சில்லி தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்லித் தீவுகள்
Syllan
Isles of Scilly NASA.jpg
சில்லித் தீவுகளின் வான் ஒளிப்படம்
புவியியல்
அமைவிடம்
45 km (28 mi) கோர்ணிசுத் தீவக்குறையின் தென்மேற்கு
ஆள்கூறுகள்49°56′10″N 6°19′22″W / 49.93611°N 6.32278°W / 49.93611; -6.32278ஆள்கூறுகள்: 49°56′10″N 6°19′22″W / 49.93611°N 6.32278°W / 49.93611; -6.32278
OS grid referenceSV8912
தீவுக்கூட்டம்பிரித்தானியத் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிசெல்டிக் கடல்
ஆங்கிலக் கால்வாய்
அத்திலாந்திக் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்5 inhabited, 140 others
முக்கிய தீவுகள்
பரப்பளவு16.03 km2 (6.19 sq mi) ([[பரப்பளவு அடிப்படையில் ஆங்கில மாவட்டங்களின் பட்டியல்|வார்ப்புரு:English district area rank]])
நிர்வாகம்
நாடுஇங்கிலாந்து
பகுதிதென்மேற்கு
சடங்குபூர்வ மாவட்டம்கோர்ண்வால்
பெரிய குடியிருப்பு
ஹியூ டவுன்
(மக்கள்: 1,068)
தகுதிunitary
நாடாளுமன்ற உறுப்பினர்டெரெக் தாமசு ()
மக்கள்
மக்கள்தொகைவார்ப்புரு:English district population (2011 மதிப்பு · [[மக்கள்தொகை அடிப்படையில் ஆங்கில மாவட்டங்கள்|வார்ப்புரு:English district rank]])
அடர்த்தி137 /km2 (355 /sq mi)
இனக்குழுக்கள்97.3% வெள்ளைப் பிரித்தானியர்
  2.4% பிற வெள்ளையர்
  0.3% கலப்பு [1]
மேலதிக தகவல்கள்
Invalid designation
தெரியப்பட்டது13 August 2001

சில்லித் தீவுகள் (Isles of Scilly), பெரிய பிரித்தானியாவின் கோர்ணிசுத் தீவக்குறையின் தென்மேற்கு முனைக்கு அப்பால் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும். 2011ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இத்தீவுகளின் மொத்த மக்கள்தொகை 2,203. இங்கிலாந்தின் கோர்ன்வால் கவுண்டியின் நேரடி ஆட்சியில் இத்தீவுகள் இருந்து வந்தன. தற்போது இவை தமக்கென ஒரு ஆலோசனைக் குழுவை (council) அமைத்துள்ளன. இத்தீவுகளில் வாழும் மக்கள் சில்லியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

சில்லி கோர்ண்வாலின் செரிமோனியல் கவுண்டியின் ஒரு பகுதி. இதன் சில சேவைகள் கோர்ண்வாலுடன் இணைந்துள்ளன. ஆனாலும், 1890ல் இருந்து இதற்குத் தனியான உள்ளூசாட்சிச் சபை இருந்துவருகிறது. சில்லித் தீவு ஆணை 1930 நிறைவேற்றப்பட்டதில் இருந்து இந்தச் சபை கவுண்டிச் சபை என்னும் தகுதியைப் பெற்றுள்ளதுடன், சில்லித் தீவுகளின் சபை என்று அழைக்கப்படுகிறது. இத் தீவுகளில் உள்ள பெரும்பாலான தீர்வை விலக்கப்பட்ட நிலங்கள் கோர்ண்வால் டியூச்சிக்குச் சொந்தமானவை. வேளாண்மையுடன் சேர்த்து சுற்றுலாத்துறை இத்தீவுகளின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

புவியியல்[தொகு]

சில்லி தீவுகள் இங்கிலாந்தின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ளன. இவற்றில் மொத்தம் ஆறு தீவுகளும் 140 சிறிய தீவுப் பாறைகளும் 45 கிமீ (28 மைல்கள்) தூரத்தில் உள்ளன.

இத்தீவுக்குழமத்தில் உள்ள முக்கிய தீவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

தீவு மக்கள்தொகை
(2001
மதிப்பீடு)
பரப்பளவு
(கிமீ²)
முக்கிய
குடியேற்றம்
சென் மேரீஸ் 1,666 6.29 கியூ நகர்
டிரெஸ்கோ 180 2.97 நியூ கிரிம்ஸ்பி
சென் மார்ட்டின்ஸ் (வெள்ளைத் தீவுடன்) 142 2.37 கயர் நகர்
சென் அக்னஸ் 73 1.48 சென் அக்னஸ்
பிறைகர் (குவீல் உடன்) 92 1.32 பிறைகர்
சாம்சன் -(1) 0.38  
அன்னெட்  – 0.21  
சென் கெலன்ஸ்  – 0.20  
டெயான்  – 0.16  
பெரிய கனிலி  – 0.13  
மீதியான 45 சிறு தீவுகள்  – 0.50  
சில்லி தீவுகள் 2,153 16.03 கியூ நகர்

(1) 1855 வரை மக்களிருந்தனர்.

உசாத்துணை[தொகு]

  1. "Isles of Scilly ethnic groups". Office for National Statistics. 28 ஜூலை 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 December 2012 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லி_தீவுகள்&oldid=3586943" இருந்து மீள்விக்கப்பட்டது