ய. வெ. ச. சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ய. வெ. ச. சௌத்ரி
ரே படத்தின் படபிடிப்பில் சௌத்ரி
பிறப்புயலமஞ்சிலி வெங்கட சத்யநாராயண சௌத்ரி
குடிவாடா[1]
பணி
  • screenwriter
  • film director
  • film producer
  • film distributor
  • film exhibitor
  • music label owner
செயற்பாட்டுக்
காலம்
1998 – தற்போது வரை

யலமஞ்சிலி வெங்கட சத்யநாராயண சௌத்ரி (Yalamanchili Venkata Satyanarayana Chowdary) தெலுங்குத் திரைப்பட எழுத்தாளரும், இயக்குநரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், கண்காட்சியாளரும், இசை நிறுவன உரிமையாளரும் ஆவார். 1998 ஆம் ஆண்டு "கிரேட் இந்தியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்" என்ற பதாகையின் கீழ் நாகார்ஜுனா தயாரித்த ஸ்ரீ சீதா ராமுலா கல்யாணம் சூதமு ராரண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு நாகார்ஜுனா, நந்தமுரி ஹரிகிருஷ்ணா நடித்த சீதாராம ராஜு படத்தையும், மகேஷ் பாபு நடித்த யுவராஜ் படத்தையும் இயக்கினார். பின்னர் இவர், "பொம்மரில்லு வாரி" என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். லஹிரி லஹிரி லஹிரிலோ என்ற படத்த தயாரித்து இயக்கினார். பின்னர் சீதையா, தேவதாசு, ஒக்க மொகாடு, சலீம், ரே ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் சலீம் மட்டுமே இவரது தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வராத படம். [2] இதுவரை ஒன்பது படங்களை இயக்கியுள்ளார். 2012 இல், குணசேகரின் இயக்கத்தில் ரவி தேஜா மற்றும் தீக்‌ஷா செத் [3] நடித்த நிப்பு படத்தைத் தயாரித்தார். [4] [5]

என். டி. ராமராவ் அவர்களால் ஈர்க்கப்பட்டு தெலுங்கு திரையுலகில் நுழைந்ததாக சௌத்ரி கூறுகிறார். இவர் தனது முதல் படமான சிறீ சீதா ராமுல கல்யாணம் சூதமு ராராண்டி (1998), ஆதித்ய ஓம் மற்றும் அங்கீதாவுடன் லஹிரி லஹிரி லஹிரிலோ (2002), ராம் போதினேனி மற்றும் இலியானாவுடன் தேவதாசு (2006), சாய் தரம் தேஜ் மற்றும் வெங்கட், சாந்தினி மற்றும் சந்து உட்பட பல்வேறு நடிகர்களை அறிமுகப்படுத்தினார். சாய் தரம் தேஜின் இரண்டாவது படமான பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம் (2014) ரே படத்தை விட முன்னதாகவே வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Y.V.S. Chowdary". 18 July 2005. பார்க்கப்பட்ட நாள் 28 January 2019.
  2. "Saleem announcement". பார்க்கப்பட்ட நாள் 1 February 2019.
  3. "Deeksha Seth in 'Nippu' – Telugu Movie News". IndiaGlitz. பார்க்கப்பட்ட நாள் 2012-08-01.
  4. "Y.V.S. Chowdary". பார்க்கப்பட்ட நாள் 6 May 2019.
  5. "Interview with YVS Chowdary". பார்க்கப்பட்ட நாள் 1 February 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ய._வெ._ச._சௌத்ரி&oldid=3819670" இலிருந்து மீள்விக்கப்பட்டது