உள்ளடக்கத்துக்குச் செல்

லவ்லி ஆனந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லவ்லி ஆனந்து
உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்ரமா தேவி
தொகுதிசிவகர்
பதவியில்
1994–1996
முன்னையவர்சிவ்சரண் சிங்
பின்னவர்இரகுவன் பிரசாத் சிங்
தொகுதிவைசாலி
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2005–2005
முன்னையவர்புவனேசுவர் சிங்
பின்னவர்கயேனேந்திர குமார் சிங்
தொகுதிபாரூக்
பதவியில்
1996–2000
முன்னையவர்வீரேந்திர குமார் சிங்
பின்னவர்பீம் குமார் யாதவ்
தொகுதிநபிநகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 திசம்பர் 1966 (1966-12-12) (அகவை 57)
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்ஆனந்த மோகன் சிங்
பிள்ளைகள்சேதன் ஆனந்த் சிங், சுர்பை ஆனந்த், அன்சுமன் ஆனந்த்
வாழிடம்பட்னா

லவ்லி ஆனந்து (Lovely Anand) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையின் 10வது அவையின் உறுப்பினர் ஆவார். இவர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் ஸ்ரீராமேசுவர் பிரசாத் சிங்கின் பேத்தி ஆவார்.

இவரது தாயின் உறவினர் மாதுரி சிங் என்பவர் 1980களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால் இவரும் நன்கு அறியப்பட்ட அரசியல் பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர் ஆவார். ஆனால் இவரது அரசியல் வாழ்க்கை இவரது கணவர் ஆனந்த் மோகன் சிங் நிறுவிய புதிய பீகார் மக்கள் கட்சியின் வேட்பாளராகத் தொடங்கியது.[1] லவ்லி ஆனந்த், பீகார் முன்னாள் முதல்வர் சத்யேந்திர நாராயண் சின்காவின் மனைவியும் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான கிஷோரி சின்ஹாவை தோற்கடித்தார். இந்த வெற்றியானது 1994ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு பீகார் தொகுதியான வைசாலி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் மூலம் இவருக்கு கிடைத்தது.[2] ஆனால் 1996இல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்[3] மற்றும் 1999இல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டபோது வெற்றி பெற முடியவில்லை.[4]

ஆனந்து இருமுறை பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருமுறைத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஒருமுறை பார்த் தொகுதியிருந்தும் மறுமுறை நபிநகர் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்றார்.[5]

இவரது கணவர் ஆனந்த் மோகன் சிங் ஆவார். இவர்களது திருமணம் 1991ஆம் ஆண்டில் நடைபெற்றது.[6] 1994 இடைத்தேர்தல் வெற்றிக்குக் காரணமானவர்,[3] தேர்தல் தகராறு காரணமாக நிகழ்ந்த கொலையினால் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.[7] ஆனந்து மோகன் சிங் இரு முறை (1996 மற்றும் 1998) சிவஹார் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். இந்திய தேசிய காங்கிரசு இவரைப் புறக்கணித்ததால்,[3] கட்சி மாறியதாகக் கூறினார். 2009 இந்தியப் பொதுத் தேர்தல்[8] மற்றும் 2010 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆலம் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற இவரால் முடியவில்லை[9]

2015ல் ஆனந்து இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சியில் சேர்ந்து சேஹார் தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவர் சுமார் 400 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.[10] 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

ஆனந்த் தனது கணவனின் அப்பாவி என்றும் அரசியல் சதியின் காரணமாகச் சிறையிலிருப்பதாகவும், தொடர்ந்து கூறி, அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறார்.[3][8] இவர், தனது கணவர் அரசியல் சதிக்குப் பலியானவர் என்றும் அவர் ஒருபோதும் குற்றவாளியோ அல்லது கும்பல் தலைவராகவோ இருந்தது இல்லை என்றும் கூறினார்.[11] 2007ஆம் ஆண்டில் இவர் ஜனதா தளம் கட்சியின் உறுப்பினராக இருந்தபோது இவரது கணவர் இதே வழக்கில் வேறு சிலருடன் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் பின்னர் பிணை பெற்றார்.[12][13]

