உள்ளடக்கத்துக்குச் செல்

ராமகிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமகிருஷ்ணா
இயக்கம்அகத்தியன்
தயாரிப்புசிவசக்தி பாண்டியன்
கதைஅகத்தியன்
இசைதேவா
நடிப்புஜெய் ஆகாஷ்
சிறீதேவிகா
ஒளிப்பதிவுஇராஜேஷ் யாதவ்
படத்தொகுப்புலான்சி-மோகன்
கலையகம்சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
வெளியீடு24 திசம்பர் 2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராமகிருஷ்ணா (Ramakrishna) என்பது 2004 ஆம் ஆண்டைய இந்திய தமிழ் குடும்ப நாடகத்தத் திரைப்படம் ஆகும். அகத்தியன் இயக்கி, சிவசக்தி பாண்டியன் தயாரித்த இப்படத்தில் ஜெய் ஆகாஷ், சிறீதேவிகா, விஜயகுமார், வாணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவா பின்னணி இசையையும், பாடல் இசையையும் மேற்கொள்ள, ஒளிப்பதிவை ராஜேஷ் யாதவ் மேற்கொண்டார்.

கதை

[தொகு]

ராமகிருஷ்ணா ( ஜெய் ஆகாஷ் ) இந்தியாவில் பிறந்து லண்டனில் வசிப்பவர். மிகப்பெரிய கோடீஸ்வரர். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பின்னர், அவர் இந்தியா திரும்புகிறார்.

அவர் திரும்பி வரும்போது, தனது தாயார் சரண்யா ஏதோவொரு சோகத்தில் இருப்பதைக் காண்கிறார். நீண்ட காலமாக தனது குடும்ப உறுப்பினர்களுடனான உறவை இழந்துவிட்டதால் அவர் அவ்வாறு இருப்பதைத் தெரிந்துகொள்கிறார். அந்த சமயத்தில் ராமகிருஷ்ணாவுக்கு அது பெரியதாக தெரியவில்லை. ஏனெனில் அவர் செல்வந்தர், மேலும் அன்புசெலுத்த தனது தாயை தனது அருகிலேயே கொண்டிருந்தார்.

திடீரென்று சரண்யாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விடுகிறார். தனது தாயின் அன்பையும் பணத்தையும் தவிர வேறு எதையும் பார்த்திராத ராமகிருஷ்ணா, அன்புக்காக ஏங்குகிறார். அவர் தனது தாயார் முன்பு குறிப்பிட்ட கிராமத்தில் நீண்டகாலமாக தொடர்பற்று உள்ள தனது உறவினர்களைத் தேடுகிறார்.

அவர் உண்மையான அன்பை உணர விரும்புகிறார். எனவே அவர் ஒரு சாதாரண ஏழை போன்று கிராமத்தின் தலைவரான விஜயகுமாரின் வீட்டில் ஒரு வேலைக்காரனாக சேர்கிறார். பின்னர் விஜய்குமார்தான் தன் தந்தை என்பதைக் கண்டுபிடித்து, அதற்காக மகிழ்ச்சியடைகிறார். விஜய்குமாரும் தனது மகனைத் திரும்பக் கண்டதில் மகிழ்ச்சி அடைகிறார். ராமகிருஷ்ணாவை தனது மகன் என்று கிராம மக்களிடம் சொல்ல அவர் நினைத்தபோது, அவர் மாரடைப்பால் இறந்துவிடுகிறார்.

இப்போது, ராமகிருஷ்ணா தனது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக தன் உற்ற உறவை இழக்கிறார். கதையின் மீதமுள்ள பகுதி விஜய்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் ராமகிருஷ்ணாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பதை விவரிக்கிறது. ராமகிருஷ்ணாவிற்கும் பக்கத்து வீட்டு பெண் ஸ்ரீதேவிகாவுக்கும் இடையிலான திடீர் காதல் விவகாரமும் இந்த கதையின் ஒரு பகுதியாகும்.

இந்த திரைப்படம் உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும் பணம், கௌரவத்தை விட அன்பு சக்தி வாய்ந்தது என்ற உண்மையை நிலைநிறுத்துகிறது.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

ராமகிருஷ்ணா அகத்தியனும் சிவசக்தி பாண்டியனும் ஒன்றிணைந்து செயல்பட்ட மூன்றாவது படமாகும்.[1] தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் நந்தாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினர், ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்தார்.[2] இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் பல இடங்களில் படமாக்கப்பட்டது, மேலும் குலு மணாலி மற்றும் லண்டனிலும் படமாக்கப்பட்டது.[3]

இசை

[தொகு]

படத்திற்கான பாடல் இசை மற்றும் பின்னணி இசையை தேவா மேற்கொள்ள பாடல் வரிகளை அகதியன் எழுதினார்.[4] பாடல்களை தேவா, சாதனா சர்கம், பரவை முனியம்மா, கார்த்திக், உதித் நாராயண் ஆகியோர் பாடினர்.[5]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (நி.மி: கள்)
1 தத்தித் தாவிடும் ஹரிஷ் ராகவேந்திரா அகத்தியன் 05:09
2 விருப்பமில்லையா சாதனா சர்கம் 06:09
3 எனக்கு ஆம்பளைனா அனுராதா ஸ்ரீராம், உதித் நாராயண் 05:17
4 தில்லா டாங்கு தேவா 05:03
5 கொக்குச்சிக்கொக்கு சாதனா சர்கம், கார்த்திக் 05:59
6 பெய்யும்மழையம்மா தேவா, சாதனா சர்கம், கார்த்திக், பரவை முனியம்மா, சபேஷ், ஜெயலட்சுமி 07:17

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமகிருஷ்ணா&oldid=3953038" இலிருந்து மீள்விக்கப்பட்டது