வலைவாசல்:கணினி நிரலாக்கம்
கணினி நிரலாக்கம்
கணினி நிரலாக்கம் (நிரலாக்கம் அல்லது கோடிங் என்றும் அறியப்படும்) என்பது கணினி நிரல்களின் மூல நிரல்குறிகளை வடிவமைத்து, எழுதி, சோதித்து, பிழைநீக்கிப் பேணும் செயல்முறையாகும். மூல நிரலானது ஒன்றோ பலவோ நிரல்மொழிகளால் எழுதப்படும். நிரலாக்கத்தின் நோக்கமானது, கணினிகள் வேண்டியவாறு நடந்துகொள்ளவும், குறித்த செயல்களைச் செய்துமுடிக்கவும் தேவையான ஆணைக்கணங்களை உருவாக்குவதாகும். பெரும்பாலான சமயங்களில் மூல நிரல்களை வடிக்கும் செயல்முறைக்கு பயன்பாட்டு வரம்பு குறித்த அறிவு, சிறப்பு படிமுறைத் தீர்வுகள், ஏரணம் உள்ளிட்ட பல துறைகளில் நிபுணத்துவம் தேவை.
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரை
பகுப்புப் பொறி (Analytical Engine) எனப்படுவது சார்ல்சு பாபேச்சு உருவாக்க முயன்ற ஒரு பொறியாகும். சோசவு சக்குவாடு என்பவர் கண்டுபிடித்த பொறி நெசவுக் கருவியின் மூலம் துணியில் கோலவுருக்களைப் பதிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட துளையட்டை மூலம் ஏற்பட்ட உற்சாகமே 1833இல் சார்ல்சு பாபேச்சைப் பகுப்புப் பொறி ஒன்றை உருவாக்கத் தூண்டியது.
சிறப்புகள்
இதிலே தரவுகளை ஊட்டுதல், முறைவழிப்படுத்தல், வெளியீடு, சேமித்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்வதற்கு உரிய துணைப் பாகங்கள் காணப்பட்டன. இது இன்றைய கணினிகள் செய்யக்கூடிய அனைத்தையும் கொள்கையளவில் செய்வதற்கு ஆற்றலுடையதாக இருந்தது. ஆனால், பகுப்புப் பொறி மின்சாரத்தினால் இயங்காதபடியினால் விரைவாக இயங்கவில்லை. 19ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்பம் போதியளவு முன்னேற்றகரமாக இல்லாததனால் இந்தப் பொறியை முழுமையாக உருவாக்க முடியவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட சுயசரிதை
வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (ஆங்கிலம்: William Henry Gates அ Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட படம்
குனூ நானோ என்பது யுனிக்சு போன்ற இயக்குதளங்களுக்கான உரை தொகுப்பி. தொடரியல் எடுத்துக்காட்டுதல் போல நிரலாக்குவோருக்குப் பயன் தரும் அம்சங்கள் கொண்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
- ...ஜாவாவின் சொந்த இணைய உலவியான ஹாட்ஜாவாவைத் தவிர்த்து ஜாவாவை ஏற்றுக்கொண்ட முதல் உலவி நெட்ஸ்கேப் தான் என்பது?
- ... ஜாவா நிகழ்நேர சூழல் எழுபது கோடிக்கும் மேலான தனிக் கணினிகளுள் காணப்படும் என்று?
பகுப்புகள்