காஃபெக்லுபென் தீவு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காஃபெக்லுபென் தீவு (டேனிய மொழி: Kaffeklubben Ø; கிரீன்லாந்து மொழி: Inuit Qeqertaat) கிரீன்லாந்தின் வடக்கு முனை அருகில் அமைந்த தீவு. உலகின் மிக வடக்கான நிலமே இத்தீவு. வட துருவத்திலிருந்து 713.5 கிமீ தொலைவில் அமைந்த இத்தீவு 1 கிமீ நீளம், 300 மீ அகலம் கொண்டது.
1921இல் டென்மார்க்கை சேர்ந்த தேடல் பயணர் லவுகே கோக்கால் முதலாக இத்தீவு காணப்பட்டது. இத்தீவை காஃபெக்லுபென் தீவு, அதாவது "காபி மன்றத் தீவு" (Coffee Club Island) என்று பெயர் வைத்தார்.
இத்தீவின் வடக்கில் சில வேளைகளில் குறுங்காலமாக மணல் தடைகள் உருவாக்கப்படும், ஆனால் இத்தடைகள் மிக வடக்கான நிலமாக அறிவியலாளர்களால் அங்கீகரிக்கப்படவில்லை.