விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 22
Appearance
அக்டோபர் 22: பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள்
- 1707 – சில்லி கடற்படைப் பேரழிவு (படம்): பிரித்தானியாவின் நான்கு அரச கடற்படை கப்பல்கள் கடல்வழிநடத்துதலின் தவறால் சில்லி தீவுகளில் மூழ்கியதில் 1,400 கடற்படையினர் உயிரிழந்தனர். இதன் காரணமாக முதலாவது நெடுங்கோட்டுச் சட்டம் 1714 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1879 – தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின் வெள்ளொளிர் விளக்கைப் பரிசோதித்தார். இது 13½ மணி நேரம் எரிந்தது.
- 1943 – செருமனி மீது பிரித்தானிய அரச வான்படையினரின் இரண்டாவது நெருப்புப்புயல் தாக்குதலின் போது, காசெல் நகரில் 10,000 பேர் கொல்லப்பட்டனர், 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.
- 1965 – இந்தியா-பாக்கித்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
- 1975 – சோவியத்தின் ஆளில்லா விண்கலம் வெனேரா 9 வெள்ளிக் கோள் மீது தரையிறங்கியது.
- 2007 – எல்லாளன் நடவடிக்கை: இலங்கையின் அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 20 பேரும், படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.
- 2008 – இந்தியா சந்திரனை நோக்கிய சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
மிரோன் வின்சுலோ (இ. 1864) · செ. இராசநாயகம் (பி. 1870) · அ. மாதவையா (இ. 1925)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 21 – அக்டோபர் 23 – அக்டோபர் 24