வட அத்திலாந்திக் ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தம் (North Atlantic Treaty) என்பது வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்புக்கான (நேட்டோ) சட்டப்பூர்வ அடிப்படையை உருவாக்கி, செயல்படுத்திய ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் நான்காம் நாள் வாசிங்டனில் கையெழுத்தானது.

பின்னணி[தொகு]

இந்த ஒப்பந்தம் 1949, ஏப்ரல் நான்காம் நாள் வாசிங்டன், டி.சி.யில் அமெரிக்க இராஜதந்திரி தியோடர் அகில்லெஸ் தலைமையிலான குழுவால் கையெழுத்திடப்பட்டது. முன்னதாக 1948 மார்ச் 22 மற்றும் ஏப்ரல் 1 க்கு இடையில் பென்டகனில் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன, அது குறித்து அகில்லெஸ் கூறியது:

பேச்சுவார்த்தைகள் சுமார் இரண்டு வாரங்கள் நீடித்தன, அவை முடிவதற்குள், ஒரு ஒப்பந்தம் இருக்கும் என்று இரகசியமாக ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் எனது பொறுப்பின் கீழ் இழுப்பறையில் ஒன்றில் ஒப்பந்த வரைவை வைத்திருந்தேன். இது ஜாக் [ ஹிக்கர்சன் ] தவிர யாருக்கும் காட்டப்படவில்லை. நானே அதை வைத்திருந்தேன் என்று கருதுகிறேன். ஆனால் 1950 இல் நான் அத்துறையை விட்டு வெளியேறியபோது, நான் அதை பொறுப்பாக பெட்டகத்தில் வைத்துவிட்டேன். அதன்பிறகு என்னால் அதைக் காப்பகத்தில் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது ரியோ உடன்படிக்கை மற்றும் பிரஸ்ஸல்ஸ் உடன்படிக்கையின் ஒரு பகுதியைப் கொண்டதாக இருந்தது. இறுதி வட அத்திலாந்திக் உடன்படிக்கையின் பொதுவான வடிவம் மற்றும் எனது முதல் வரைவின் நல்ல பிரதி, ஆனால் அதில் பல முக்கிய வேறுபாடுகளும் இருந்தன. [1]

அகில்லெஸின் கூற்றுப்படி, ஒப்பந்தத்தின் மற்றொரு முக்கியமான உருவாக்குநர் ஜான் டி. ஹிக்கர்சன் :

எந்தவொரு நபரையும் விட ஒப்பந்தத்தின் தன்மை, உள்ளடக்கம், வடிவம் ஆகியவற்றிற்கு ஜாக் பொறுப்பானவராக இருந்தார். . . இது ஹிக்கர்சன் என்ற ஒரு நபர் ஒப்பந்தம். [1]

நேட்டோவின் ஒரு அடிப்படை அங்கமாக, வட அத்திலாந்திக் உடன்படிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் முடிவில் அதிகப்படியான ஆதிக்கத்தைத் தவிர்க்கவும், அதன் விளைவாக ஐரோப்பாவில் பன்முகத்தன்மையைத் தொடரவும் அமெரிக்கா விரும்பியதன் விளைவாகும். [2] இது மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவின் கூட்டுப் பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு பகுதியாகும். [3] இந்த ஒப்பந்தம் மேற்கு ஐரோப்பாவிற்கு எதிராக சோவியத் ஒன்றியம் ஆயுதத் தாக்குதல் தொடுக்கலாம் என்ற அச்சத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது, [4] எனினும் பனிப்போரின் போது பரஸ்பர தற்காப்பு விதிக்கான தேவை இருக்கவில்லை.

உறுப்பினர்கள்[தொகு]

நிறுவனர் உறுப்பினர்கள்[தொகு]

தற்போதைய நேட்டோ உறுப்பு நாடுகள்
காலப்போக்கில் நேட்டோ உறுப்பினர்களின் இயங்குபட வரைபடம்

பின்வரும் பன்னிரண்டு அரசுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதனால் அவை நேட்டோவின் நிறுவன உறுப்பினர்களாக ஆயின. பின்வரும் தலைவர்கள் 1949, ஏப்ரல் நான்காம் நாளன்று வாஷிங்டன், டி. சி.யில் தங்கள் நாடுகளின் முழு அங்கிகாரம் பெற்றவர்களாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்: [5]

