மர்மப் புனைவு
மர்மப் புனைவு (Mystery fiction) என்பது ஒருவித இலக்கிய பாணி. குற்றப்புனைவு, துப்பறிவுப் புனைவு போன்ற பாணிகளுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. பல புனைவுப் படைப்புகளை இம்மூன்று பாணிகளின் கீழும் வகைப்படுத்தலாம், இவ்விரு பாணிகளுக்கும் மர்மப்புனைவுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு - அவை பலதரப்பட்ட விசயங்களை உள்ளடக்கியிருக்கும், ஆனால் மர்மப் புனைவுப் படைப்புகள் அவற்றில் ஒரு அங்கமான புதிர்களைப் (யார் செய்தது?) பற்றி மட்டும் எழுதப்படுகின்றன. சில நேரங்களில் குற்றங்களைப் பற்றியல்லாமல், அமானுடப் புதிர்களைப் பற்றியான படைப்புகளும் மர்மப் புனைவாகக் கொள்ளப்படுகின்றன. மர்மப் புனைவுகளுள் பல வகைகள் இருந்தாலும், கொலை நிகழ்ந்து கொலையாளி யார் என்ற மர்மத்தை அவிழ்க்கும் கதைகளே பிரபலமாக உள்ளன. இதமான மர்மப்புனைவு, பூட்டிய அறை மர்மப்புனைவு, யார் செய்தது?, காவல்துறை செய்முறைப்புனைவு போன்றவை மர்மப்புனைவின் பிற பிரபலமான உட்பாணிகள்.