முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
His Grace
பக்கிங்காம் கோமகன்
KG
“பக்கிங்காம் கோமகன்”, 1625, பீட்டர் பால் ரூபென்சால் வரையப்பட்டது
பக்கிங்காம் கோமகன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1592-08-28)28 ஆகத்து 1592
இறப்பு23 ஆகத்து 1628(1628-08-23) (அகவை 35)
துணைவர்கேதரீன் வில்லியர்சு
பிள்ளைகள்ரிச்மண்டு கோமகள் ஸ்டூவர்ட் வில்லியசு
சார்லசு வில்லியர்சு
இரண்டாம் பக்கிங்காம் கோமகன் ஜார்ஜ் வில்லியர்சு
பெற்றோர்ஜார்ஜ் வில்லியர்சு, மேரி வில்லியர்சு

முதலாம் பக்கிங்ஹாம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (ஆகஸ்ட் 28, 1592- ஆகஸ்ட் 23, 1628) இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்சு க்கு மிகவும் நெருக்கமாய் இருந்த ஆங்கிலேயப் பிரபு.[1] இவரது இராணுவ மற்றும் இராசதந்திர நடவடிக்கைகள் யாவும் மிக மோசமாக இருந்த போதிலும் இவர் தனது வாழ்நாளில் அரசவையில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

உயர்குடியைச் சேர்ந்த சீமான் சர் ஜார்ஜ் வில்லியர்சுக்கும் மேரிக்கும் மகனாகப் பிறந்த வில்லியர்சு தனது இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். மேரி தனது மகன் அரசவையாளராவதற்கான பயிற்சியைப் பெறும் பொருட்டு ஜான் இலியட் உடன் வில்லியர்சை ஃபிரான்சுக்கு அனுப்பினார்.

ஃபிரான்சில் பயிற்சி பெற்ற வில்லியர்சு 1614ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசர் முன் கொண்டு வரப்பட்டார். அப்போது அவர் இங்கிலாந்திலேயே அழகிய தோற்றமுடையவராய்க் கருதப்பட்டார்.[2]

அரசவை வாழ்க்கை[தொகு]

நாளுக்கு நாள் முதலாம் ஜேம்சுக்கும் வில்லியர்சுக்குமான உறவின் நெருக்கம் அதிகமானது.[3] முதலாம் ஜேம்சின் அந்தரங்கத் தொடர்புகள் சர்ச்சைக்குரியவை. அவர் ஏற்கனவே இரண்டு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக வில்லியர்சுடனானது அவரின் கடைசித் தொடர்பு ஆகும். ஜேம்சு பல பதவிகளையும் பரிசுகளையும் வில்லியர்சுக்கு வழங்கினார். 1623 ஆம் ஆண்டில் வில்லியர்சு பக்கிங்ஹாமின் கோமகனாக்கப்பட்டார்.

அரசியல் சரிவு[தொகு]

பக்கிங்ஹாம் எடுத்த பல நடவடிக்கைகள் தோல்வியைத் தழுவின.[4] அவற்றுள் உச்சகட்டமாக இசுப்பானியத் துறைமுகமான காடிஸ் மேல் எடுத்த கடற்படையெழுச்சியும் தோல்வியில் முடிந்தது. இங்கிலாந்து பாராளுமன்றம் இவர் மீது அரசத்துரோகக் குற்றம் சாட்டியது. இவரைக் காப்பாற்ற வேண்டி முதலாம் ஜேம்சு இங்கிலாந்து பாராளுமன்றத்தையே கலைத்தார்.

சார்லசும் வில்லியர்சும்[தொகு]

1625 ஆம் ஆண்டில் ஜேம்சின் மரணப்படுக்கையிலும் பக்கிங்ஹாம் உடன் இருந்தார். அடுத்து முடிசூட்டப்பட்ட சார்லசையும் பக்கிங்ஹாம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

மரணம்[தொகு]

ஃபிரான்சில் இவர் எடுத்த படையெடுப்பின் போது ஜான் ஃபெல்டன் எனும் இராணுவ அதிகாரியால் குத்தப்பட்டுக் கொலையுண்டார்.[5] பக்கிங்ஹாம் வெஸ்டமின்ஸ்டர் அபேயில் புதைக்கப்பட்டார். ஆடம்பரமான இவரது கல்லறையில் இலத்தீனத்தில் 'உலகின் புதிர்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.

புனைவு நூல்களில்[தொகு]

முதலாம் பக்கிங்காம் கோமகன் வரலாற்றில் சர்ச்சைக்குரிய மனிதர்களில் ஒருவர். அலெக்சாண்டர் டூமாஸ் தனது "த திரீ மஸ்கிடியர்ஸ்|தி திரீ மஸ்கீட்டர்ஸ்" நூலில் இவரை நல்ல விதமாய்ச் சித்தரிக்கிறார். ஆனால் சார்லசு டிக்கன்சு தனது "குழந்தைகளுக்கான இங்கிலாந்தின் வரலாறு" என்ற நூலில் பக்கிங்காமின் அடாவடித் தனங்களைக் குறிக்கிறார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Western Heritage, Eighth Edition, chapter 13, page 420
  2. Godfrey Goodman, Bishop of Gloucester, quoted in Gregg, Pauline (1984). King Charles I. Berkeley, CA: University of California Press. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520051461.
  3. To the manor bought, BBC News Online, 5 June 2008
  4. An apprenticeship in arms by Roger Burrow Manning p.115
  5. Tudor and Stuart Britain 1471–1714, by Roger Lockyer, 2nd edition, London 1985, Longman.
  6. A Child’s History of England, by Charles Dickens, London, Edinburgh, Dublin and New York, Thomas Nelson and Sons, editors.