையை அடைய தொடர்ந்து முயற்சி செய்தல் வேண்டும்.
  3. தமிழ் விக்கிப்பீடியா குறித்த தெரிநிலையை தமிழர்களிடையே எடுத்துச் சென்று, பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையை இயன்றளவு அதிகரிக்க வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:08, 30 செப்டம்பர் 2023 (UTC)