 •  பெல்ஜியம் – பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் பால்-ஹென்றி ஸ்பேக் மற்றும் தூதர் பரோன் ராபர்ட் சில்வர்க்ரூஸ்
 •  கனடா – வெளியுறவுத்துறை செயலர் லெஸ்டர் பி. பியர்சன் மற்றும் தூதர் எச்எச் ராங்
 •  டென்மார்க் – வெளியுறவு அமைச்சர் குஸ்டாவ் ராஸ்முசென் மற்றும் தூதர் என்ரிக் காஃப்மேன்
 • பிரான்சு – வெளியுறவு அமைச்சர் ராபர்ட் ஷுமன் மற்றும் தூதர் என்றி போனட்
 •  ஐசுலாந்து – வெளியுறவு அமைச்சர் பிஜர்னி பெனெடிக்ட்சன் மற்றும் தூதர் தோர் தோர்ஸ்
 •  இத்தாலி – வெளியுறவு அமைச்சர் கார்லோ ஸ்ஃபோர்சா மற்றும் தூதர் ஆல்பர்டோ டார்ச்சியானி
 •  லக்சம்பர்க் – வெளியுறவு அமைச்சர் ஜோசப் பெச் மற்றும் தூதர் ஈகுலு கேல 
 •  நெதர்லாந்து – வெளியுறவு அமைச்சர் டர்க் ஸ்டிக்கர் மற்றும் தூதர் ஈகோ வான் கிளபன்
 •  நோர்வே – வெளியுறவு அமைச்சர் ஆல்வர்ட் லாங்கே மற்றும் தூதர் வில்ஹெல்ம் வான் முன்தே அஃப் மோர்கென்ஸ்டியர்ன்
 • எஸ்டாடோ நோவோ – வெளியுறவு அமைச்சர் ஜோஸ் கெய்ரோ டா மாதா மற்றும் தூதர் பெட்ரோ டியோடோனியோ பெரேரா
 •  ஐக்கிய இராச்சியம் – வெளியுறவுச் செயலாளர் எர்னஸ்ட் பெவின் மற்றும் தூதர் ஆலிவர் ஃபிராங்க்ஸ், பரோன் ஃபிராங்க்ஸ்
 •  ஐக்கிய அமெரிக்கா – அரசு செயலாளர் டீன் அச்செசன்

சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்பு அடுத்த கட்டத்தில் இணைந்த உறுப்பினர்கள்[தொகு]

12 நிறுவனர் உறுப்பு நாடுகளுக்குப் பிறகு பின்வரும் நான்கு அரசுகள் புதியதாக ஒப்பந்தத்தில் இணைந்தன. இது சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்பு என்பது குறிப்பிடத்தக்கது:

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு இணைந்த உறுப்பினர்கள்[தொகு]

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு பின்வரும் 15 நாடுகள் ஒப்பந்தத்தில் இணைந்தன:

வெளியேறுதல்[தொகு]

எந்த அரசும் அதன் உறுப்புரிமையை ரத்து செய்யவில்லை ஆனால் உறுப்பு நாடுகளின் சில குடியேற்ற நாடுகள் விடுதலைப் பெற்ற பிறகு உறுப்பினராகக் கோரிக்கை விடுக்கவில்லை:

 •  சைப்பிரசு (1960 இல் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து விடுதலை)
 •  அல்ஜீரியா (1962 இல் பிரான்சிடம் இருந்து விடுதலை)
 •  மால்ட்டா (1964 இல் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து விடுதலை)

மேலும் பார்க்கவும்[தொகு]

விளக்கக் குறிப்புகள்[தொகு]

 1. கிரேக்க இராச்சியமாக இணைந்தது.
 2. மேற்கு செருமனியாக இணைந்தது. 1990 இல் செருமானிய மீளிணைவுக்குப் பின்னர், முன்னாள் கிழக்கு செருமனி பிரதேசமும் நேட்டோவின் பாதுகாப்புக்குள் வந்தது.

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 "Theodore Achilles Oral History Interview". Truman Library. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.
 2. Cha, Victor (Winter 2009–2010). "Powerplay: Origins of U.S. Alliances in Asia". International Security 34 (3): 158–196. doi:10.1162/isec.2010.34.3.158. 
 3. Mabon, David W. (May 1988). "Elusive Agreements: The Pacific Pact Proposals of 1949-1951". Pacific Historical Review 57 (2): 147–178. doi:10.2307/4492264. 
 4. "A short history of NATO". NATO (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 November 2022.
 5. "NATO Declassified - Treaty Signatories". NATO.