சிவசக்தி பாண்டியன்
Jump to navigation
Jump to search
சிவசக்தி பாண்டியன் (Sivasakthi Pandian) என்னும் பாண்டியன் என்பவர் ஒரு தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளராவார்.[1] சென்னையைச் சேர்ந்தவரான இவர் துவக்கத்தில் திரைப்பட விநியோகத் தொழிலைச் செய்வதுவந்தார். பின்னர் சென்னை பாடியில் உள்ள சிவசக்தி என்ற திரையரங்கை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்தார். அங்கே படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களின் விமர்சனங்களைக் கொண்டு ரசிகர்களின் ரசனையை அறிந்தார். திரைப்படங்களுக்கான கதை எப்படி இருக்கவேண்டும் என்று உணரத் தொடங்கியபிறகு இவருக்கு திரைப்படங்களைத் தயாரிக்கும் ஆர்வம் ஏற்பட்ட படங்களைத் தயாரிக்கத் துவங்கினார்.[2]
தயாரித்த திரைப்படங்கள்[தொகு]
- வான்மதி
- காதல் கோட்டை
- காலமெல்லாம் காதல் வாழ்க
- காதலே நிம்மதி
- கண்ணெதிரே தோன்றினாள்
- கடல் பூக்கள்
- வெற்றிக் கொடி கட்டு
- அர்ஜுனன் காதலி
- ராமகிருஷ்ணா
- சூரியன் சட்டக் கல்லூரி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "மதுரை அன்பு புகார்: கொலை மிரட்டல் வழக்கில் சிவசக்தி பாண்டியன் கைது!". செய்தி. tamil.oneindia.com (2013 செப்டம்பர் 14). பார்த்த நாள் 11 ஆகத்து 2018.
- ↑ தமிழ்மகன் (செப்டம்பர் 29 1996). "கதைத் தயாரிப்பாளர்". தினமணிக் கதிர்: 16.