ராஜேஸ்வரி குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜேஸ்வரி ரியா குமாரி
தனிநபர் தகவல்
பிறப்பு10 திசம்பர் 1991 (1991-12-10) (அகவை 32)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதுப்பாக்கி சுடுதல்
பதக்கத் தகவல்கள்
மகளிர் துப்பாக்கி சுடுதல்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 ஹாங்சோ பொறி துப்பாக்கி சுடுதல் (அணி)

ராஜேஸ்வரி ரியா குமாரி (பிறப்பு 10 டிசம்பர் 1991) ஒரு இந்திய விளையாட்டு துப்பாக்கி சுடும் வீரர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆவார். குமாரி துப்பாக்கி சுடுதலில் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.[1][2] 2023 ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். குமாரி ஆடம்பர இந்திய ஆடை நிறுவனமான சௌரப் ராஜேஸ்வரியின் இணை நிறுவனர் ஆவார்.[3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

ராஜேஸ்வரி ரியா குமாரி 10 டிசம்பர் 1991 அன்று இந்தியாவின் டெல்லியில் பிறந்தார். குமாரி விளையாட்டு நிர்வாகி ரந்தீர் சிங் மற்றும் வினிதா சிங் கண்ணா ஆகியோரின் மகள்.[4] இவரது தாயார் வினிதா ஒரு தொழிலதிபர்.[5][6][7] இவர் விளையாட்டு நிர்வாகி மற்றும் துடுப்பாட்டக்காரர் பலீந்திர சிங்கின் பேத்தி ஆவார்.[8] குமாரி, தொழிலதிபர் விபின் கன்னாவின் தாய்வழி பேத்தி மற்றும் அவரது தாயார் வினிதா மூலம் கன்னா குடும்பத்தின் உறுப்பினராக உள்ளார். வினிதா கன்னாவின் மூத்த குழந்தை மற்றும் ஒரே மகள்.[6][9][10] இவர் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் கொள்ளுப் பேத்தி ஆவார்.[8] குமாரி மானவ் ரச்னா பல்கலைக்கழகத்தில் பயின்றார்.[11]

துப்பாக்கி சுடுதல்[தொகு]

குமாரி 2014 இல் தனது பொறி துப்பாக்கி சுடுதல் வாழ்க்கையைத் தொடங்கினார்.[2][12] நவம்பர் 2014 இல் பஞ்சாபின் பாட்டியாலாவில் நடந்த தேசிய பொறி துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஸ்ரேயாசி சிங்கை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.[12] இவர் பிப்ரவரி 2015 இல் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 63வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் போட்டியின் போது, 125க்கு 118 புள்ளிகளை எடுத்து தேசிய சாதனை படைத்தது பின் இறுதி போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.[13] 2021 இல், புதுதில்லியில் நடந்த ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.[14] 2021 இல், எகிப்தின் கெய்ரோவில் 2021 துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் பொறி துப்பாக்கி சுடுதல் நிகழ்வில் கீர்த்தி குப்தா மற்றும் மனிஷா கீர் ஆகியோருடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[1]

2022 இல் நடந்த தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் போட்டியில், குமாரி தகுதிச் சுற்றில் 125 இல் 116 புள்ளிகளை எடுத்தார், இருப்பினும் அவர் போட்டியின் அரையிறுதியில் தோற்றார்.[15][16] மார்ச் 2023 இல் தோஹா, கத்தாரில், துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் குமாரி 107 புள்ளிகளை எடுத்து 46 வது இடத்தைப் பிடித்தார்.[17] ஏப்ரல் 2023 இல் குமாரி டெல்லியில் நடந்த பொறி துப்பாக்கி சுடுதல் தேசிய தேர்வு சோதனைகளில் வென்றார்.[18] மே 2023 இல், குமாரி 2023 கெய்ரோ துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் 14வது இடத்தைப் பிடித்தார்.[19][20]

