பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ISAD ribbon

பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள் (International Stuttering Awareness Day, ISAD), அல்லது பன்னாட்டு திணறல் விழிப்புணர்வு நாள் (International Stammering Awareness Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 22 ஆம் நாள் கொண்டாடப்படும் ஓர் நிகழ்வாகும். இது முதன் முதலில் 1998 இல் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது.[1] உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதமானோர்[2] திக்குவாய் அல்லது திணறுபவர்களாக உள்ளனர், இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நோக்கமாக உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், உலகெங்கிலும் உள்ள திக்குவாய் சமூகங்கள் மற்றும் சங்கங்கள் ஒன்று கூடி, சமூகத்தின் சில அம்சங்கள் திக்குவாய் நபர்களுக்கு எவ்வாறு கடினமாக இருக்கும்; எதிர்மறை அணுகுமுறைகளைம் பாகுபாடுகளையும் எதிர்கொள்ளல்; திக்குவாய் நபர்கள் பதட்டமானவர்கள் அல்லது குறைந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என்ற கட்டுக்கதைகளை நீக்கல் போன்றவற்றை முன்னிலைப்படுத்த நிகழ்வுகளையும் பிரச்சாரங்களையும் நடத்துகின்றன.[3]

அறிவியல், அரசியல், தத்துவம், கலை, திரைப்படம், இசை ஆகிய துறைகளில் உலகில் தடம் பதித்த அல்லது பதித்துக் கொண்டிருக்கும் பல குறிப்பிடத்தக்க நபர்களையும் இந்நாள் கொண்டாடுகிறது.

நிகழ்வுகள்[தொகு]

பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1 முதல் 22 வரை நடைபெறும் இணையவழி மாநாட்டை உள்ளடக்கியது,[4] இம்மாநாடு திக்குவாயில் ஆர்வம் உள்ளவர்கள், பேச்சுமொழி நோயியல் வல்லுநர்கள், அவர்களின் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு நடைபெறுகிறது.[3] 1998 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாநாடுகள் அனைத்தும் இணையவழியில் காணக் கிடைக்கின்றன.[5] உலகம் முழுவதும் பொது விழிப்புணர்வு நிகழ்வுகள், ஊடகப் பரப்புரை, கல்வி நடவடிக்கைகள் போன்றசையும் இடம்பெறுகின்றன.[6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sugarman, Michael (ஆகத்து 2004). "International Stuttering Awareness Day – ISAD from conception to present day". Minnesota State University, Mankato. 5 திசம்பர் 2004 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 29 அக்டோபர் 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Journée mondiale du BÉGAIEMENT: Un trouble du langage à la rencontre d'autrui". Sante log (ருபெ, பிரான்சு). 22 October 2012. http://www.santelog.com/news/sante-de-l-enfant/journee-mondiale-du-begaiement-un-trouble-du-langage-a-la-rencontre-des-autres_9230_lirelasuite.htm. 
  3. 3.0 3.1 University of the West of England, பிரிஸ்டல், ஐக்கிய இராச்சியம்(25 September 2007). "UWE academic takes part in online stuttering conference". செய்திக் குறிப்பு.
  4. "Nosením zelenej stužky sa dá vyjadriť pochopenie pre koktavých ("Wearing green ribbons can express sympathy for stuttering")". Topky (பிராத்திஸ்லாவா, சிலோவாக்கியா). 20 October 2012. http://www.topky.sk/cl/13/1328371/Nosenim-zelenej-stuzky-sa-da-vyjadrit-pochopenie-pre-koktavych. 
  5. "Conferences".
  6. "International Stuttering Awareness Day (ISAD): October 22". International Stuttering Association. 29 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Stutter group's daredevil stunt". The Epworth Bells and Crowle Advertiser (Epworth, Lincolnshire, UK). 25 October 2012. Archived from the original on 20 ஏப்ரல் 2013. https://archive.is/20130420202630/http://www.epworthbells.co.uk/community/stutter-group-s-daredevil-stunt-1-5060300. 
  8. "3% of the population stutters in Cameroon". 237online.com (Douala, கமரூன்). 23 October 2012. http://www.237online.com/2012102310385/Actualites/Sante/3-de-la-population-est-begue-au-cameroun.html. 

வெளி இணைப்புகள்[தொகு]