மென்பொருட் சோதனை
மென்பொருள் சோதனை (Software testing) மென்பொருளின் தரத்தை உறுதிப்படுத்தும் ஓர் படிமுறையாகும். மென்பொருட் சோதனையானது அளந்தறிமுறையிலான மென் வழுக்களை ஆய்ந்தறியும் ஓர் வழிமுறையாகும். இப்படிமுறையில் மென்பொருள் அல்லது நிரலானது சோதிக்கப்படுவதுடன். சோதனை மூலம் எழுமாற்ற மென்பொருளின் பிழைகள் எல்லாவற்றையும் கண்டறிய இயலாது.
காலஓட்டத்தில் மென்பொருளானது கூடுதல் வசதிகளுடனும் அளவிலும் பெருகி வந்துள்ளது. ஒவ்வொரு மென்பொருளும் அதற்குரிய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக கணினி விளையாட்டு மென்பொருளானது ஓர் வணிக வங்கி ஒன்றின் வாடிக்கையாளர்களை விட முற்றிலும் மாறுபட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. மென்பொருட் சோதனையானது மென்பொருளை மதிப்பீடு செய்யும் ஓர் படிமுறையாகும்.
எல்லைகள்
[தொகு]இப்படிமுறையானது மென்பொருட் தர உறுதிப்பாட்டு வழிமுறையில் ஓர் முக்கிய படிமுறையாகக் கருதப்படுகின்றது. ஏற்றுக் கொள்ளப்பட்ட வழுவீதம் ஆனது மென்பொருளுக்கு மென்பொருள் மாறுபடும். எடுத்துக்காட்டாக கணினி விளையாட்டு மென்பொருளில் விமானம் ஒன்றின் பறப்பில் பிழைகள் இருப்பின் பெரிதான விடயமாகக் கருதவேண்டியதில்லை ஆயினும் இது உண்மையான விமானம் ஒன்றை இயக்குவதோ அல்லது கண்காணிப்பதற்கான மென்பொருள் எனின் கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டும்.
மேலிருந்து கீழ்வரும் மற்றும் கீழிருந்து மேற்செல்லும் அணுகுமுறைகள்
[தொகு]பொதுவாக நிரலாக்கலின் பகுதிகள் சோதிக்கப்பட்டபின்னரே முழுமையான நிரலாக்கம் ஆனது சோதிக்கப்படும். பெரிய நிரலாக்கல்கள் பகுதிகளாகப் பிரிக்கப்படாவிட்டால் எங்கே பிழைகள் இருக்கின்றன எனக் கண்டறிவது கடினம் ஆகும். பொதுவாகப் பகுதிகளாகப் பிரித்தே நிரலாக்கர்கள் நிரலை எழுதுவதாக எடுத்துக்கொண்டு சோதனையைத் தொடங்கலாம்.
மேலிருந்து கீழான அணுகுமுறையில் முதலில் நிரலாக்கலில் மேலிருந்து சோதனையை ஆரம்பித்து ஒவ்வொரு பகுதிகள் (மாடியூல்கள் Modules) தேவைக்கேற்பக் கோரும் இடத்தில் சோதித்து முழுமையான தொகுதியையும் சோதிக்கலாம். இதன்போது பகுதிக்கான நிரலாக்கத்தை எழுதி அந்தப் பகுதியை அபிநயித்துக் காட்டுமாறு கோரப்படும்.
கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும் சோதனையில் கீழுழ்ள பகுதிகள் முதலில் சோதிக்கப்படும். முதலில் ஆகவும் கீழே உள்ள வேறு ஒரு பகுதியில் இல்லாதது தேர்ந்தெடுக்கப்பட்டு சோதிக்கப்படும்.
உசாத்துணைகள்
[தொகு]- மென்பொருட் பொறியியல், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (ஆங்கில மொழியில்).