ஜூன் 2023 இல், மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நடந்த 4வது தேசிய துப்பாக்கி சுடுதல் தேர்வு சோதனையின் இறுதிப் போட்டியில் குமாரி 111 புள்ளிகளை பெற்றார், மேலும் ஹாங்சோவில் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார்.[21][22][23] ஆகஸ்ட் 2023 இல், அஜர்பைஜானின் பாகுவில் நடந்த துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன் போட்டியில் குமாரி ஐந்தாவது இடத்தைப் பிடித்தார், மேலும் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடக்க இருக்கும் கோடைகால ஒலிம்பிக்கில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் நிகழ்வில் ஒரு ஒதுக்கீட்டு இடத்தை வென்றார்.[24][25] 2024 ஆம் ஆண்டுக்கான ஏழாவது கோடைகால ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவுக்கான ஒலிம்பிக் ஒதுக்கீட்டை வென்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி என்ற பெருமையை குமாரி பெற்றார்.[25][26] அக்டோபர் 2023 தொடக்கத்தில், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பொறி துப்பாக்கி சுடுதல் போட்டியில் குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.[27][28] அக்டோபர் 2023 இன் இறுதியில், தென் கொரியாவின் சியோலில் நடந்த 2023 ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன் போட்டியில் 7வது இடத்தைப் பிடித்தார்.[29] நவம்பர் 2023 இல், குமாரி 2023 இந்திய தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.[30]

வணிக வாழ்க்கை[தொகு]

2021 ஆம் ஆண்டில், குமாரி தனது குழந்தைப் பருவ நண்பரான சௌரப் அகர்வாலுடன் இணைந்து பாரம்பரிய பாட்டியாலா பாணியை அடிப்படையாகக் கொண்ட சௌரப் ராஜேஸ்வரி என்ற சொகுசு இந்திய ஆடை பிராண்டை நிறுவினார்.[3] சௌரப் ராஜேஸ்வரியின் ஆடைகள் கையால் செய்யப்பட்டவை.[3] இந்த பிராண்டின் ஆடையை பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அணிந்துள்ளார்.[31] டிசம்பர் 2022 இல், ஜஸ்பிர் ஜாஸ்ஸியின் 'லெஹெங்கா' பாடலில் குமாரி இடம்பெற்றார்.[32][33]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

