நெருப்புப்புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1988ல் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் ஏற்பட்ட ஒரு நெருப்புப்புயல்

தனக்காக தனியே ஒரு காற்றுத்தொகுதியை உருவாக்கி அவற்றை பராமரித்து நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய பெரும் தீக்கள் நெருப்புப்புயல் அல்லது தீச்சூறாவளி (Firestorm) என்றழைக்கப்படுகின்றன. நெருப்புப் புயல்கள் இயற்கையில் காட்டுத் தீ போன்ற பெரும் தீக்களால் உருவாகுகின்றன. செயற்கையாக வெடிகுண்டுகளையும் எரிகுண்டுகளையும் தக்க இடங்களில் வீசுவதன் மூலம் நகரங்களிலும் இவற்றை உருவாக்க முடியும். இரண்டாம் உலகப் போரில் லண்டன், ஹாம்பர்க், டிரெஸ்டன், ஹிரோஷிமா, ஸ்டாலின்கிராட், டோக்யோ போன்ற நகரங்களின் மீது நடந்த குண்டு வீச்சுகளால் நெருப்புப்புயல்கள் உருவாகின.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெருப்புப்புயல்&oldid=1357177" இருந்து மீள்விக்கப்பட்டது