லிட்டில் இந்தியா, சிங்கப்பூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லிட்டில் இந்தியா | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 小印度 |
• பின்யின் | Xiǎo Yìndù |
• மலாய் | Little India |
• ஆங்கிலம் | Little India |
![]() லிட்டில் இந்தியா, கடைப்பகுதி | |
நாடு | சிங்கப்பூர் |
லிட்டில் இந்தியா, சிங்கப்பூரில், சிங்கப்பூர் ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும். இது, சிங்கப்பூர், சைனாடவுனுக்கு எதிரே ஆற்றுக்கு அடுத்த பக்கத்திலும், கம்ப்பொங் கிலாமுக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. உள்ளூர் தமிழ் மக்கள் இதனைத் தேக்கா என்று அழைப்பதுண்டு.
வரலாறு[தொகு]
லிட்டில் இந்தியா, சூலியா காம்பொங் பகுதியிலிருந்து வேறானது. இனங்களைப் பிரித்து வைக்கும் பிரித்தானியக் கொள்கைப்படி, தமிழ் குடியேற்றவாசிகளுக்காக உருவாக்கப்பட்ட காலனியச் சிங்கப்பூரின் ஒரு பிரிவே சூலியா காம்பொங். இது சிங்கப்பூரின் ராபிள்சு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. சூலியா காம்பொங் நெருக்கடி மிக்கதாகி நிலத்துக்கான போட்டி அதிகரித்தபோது, பல தமிழர், இன்று லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியில் குடியேறினர். இன்று சூலியா காம்பொங் ஒரு தனிப் பகுதியாக இல்லை.
லிட்டில் இந்தியா, முன்னர் தமிழ் குற்றவாளிகளுக்கான குடியிருப்பைச் சுற்றி உருவானது. செராங்கூன் ஆற்றை அண்டி இருந்தமையால் அக்காலத்தில் கால்நடை வளர்ப்புக்கு ஏற்ற இடமாக இது இருந்ததுடன், இப்பகுதியில் கால்நடை வணிகமும் முக்கிய செயற்பாடாக விளங்கியது. தொடர்ந்து பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளும் வளர்ச்சியுற்றன. 20 ஆம் நூற்றாண்டு தொடங்கும்போது, இந்தப் பகுதி ஒரு தமிழ் இனக் குடியிருப்புப் பகுதியாகத் தெரியத் தொடங்கிவிட்டது.