வட துருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வட முனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆர்க்டிக் கடலையும் வட துருவத்தையும் காட்டும் ஒரு திசைவில் வீழ்ப்பு.
வட துருவக் காட்சி

வட துருவம் புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள, அதன் சுழல் அச்சும், மேற்பரப்பும் சந்திக்கும் புள்ளியைக் குறிக்கும். இதை, புவியியல் வட துருவம் என்றும் புவிசார் வட துருவம் என்றும் அழைப்பதுண்டு. இது காந்தவியல் வட துருவத்தில் இருந்தும் வேறுபட்டது.

வட துருவம் புவியின் வட கடைக் கோடியில் உள்ள புள்ளி, தென் துருவத்துக்கு நேர் எதிராக உள்ளது. இது நிலநேர்க்கோடு 90° வடக்கையும், உண்மை வடக்குத் திசையையும் குறிக்கிறது. வட துருவத்தில் எல்லாத் திசைகளும் தெற்கையே குறிக்கின்றன.

நிலத்திணிவின் ஒரு பகுதியாக உள்ள தென் துருவம் போலன்றி வட துருவம், தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டிருக்கும் கடற் பனிக்கட்டிகளால் நிரந்தரமாக மூடப்பட்டு ஆர்க்டிக் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ளது. இதனால் நிரந்தரமான நிலையம் ஒன்றை வட துருவத்தில் நிறுவுவது இயலாததாக உள்ளது. எனினும், முன்னைய சோவித ஒன்றியமும், பின் வந்த ரஷ்யாவும் பல ஆளியக்கு மிதக்கும் நிலையங்களை நிறுவியுள்ளன. இவற்றுட் சில வட துருவத்துக்கு மிக அண்மையில் உள்ளன. ஆர்க்டிக் சுருக்கம் காரணமாக, 2050 ஆம் ஆண்டளவில், வட துருவத்தில் பனியற்ற பருவகாலம் ஏற்படக்கூடும் என அண்மையில் சில அறிவியலாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

வட துருவத்தின் கீழ் கடலின் ஆழம் 4261 மீட்டர் (13,980 அடி) என அளக்கப்பட்டுள்ளது. இதற்கு மிக அண்மையில் உள்ள நிலப்பகுதி காஃப்பேகுளூப்பென் தீவு ஆகும். இது கிறீன்லாந்துக் கரையில் இருந்து 440 மைல்கள் (700 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது. நிரந்தரமற்ற உடைகல் நிலப்பகுதிகள் சில மேலும் சிறு தொலைவு வடக்கே அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெளி இணைப்பு[தொகு]

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடான அண்டார்டிகா கண்டத்தின் வரலாறு, புவியியல், அறிவியல் அம்சங்கள் அனைத்துமே விவரிக்கப்பட்டுள்ள முழுநூல். ISBN 81-8368-228-6

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_துருவம்&oldid=2303661" இருந்து மீள்விக்கப்பட்டது