உள்ளடக்கத்துக்குச் செல்

லுத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுத்ரா
யூரேசிய நீர்நாய் (லுத்ரா லுத்ரா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மசுடெலிடே
பேரினம்:
லுத்ரா
மாதிரி இனம்
யூரேசிய நீர்நாய்
லின்னேயஸ், 1758
சிற்றினம்
  • லுத்ரா லுத்ரா
  • லுத்ரா சுமத்ரானா
  • லுத்ரா நிப்பான்
லுத்ரா லுத்ரா பரம்பல், (பழுப்பு), லுத்ரா சுமத்ரானா (பச்சை)

லுத்ரா என்பது நீர்நாய்களின் பேரினமாகும். இது லுட்ரினே துணைக்குடும்பத்தில் உள்ள ஏழு பேரினங்களில் ஒன்றாகும்.

வகைப்பாட்டியல்

[தொகு]

இந்த பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன:

பரவியுள்ள இனங்கள்

[தொகு]
படம் விலங்கியல் பெயர் பொது பெயர் பரவல்
லு. லுத்ரா யூரேசிய நீர்நாய் ஐரோப்பாவின் கடற்கரைகள், ஆசியாவின் பல பகுதிகள் மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகள்
லு. சுமத்ரானா கூந்தல்-மூக்கு நீர்நாய் தென்கிழக்கு ஆசியா

அழிந்துபோன சிற்றினங்கள்

[தொகு]
படம் விலங்கியல் பெயர் பொது பெயர் பரவல்
லு. நிப்பான் ஜப்பானிய நீர்நாய் ஜப்பான்
  • லுத்ரா அபினிசு
  • லுத்ரா பிரெசானா
  • லுத்ரா பிராவர்டி
  • லுத்ரா காசுடிக்லியோனிசு
  • லுத்ரா யூகெசினா
  • லுத்ரா பாத்திமாசோஹ்ரே
  • லுத்ரா பிராங்கோனிகா
  • லுத்ரா பலேண்டிகா
  • லுத்ரா சிம்ப்ளிசிடென்சு
  • லுத்ரா டிரினாக்ரியா

பிலியோசீன் சகாப்தத்தின் பிற்பகுதியில் ஆசியாவில் இந்த பேரினமானது பெரும்பாலும் தோன்றியிருக்கலாம்.[1] இந்தப் பேரினத்தைச் சேர்ந்த மிகப் பழமையான புதைபடிமமானது லு. பலேயின்டிகா சிற்றினத்தைச் சேர்ந்தது. இது பிலியோசீனின் பிற்பகுதியினைச் சார்ந்தது.[2]

வாழ்விடம்

[தொகு]

லுத்ரா சிற்றினங்கள் பகுதி நீர் வாழ் பாலூட்டிகள், எனவே இவை நீர் மற்றும் நிலம் இரண்டிலும் வாழ்வதற்கேற்ற தகவமைப்பினைக் கொண்டுள்ளன. முதிர்ந்த மரங்கள் மற்றும் பாறைகளால் சூழப்பட்ட நீரோடைகளின் ஆழமற்ற, குறுகிய பகுதிகளை இவை விரும்புகின்றன. இவை மீன்களை உண்ணுகின்றன. குறைவான மக்கள் நடமாட்டப் பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. ஆனால் தாவரங்கள் மற்றும் பாறைகள் இல்லாத பகுதிகளை முற்றிலுமாகத் தவிர்க்கின்றன.[3]

உணவு

[தொகு]

நீர்நாய்களின் உணவானது முக்கியமாக மீன்களைக் கொண்டிருக்கின்றன (எனவே, நீர் வாழ் சூழல்). இருப்பினும், குளிர்காலம் மற்றும் குளிர்ந்த சூழல்களில், மீன் நுகர்வு கணிசமாகக் குறைவாக இருக்கும் போது மற்ற வளங்களைத் தங்கள் உணவிற்காகப் பயன்படுத்துகின்றன. இவற்றின் உணவுகளில் நீர்நில வாழ்வன (முக்கியமாகத் தவளைகள் மற்றும் குளத்து ஆமைகள்), பறவை (முக்கியமாக வாத்துக்கள்), சிறிய கொறிணி மற்றும் நீர் வண்டு, நத்தை மற்றும் நண்டு போன்ற முதுகெலும்பிலி உயிரிகள் இருக்கலாம். இவை தாவரங்களையும், குறிப்பாகப் புற்களையும் உண்கின்றன. இந்த பன்முகத்தன்மை கொண்ட இரை மற்றும் இவற்றின் உணவுக்கான ஆதாரங்களுடன், நீர்நாய்கள் கிடைப்பனவற்றை உண்ணும் "சந்தர்ப்பவாத உண்பவர்களாக" கருதப்படுகின்றன.[4]

நடத்தை

[தொகு]

சில நீர்நாய்கள் தனிமையில் வாழ்கின்றன, மற்றவை குழுக்களாக வாழ்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Koepfli, K.-P. (2008). "Multigene phylogeny of the Mustelidae: Resolving relationships, tempo and biogeographic history of a mammalian adaptive radiation". BMC Biology 6 (10): 10. doi:10.1186/1741-7007-6-10. பப்மெட்:18275614. 
  2. Larivière, S. (2002). "Lutra maculicollis". Mammalian Species 712: Number 712: pp. 1–6. doi:10.1644/1545-1410(2002)712<0001:LM>2.0.CO;2. 
  3. Cho, Hee-Sun; Choi, Kwang-Hee; Lee, Sang-Don; Park, Young-Seuk (2009). "Characterizing habitat preference of Eurasian river otter (Lutra lutra) in streams using a self-organizing map". Limnology 10 (3): 203. doi:10.1007/s10201-009-0275-7. 
  4. Lanszki, József; Molnár, M.; Molnár, T. (2006). "Factors affecting the predation of otter (Lutra lutra) on European pond turtle (Emys orbicularis)". Journal of Zoology 270 (2): 219. doi:10.1111/j.1469-7998.2006.00132.x. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுத்ரா&oldid=3489507" இலிருந்து மீள்விக்கப்பட்டது