சார்லஸ் டிக்கின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சார்லஸ் டிக்கின்ஸ்

சார்லஸ் டிக்கின்ஸ்
பிறப்பு சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கின்ஸ்
பெப்ரவரி 7, 1812(1812-02-07)
இங்கிலாந்தின் கொடி பொர்ட்ஸ் மௌத், இங்கிலாந்து
இறப்பு சூன் 9, 1870(1870-06-09) (அகவை 58)
இங்கிலாந்தின் கொடி காட்ஸ் இல் பிளேஸ், இகம் கெண்ட், இங்கிலாந்து
தொழில் புதின எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
ஒலிவர் டுவிஸ்ட், ஒரு கிறிஸ்துமஸ் கரோல், இரண்டு நகரங்களில் கதை, டேவிட் காப்பர்ஃபீல்ட்
கையொப்பம் Charles Dickens signature 1838.svg

சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (Charles Dickens, 7 பெப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை.

திறனாய்வாளர்களான ஜார்ஜ் கிஸ்ஸிங், ஜி. கே. செஸ்ட்டர்ட்டன் ஆகியோர், டிக்கென்சினது உரைநடைத் திறன், தனித்துவமான, திறமையான ஆளுமை கொண்ட பாத்திரங்களைத் தொடர்ச்சியாக உருவாக்கும் திறமை, அவரது ஆற்றமிக்க சமூக உணர்வு என்பவற்றுக்குச் சான்றளித்துள்ளனர். ஆனால், சக எழுத்தாளர்களான, ஜார்ஜ் ஹென்றி லூயிஸ், ஹென்றி ஜேம்ஸ், வெர்ஜீனியா வூல்ப் ஆகியோர், உணர்ச்சிவசப்பட்ட தன்மை, நம்பமுடியாத நிகழ்வுகள், இயற்கைக்கு மாறான பாத்திரப் படைப்புக்கள் என்பவற்றுக்காக அவரது ஆக்கங்களைக் குறை கூறியுள்ளனர்.

டிக்கென்சின் புதினங்களினதும், சிறுகதைகளினதும் புகழ் காரணமாக அவை தொடர்ச்சியாக அச்சேறி வருகின்றன. டிக்கென்சின் பல புதினங்கள் தொடக்கத்தில் சஞ்சிகை போன்றவற்றில் தொடராக வெளிவந்தவை. இது அக்காலத்தில் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு வடிவமாக இருந்தது. எனினும், அக்காலத்துத் தொடர்கதை எழுத்தாளர்கள் பலரைப்போல, டிக்கென்ஸ், வெளியிடத் தொடங்கு முன்னரே புதினம் முழுவதையும் எழுதி முடிப்பதில்லை. இவர், வெளிவரும் ஒழுங்கில் பகுதி பகுதியாகவே புதினங்களை எழுதினார். இந்த முறை, ஒவ்வொரு வெளியீட்டையும் வாசித்து முடித்ததும் அடுத்த வெளியீட்டை எதிர்பார்த்திருக்கும் ஆவலைத் தூண்டும்படி எழுத வசதியானது.

சார்லசு டிக்கின்சு அடக்கம் செய்ய விரும்பிய இடம். உரோச்சட்டர் ஆலயத்தின் முன்னால் இந்த நினைவிடம் பதிக்கப்பட்டுள்ளது.

தாக்கங்கள்[தொகு]

ஹொனோரே டி பால்சாக், மிகுவேல் டி செர்வாண்டெஸ், விக்டர் ஹியூகோ, வாஷிங்டன் இர்விங், வில்லியம் ஷேக்ஸ்பியர்

பின்பற்றுவோர்[தொகு]

டி. கொராகேசன் போய்ல், ஃபியோடர் டொஸ்தோவ்ஸ்கி, ஜார்ஜ் கிஸ்ஸிங், தாமஸ் ஹார்டி, ஜான் இர்விங், எட்கார் அலன் போ, டாம் வோல்ஃப், ஜி. கே. செஸ்டர்ட்டன், ஜார்ஜ் ஆர்வெல், ரே பிராட்பரி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லஸ்_டிக்கின்ஸ்&oldid=2210031" இருந்து மீள்விக்கப்பட்டது