உள்ளடக்கத்துக்குச் செல்

வடகரை மலைமேல் வைத்தியநாத சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மலைமேல் வைத்தியநாத சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தேனி
அமைவிடம்:பெரியகுளம் நகர், வடகரை, பெரியகுளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பெரியகுளம்
மக்களவைத் தொகுதி:தேனி
கோயில் தகவல்
மூலவர்:வைத்தியநாத சுவாமி
தாயார்:தையல் நாயகி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரைப்பெருந்திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வடகரை மலைமேல் வைத்தியநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், வடகரை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் வைத்தியநாத சுவாமி, தையல் நாயகி அம்மன் சன்னதிகளும், படி விநாயகர், மூல விநாயகர், ஜீரத்தேவர், சன்டிகேஸ்வர், தட்சணமூர்த்தி, சரஸ்வதி, லட்சுமி, சுப்ரமணியர், பைரவர், நவகிரகங்கள், சூரியன், சந்திரன், உற்சவர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்திரைப்பெருந்திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.