விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 23
Appearance
ஆகத்து 23: அடிமை வணிக ஒழிப்பை நினைவூட்டும் பன்னாட்டு நாள்
- 1305 – இசுக்காட்லாந்தின் நாட்டுப்பற்றாளர் சேர் வில்லியம் வேலசு (படம்) இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னரால் நாட்டுத்துரோத்துக்காகக் குற்றம் சாட்டப்பட்டு இலண்டனில் தூக்கிலிடப்பட்டார்.
- 1628 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு ஜோன் பெல்ட்டன் என்பவனால் படுகொலை செய்யப்பட்டார்.
- 1839 – கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கைக் கைப்பற்றியது. இது பின்னர் முதலாம் அபினிப் போர் என அழைக்கப்பட்டது.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பால்ட்டிக் நாடுகள், பின்லாந்து, உருமேனியா, போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது.
- 1948 – ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் ஆவணத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன.
- 2011 – லிபிய உள்நாட்டுப் போர்: லிபியத் தலைவர் முஅம்மர் அல் கதாஃபி அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். தேசிய இடைக்காலப் பேரவை ஆட்சியைக் கைப்பற்றியது.
ம. இரா. சம்புநாதன் (பி. 1896) · டி. எஸ். பாலையா (பி. 1914) · வ. ரா. (இ. 1951)
அண்மைய நாட்கள்: ஆகத்து 22 – ஆகத்து 24 – ஆகத்து 25