வாதேசுவரம் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாதேசுவரம் கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அரோலியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.கேரளாவில் உள்ள 108 பழமையான சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். தென்னிந்தியாவில் உள்ள ஏராளமான சிவன் கோவில்களில் இதுவும் நன்கு அறியப்பட்டதாகும். மலை போல் காட்சியளிக்கும் குன்றின் மேல் கட்டப்பட்டுள்ள இது, 'வட மலபாரின் கைலாசம்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

இக்கோயில் அஷ்டதள (எட்டு இதழ்கள்) கட்டிடக்கலை பாணியில் மூஷிக மன்னன் வட்டுகவர்மாவால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தப் பாணியில் கட்டப்பட்ட ஒரே இந்தியக் கோயில் என்ற பெருமையை இது பெறுகிறது. இங்குள்ள மூலவர் சிவன் ஆவார். இங்கு சாஸ்தா மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வழிபடப்படுகின்றனர். இக்கோயில் மலபார் தேவஸ்வம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கண்ணூர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கில் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. [1] இக்கோயில் பாப்பினிசேரி ஊராட்சியில் அரோலி கிராமத்தில் உள்ளது. இது கீச்சேரி மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது, இதனைப் பார்ப்பதற்கு ஒரு மலை போல இருப்பதால்'வட மலபாரின் கைலாசம்' என்றழைக்கப்படுகிறது. அருகில் காலிகட் சர்வதேச விமான நிலையம் உள்ளது. [2] மட்டன்னூர் அருகில் தற்போது கண்ணூர் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

வரலாறு[தொகு]

இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு மூஷிக வம்சத்தைச் சேர்ந்த 43 ஆவது ஆட்சியாளரான அன்றைய மன்னன் வட்டுகவர்மாவால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. [3] மூஷிகவம்ச மகாகாவியத்தில், கவிஞர் அதுல இக்கோயிலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.[4] [5] [6]

வழிபாடு[தொகு]

இக்கோயிலின் மூலவர் சிவன். இவர் வாதேசுவரத்தப்பன் என்றழைக்கப்படுகிறார். இங்கு உமாமஹேஸ்வரர் ஆகக் கருதப்படுகின்ற சிவன், சாஸ்தா, தட்சிணாமூர்த்தி மற்றும் கிராதமூர்த்தி போன்ற தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vadeswaram". vadesweram.blogspot.in.
  2. "Things to Do - Aroli Sree Vadeswaram Shiva Kshethram, Kannur, Kerala". www.nivalink.com.
  3. "Vadeswaram Sree Maha Siva Temple - Hindu Temple, Places of Worship - India - Kannur".
  4. "Aroli Ashtadala Sreekovil Vadeswaram Mahadevar Shiva Temple".
  5. Agrarian Relations in Late Medieval Malabar. https://books.google.com/books?id=kHtbkuXruzwC&q=vadeswaram+temple&pg=PA42. 
  6. "Welcome to the Temples of Gods Own Country".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாதேசுவரம்_கோயில்&oldid=3837164" இலிருந்து மீள்விக்கப்பட்டது