பகுப்புப் பொறி
Appearance
பகுப்புப் பொறி (Analytical Engine) எனப்படுவது சார்ல்சு பாபேச்சு உருவாக்க முயன்ற ஒரு பொறியாகும். சோசவு சக்குவாடு என்பவர் கண்டுபிடித்த பொறி நெசவுக் கருவியின் மூலம் துணியில் கோலவுருக்களைப் பதிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட துளையட்டை மூலம் ஏற்பட்ட உற்சாகமே 1833இல் சார்ல்சு பாபேச்சைப் பகுப்புப் பொறி ஒன்றை உருவாக்கத் தூண்டியது.[1]
சிறப்புகள்
[தொகு]இதிலே தரவுகளை ஊட்டுதல், முறைவழிப்படுத்தல், வெளியீடு, சேமித்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்வதற்கு உரிய துணைப் பாகங்கள் காணப்பட்டன. இது இன்றைய கணினிகள் செய்யக்கூடிய அனைத்தையும் கொள்கையளவில் செய்வதற்கு ஆற்றலுடையதாக இருந்தது. ஆனால், பகுப்புப் பொறி மின்சாரத்தினால் இயங்காதபடியினால் விரைவாக இயங்கவில்லை. 19ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்பம் போதியளவு முன்னேற்றகரமாக இல்லாததனால் இந்தப் பொறியை முழுமையாக உருவாக்க முடியவில்லை.[2]