ஆனந்து ராஞ்சி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் சேத்தன் ஆனந்த்தும் அரசியலில் ஈடுபட விருப்பம் விருப்பம் தெரிவித்துள்ளார்.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bihar's biwi brigade". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
  2. Gupta, Smita (15 October 2007). "Pinned Lynch". Outlook. PTI. http://www.outlookindia.com/article/pinned-lynch/235751. பார்த்த நாள்: 2015-06-07. 
  3. 3.0 3.1 3.2 3.3 Kumar, Piyush (5 May 2014). "Don's wife, the lone warrior in battle of mighty - 'Neglected' by Congress, Anand Mohan's spouse Lovely seeks votes on Samajwadi Party ticket". The Telegraph. https://www.telegraphindia.com/states/bihar/don-s-wife-the-lone-warrior-in-battle-of-mighty-neglected-by-congress-anand-mohan-s-spouse-lovely-seeks-votes-on-samajwadi-party-ticket/cid/180486. பார்த்த நாள்: 2019-01-19. 
  4. "Bahu woos Saharsa voters". The Tribune. 22 February 2000. http://www.tribuneindia.com/2000/20000222/nation.htm. பார்த்த நாள்: 2015-06-10. 
  5. "10th Lok Sabha members". Lok Sabha Secretariat, New Delhi. Archived from the original on 8 June 2015. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
  6. St Das, Anand (20 October 2007). "Law's Arm: 13 Years Long". Tehelka இம் மூலத்தில் இருந்து 10 June 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150610131126/http://archive.tehelka.com/story_main34.asp?filename=Ne201007LAW.asp. பார்த்த நாள்: 2015-06-07. 
  7. "Supreme Court upholds life term for ex-MP in DM murder case". The Hindu. 11 July 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/supreme-court-upholds-life-term-for-exmp-in-dm-murder-case/article3625609.ece. பார்த்த நாள்: 2015-06-07. 
  8. 8.0 8.1 Parashar, Sachin (23 April 2009). "Did Lovely fake birth date to become MP?". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/Did-Lovely-fake-birth-date-to-become-MP/articleshow/4436605.cms. பார்த்த நாள்: 2019-01-19. 
  9. "Bihar - Alamnagar". Bihar Assembly Elections Nov 2010 Results. Election Commission of India. Archived from the original on 2010-11-27.
  10. "Lovely Anand Joins HAM". United News of India. 29 July 2015. http://www.uniindia.com/news/other/lovely-anand-joins-ham/145331.html. பார்த்த நாள்: 2019-01-19. 
  11. Donthi, Praveen (24 November 2010). "The godmothers of Bihar". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 2014-03-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140314024642/http://www.hindustantimes.com/india-news/the-godmothers-of-bihar/article1-617030.aspx. பார்த்த நாள்: 2019-01-19. 
  12. Sahay, Anand Mohan (9 October 2007). "DM murder case: Former MP Lovely Anand gets bail". Rediff. https://www.rediff.com/news/2007/oct/09bihar.htm. பார்த்த நாள்: 2019-01-19. 
  13. "Top RJD leader meets convicted don-turned-politician Anand Mohan in Bihar jail". New Indian Express. 2 February 2018. http://www.newindianexpress.com/nation/2018/feb/02/top-rjd-leader-meets-convicted-don-turned-politician-anand-mohan-in-bihar-jail-1767325.html. பார்த்த நாள்: 2019-01-19. 
  14. Vikram, Kumar (24 August 2015). "Leaders lobby for their kids as Bihar election approaches". India Today. https://www.indiatoday.in/mail-today/story/leaders-lobby-for-their-kids-as-bihar-election-approaches-289851-2015-08-24. பார்த்த நாள்: 2019-01-19. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லவ்லி_ஆனந்து&oldid=4042612" இலிருந்து மீள்விக்கப்பட்டது