குமாரி மெஹ்தாப் சிங்கை 2013 இல் மணந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 PTI (4 March 2021). "Indian women's trap team settles for silver in ISSF World Cup". The Times of India இம் மூலத்தில் இருந்து 5 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210305030513/https://timesofindia.indiatimes.com/sports/more-sports/shooting/indian-womens-trap-team-settles-for-silver-in-issf-world-cup/articleshow/81335490.cms. 
  2. 2.0 2.1 2.2 Prasad, Vishnu (3 February 2015). "Like Father, Like Daughter". The New Indian Express. Archived from the original on 23 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
  3. 3.0 3.1 3.2 Khanna, Anshu (2021-12-02). "HANDCRAFTED AND HERITAGE DRIVEN: THIS LABEL FROM THE HOUSE OF PATIALA RECREATES GRANDEUR OF REGAL PUNJAB". The Daily Guardian (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 19 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
  4. 4.0 4.1 Dasgupta, Piyali (15 November 2013). "Raja Randhir Singh from the royal family of Patiala decks up to host their daughter's wedding". The Times of India. Archived from the original on 10 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
  5. "Vinita Singh". The Company Check. Archived from the original on 14 March 2023. பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.
  6. 6.0 6.1 TNN (9 December 2006). "Arms dealer in fresh trouble over foreign funds". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 14 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
  7. Bali, Etti (11 February 2019). "A Gala Golf Affair With Royal Touch". PressReader. Archived from the original on 17 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-17.
  8. 8.0 8.1 HT Correspondents (2015-05-20). "With Ria, Patiala royal family extends its rich sporting legacy". Hindustan Times (in ஆங்கிலம்). Archived from the original on 10 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
  9. Jain, Madhu (15 May 1997). "Indian industrialists choose to represent diplomatic interests of other countries". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 4 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.
  10. "Nagindra Khanna - Times of India". The Times of India (in ஆங்கிலம்). 3 July 2012. Archived from the original on 24 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-06-14.
  11. "Alumni Achievers – Manav Rachna Vidyanatariksha". Archived from the original on 26 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-11-26.
  12. 12.0 12.1 "Snehlata wins trap gold" (in en-IN). 16 November 2014. https://www.thehindu.com/sport/other-sports/snehlata-wins-trap-gold/article6603666.ece. 
  13. "NRAI confirms Rajeshwari Kumari's women's trap national record". 2019-11-19. https://www.business-standard.com/article/pti-stories/nrai-confirms-rajeshwari-kumari-s-women-s-trap-national-record-119111901041_1.html. 
  14. "OCA » Ria Kumari follows in footsteps of dad and Indian shooting legend Raja Randhir Singh". Olympic Council of Asia. 1 February 2021. Archived from the original on 4 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.
  15. Team Sportstar (2022-11-28). "Indian sports news wrap, November 28". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). Archived from the original on 30 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.
  16. Srinivasan, Kamesh (2022-11-29). "Arjun Babuta wins men's 10m rifle gold medal at Indian shooting national championships, Vivaan Kapoor wins men's trap gold in shotgun". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). Archived from the original on 30 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.
  17. Scroll Staff (12 March 2023). "Shooting World Cup: Prithviraj Tondaiman wins men's trap bronze in Doha shotgun event". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 15 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-15.
  18. Scroll Staff (2023-04-19). "Shooting: Manavjit Singh Sandhu, Rajeshwari Kumari win shotgun trap trials". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 8 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.
  19. ANI (4 May 2023). "Bhowneesh, Prithviraj, Rajeshwari in line to qualify at Cairo". ANI. Archived from the original on 14 May 2023. பார்க்கப்பட்ட நாள் 20 May 2023.
  20. Chettiar, Ronald (30 April 2023). "ISSF Shotgun World Cup Cairo 2023: India's Mairaj Ahmad Khan and Ganemat Sekhon win skeet mixed team gold medal". Olympics. பார்க்கப்பட்ட நாள் 20 May 2023.
  21. Gomesh S (19 June 2023). "Rajeshwari Kumari primed to follow father's footsteps". The New Indian Express. Archived from the original on 23 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.
  22. Ansari, Aarish (6 May 2022). "Asian Games 2022 in China postponed to 2023". Olympics. Archived from the original on 27 June 2022. பார்க்கப்பட்ட நாள் 19 June 2023.
  23. Sports Bureau (2023-06-18). "National shotgun selection trials" இம் மூலத்தில் இருந்து 23 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230623143655/https://www.thehindu.com/sport/prithviraj/article66983089.ece. 
  24. PTI (2023-08-24). "Trap shooter Rajeshwari Kumari earns India its seventh Olympic quota" இம் மூலத்தில் இருந்து 6 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231206200154/https://timesofindia.indiatimes.com/sports/more-sports/shooting/trap-shooter-rajeshwari-kumari-earns-india-its-seventh-olympic-quota/articleshow/103032015.cms?from=mdr. 
  25. 25.0 25.1 Scroll Staff (2023-08-25). "Shooting World C'ships: Trap shooter Rajeshwari Kumari wins a seventh 2024 Olympic quota for India". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 24 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-08-25.
  26. Nalwala, Ali Asgar (24 August 2023). "ISSF World Championships 2023: Rajeshwari Kumari secures India's seventh Paris 2024 Olympics quota in shooting". Olympics. பார்க்கப்பட்ட நாள் 25 August 2023.
  27. IANS (1 October 2023). "Asian Games: Patiala royal family's Rajeshwari Kumari emulates father Randhir Singh by winning silver in Trap team competition". The Tribune. Archived from the original on 2 October 2023. பார்க்கப்பட்ட நாள் 1 October 2023.
  28. India Today Sports Desk (1 October 2023). "Asian Games 2023: India win silver in women's trap team event in shooting". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 6 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-10-11.
  29. Nalwala, Ali Asgar. (30 October 2023). "Asian Shooting Championships 2023: Anish Bhanwala secures Paris 2024 Olympic quota for India". Olympics. பார்க்கப்பட்ட நாள் 3 November 2023.
  30. PTI (9 November 2023). "National Games Of India 2023: Maharashtra Top Medal Tally For First Time Since 1994; Services Sports Control Board Finish Second". Outlook. Archived from the original on 10 November 2023. பார்க்கப்பட்ட நாள் 12 November 2023.
  31. Balani, Ayushi (2022-10-14). "Katrina Kaif, Sonam Kapoor to Shilpa Shetty - The Best Celeb Looks on Karwa Chauth 2022". Pinkvilla (in ஆங்கிலம்). Archived from the original on 23 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
  32. Tarar, Aditya (2022-12-10). "Trending news: 'Dil Le Gayi' fame Jasbir Jassi's new track 'Lehnga' created a buzz, the song is composed in collaboration with sports shooter Rajeshwari Kumari". Hindustan News Hub (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 29 December 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.
  33. Newsroom Odisha Network (2022-12-07). "'Dil Le Gayi' fame Jasbir Jassi drops new track in collaboration with Rajeshwari Kumari". News Room Odisha (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 29 December 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஸ்வரி_குமாரி&oldid=3904027" இலிருந்து மீள்விக்கப்பட்டது