ரே பிராட்பரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரே பிராட்பரி

1975ல் பிராட்பரி
பிறப்பு ரே டக்ளஸ் பிராட்பரி
ஆகஸ்ட் 20, 1920
வாகேகன், இலினொய், அமெரிக்கா
இறப்பு ஜுன் 5, 2012
தொழில் எழுத்தாளர்
நாடு அமெரிக்கா
இலக்கிய வகை அறிபுனை, கனவுருப்புனைவு, திகில் புனைவு, மர்மப் புனைவு, கவிதை
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
பாரன்ஃகைட் 451, தி இல்லுஸ்டிரேட்டட் மேன், தி மார்ஷியன் குரோனிகிள்ஸ்
கையொப்பம் Ray Bradbury Autograph.svg
http://www.raybradbury.com/

ரே பிராட்பரி (Ray Bradbury, ஆகத்து 22, 1920 - சூன் 5, 2012) ஒரு அமெரிக்க ஆங்கில எழுத்தாளர். அறிபுனை, கனவுருப்புனைவு, திகில் புனைவு, மர்மப் புனைவு போன்ற பல பாணிகளில் எழுதி புகழ் பெற்றவர். 20ம் நூற்றாண்டின் ஊகப் புனைவு எழுத்தாளர்களுள் முதன்மையானவராக கருதப்படுவோரில் இவரும் ஒருவர். முதலில் காகிதக்கூழ் இதழ்களில் வெளியான பிராட்பரியின் கதைகள் பின்னர் இலக்கிய உலகில் மதிப்பு பெற்ற பதிப்பகங்களின் வாயிலாக வெளியாக தொடங்கின. அறிபுனை படைப்புகளில் ஆரம்பித்து பின்னர் பல்வேறு பாணிகளிலும் கதைகளை எழுதினார் பிராட்பரி; இவர் கவிதைகளையும் எழுதியுள்ளார். 1950களில் இவரது பல கதைகள் ஈசி காமிக்ஸ் நிறுவனத்தால் படக்கதைகளாக வெளியிடப்பட்டன.

இவர் எழுதிய பிறழ்ந்த உலகுப் (dystopia) புதினமான பாரன்ஃகைட் 451 உலகப்புகழ் பெற்றது. இது தவிர தி மார்ஷியன் குரோனிகிள்ஸ், தி இல்லுஸ்டிரேட்டட் மேன் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க பிற படைப்புகள். இவரது புத்தகங்கள் பல திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. பிராட்பரி தனது படைப்புகளுக்காக பல்சார் விருது, அமெரிக்க தேசிய கலைப் பதக்கம், சிறப்பு புலிட்சர் பரிசு, எம்மி விருது உடபட பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். அமெரிக்கை அறிபுனை மற்றும் கனவ்ருப்புனைவு எழுத்தாளர்கள் சங்கம் ஆண்டு தோறும் வழங்கும் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதிற்கு “ரே பிராட்பரி விருது” என்று பெயரிட்டுள்ளது. இவரை கெளரவிக்கும் வண்ணம் ஒரு சிறுகோளுக்கு “பிராட்பரி 9666” என்று பெயரிடப்படுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Rough Guide To Cult Fiction", Tom Bullough, et al., Penguin Books Ltd, London, 2005, p.35
  2. King, Stephen (1981). Stephen King's danse macabre. Macdonald. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0354046470. "My first experience of real horror came at the hands of Ray Bradbury." 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரே_பிராட்பரி&oldid=3602898" இருந்து மீள்விக்கப்பட்டது